இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதங்களும் அதிசயங்களும் அடங்கி உள்ளன.
அது போல் மனிதர்களும் எவ்வளவோ! விதமானவர்களாக இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள். வேறு சிலரோ ஏழைகளாக இருக்கிறார்கள்.
படித்தவர், படிக்காதவர், கருப்பர், சிவப்பர் என்ற நிற வேறுபாடு. பற்று உள்ளவர், பற்றற்றவர் இப்படி ஆண்டவனின் படைப்பின் ரகசியம் எதுவாக இருக்கும்? இப்படி…… எத்தனையோ! மாறுபாடுகள் இருந்தாலும்.
ஒன்றில் மட்டும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அது தான் “ஆசை!” இந்த ஆசை இருப்பதால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘நான்’ என்ற அகந்தை உருவாகி….
தனக்கு உண்பதில் ஆத்ம சுகம் என்பவர் உண்டு. வேறு சிலர் சங்கீதத்தில் சுகம் காண்பவர் உண்டு. சிலர் உறங்குவதிலும், வேறு சிலர் தேக சுகம் காண்பதிலும் ஆத்ம திருப்தி காண்பார்கள்.
இவைகள் அனைத்தும் சில காலங்களுக்கு இன்பமாக இருக்குமே தவிர நிலையான இன்பம் அல்ல. அவ்வாறு நாம் நினைப்பது தவறு.
ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதில் தான் சுகமே இருக்கிறது. உலகம் இன்பங்களில் பற்றுவைத்து அவைகளைப் பிரிய நேரும் போது துன்பமும். அதிக பற்று வைத்த பொருளை வெறுக்கும் நிலையும் உருவாகும். எனவே,
ஆரம்பத்தில் இருந்து உலக இன்பங்களில் அதிகப்பற்று இல்லாமல் வாழ முற்படும்போது… இறைசக்தி ஏற்பட்டு வாழ்வில் வளம் சேர்க்கும்.
நாம் உழைக்கிறோம்! நாம் பணம் சம்பாதித்து சந்தோசமாக இருக்கிறோம்!. இதில் இறைவன் வந்து என்ன செய்கிறான் ?என எண்ணுபவர்களும் உண்டு.
நமக்கு புத்தியையும், செல்வத்தையும் கொடுக்க வல்லவன் இறைவன். என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நம்முடைய புத்தி சரியான பாதையில் சென்றால் தான் நாம் சுகமாக இருக்க முடியும். இதை எடுத்துக்காட்ட புராண காலத்தில் கதை ஒன்று சொல்லப்படுவதும் உண்டு.
ஒரு சமயம் லட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் வாக்குவாதம் வந்தது. யார் ?உயர்ந்தவர் என்ற கருத்து வேறுபாடே அந்த வாதத்திற்கு காரணம்.
சரஸ்வதியை நோக்கி லட்சுமி உன்னுடைய அனுக்கிரகத்தால் பலரும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் இருக்கிறவர் இருக்கிறார்கள்.
என்னுடைய அனுக்கிரகம் பெற்றவர்களோ செல்வந்தர்களாக செல்வ செழிப்பில் வாழ்கிறார்கள். படிப்பு வாசம் இல்லாத ஒருவன் கூட என் அனுக்கிரகத்தால் லட்சாதிபதியாகி விடுவான். உன் கிருபை தேவை இல்லை என்றால் லட்சுமி தேவி.
அதைக்கேட்ட சரஸ்வதி தேவி சரி .ஒரு படிப்பில்லாத ஒரு மனிதனுக்கு அனுக்கிரகம் செய் என்ன நடக்கிறது என்பதை கவனிப்போம். என்றால் சரஸ்வதி தேவி.
அவ்வாறே படிப்பறிவு சிறிதும் இல்லாத மனிதன் ஒருவனுக்கு லட்சுமி கடாட்சம் ஏற்பட செய்தாள் லட்சுமி தேவி.
அவனும் பெரிய செல்வந்தன் ஆனான். ஒருநாள் தான் கட்டிய வீட்டின் பத்தாவது மாடிக்குச் சென்ற அவன் அங்கிருந்து கீழே அழகாக தெரிந்த ஊரைப் பார்த்தான்.
இந்த பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது அவனுக்கு .உடனே, கீழே குதிக்கலாம் என்ற எண்ணத்தில் நினைத்துக் கொண்டிருந்தான்.
இவனை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி இடம் சரஸ்வதி இவ்வாறு கூறினாள் நீ அனுக்கிரகம் செய்தது பிரமாதம். ஆனால்,
அவன் கீழே விழுந்து உயிரை விடப் போகிறான். உன் பணம் அவனைக் காப்பாற்றாது. இப்போது உன்னால் முடியாது என்று நீ ஒப்புக் கொண்டு விட்டால். நான் அவனைக் காப்பாற்றுவேன் என்றாள்.
லட்சுமியும் வேறு வழி இல்லாமல் ஒப்புக்கொண்டாள்.
சரஸ்வதி தேவி அவன் மனதில் நல்ல புத்தியைக் கொடுக்க அவன் உடனே தன் முட்டாள் தனத்தை உணர்ந்து. கீழே குதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தான்.
இக்கதை எதற்காக கூறப்படுகிறது. என்றால், இறைவி தக்க சமயத்தில் அற்புதங்களை நடத்தி மக்களை காக்க அனுக்கிரகம் தருகிறாள். என்பதை இக்கதை நமக்கு விளக்குகிறது.