ஓங்கார நாதத்தின் உற்பொருளாம் முதற்கடவுளாம் மூத்த கடவுள் விநாயகர். தொழுது வணங்கிய பின்பு எக்காரணத்தையும் செய்வது இந்துக்களின் மரபு.
“விநாயகரை மட்டும் ஏன் முதல் கடவுள் என்கிறோம் ?என மனதில் எண்ணத் தோன்றும். எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்களே! என எண்ண அலைகள் விரியும்.
‘ விநாயகர்’ என்பதை நாம் சற்று ஊன்றி கவனித்தால் உண்மை புரியும். விநாயகர் என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.’வி’ என்றால் இல்லை என்று பொருள்.
தனக்கு மேல் எந்த கடவுளும் இல்லை. எனப் பொருள் தனக்குள்ளே அடக்கி ‘விநாயகராக’ காட்சி தருகிறார். என்பதே புராணங்கள் எடுத்துரைக்கிறது.
சிவ பக்தர்கள் பேனாவை எடுத்தவுடன் ‘உ ‘என்ற பிள்ளையார் ‘சுழி’ போட்டு எழுத துவங்குவார்கள். பிள்ளையார் சுழிக்குள் என்ன இருக்கிறது அப்படி ?
‘உ’வாகிய உகரம் போடுவதால் உலக நாயகனே உன்னுள் நான் அடக்கம். என்று நாம் இறைவனை சரணாகதி அடையும் போது…
நமக்குள் இருக்கும் அகங்காரம் அடங்கி இறையருள் பரிபூரணமாக வெளிப்பட்டு நமக்கு நற்செயல்கள் நடக்க அருள்வான்.
விநாயகரை வழிபடும் போது மற்றொரு சிறப்பு நமக்கு புலப்படும். மற்ற கடவுளுக்கு இல்லாத ஒரு தனி சிறப்பு விநாயகருக்கு உண்டு.
மண்ணால் சிலை வடித்து சிறப்பாக வழிபட்டு, கடல் நீரில் அல்லது குளம், ஆறு, கிணறு என்று கரைக்கிறோம்.
இந்து மதம் என்ற நூலில் கவிஞர் கண்ணதாசன் ஒன்றை குறிப்பிடுவார். மனம் ஒருமைப்படுத்த வேண்டுமா? நீ குரங்கை நினைப்பாய் என்றால் குரங்கை நினைத்துக் கொள்.
இல்லை மற்ற எதுவாக இருந்தாலும் ஒன்றை நினைத்து கட்டுப்படுத்து. நீ கட்டுப்படுத்தும் பொருள் குரங்காய் இருப்பதைவிட கடவுளாய் இருந்தால் நோய்க்கு, நோயும் தீரும் பிறவிக்கு மோட்சம் கிட்டும் என்பார் .
அதுபோல் வெறும் மண்ணை வணங்கி வழிபடுவதை விட கடவுளாய் வடித்து வழிபடும்போது பிறந்த மண்ணையும் வணங்குகிறோம். பிறவிக்கு கடவுளையும் வணங்குகிறோம்.
இதைத்தான்” ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்றார்களோ !”நமது மூத்தவர்கள் என்று வியக்கத் தோன்றுகிறது .
விநாயகரை முதல் கடவுள் என்று தெரிந்து கொண்டாம்.
அவர் மட்டுமா முதல்? “அவருக்கு அணிவிக்கும் அருகம்புல்லும் முதல் தானே!”
உலகம் தோன்றிய போது முதலில் தோன்றியது புல் தானே! அப்புல்லே… முதல் கடவுளுக்கு உகந்த பூஜை பொருளாகி விட்டது.
எல்லா கடவுளுக்கும் நான்கு கரம் என்றால் ஐந்து கரம் கொண்டவர் விநாயகர். அது எப்படி? ஐந்து கரம் எனப் பார்த்தால் அவர் முகத்தில் உள்ள “தும்பிக்கை’ தான் அந்த ஐந்தாவது கரம் .
அந்த ஐந்தாவது கரம் ஏன் கொன்றார் என சிந்திக்கும் போது சில உண்மைகளையும் அதற்குள் அடக்கித் தான் வைத்திருக்கிறார்.
காட்டில் உள்ள விலங்குகளின் பெரிய உருவம் யானை. கடவுள்களில் பெரிய உருவம் விநாயகர். உருவ ஒற்றுமையுடன், மற்ற விலங்குகளுக்கு எல்லாம் ‘கால்’ மட்டும் தான் இருக்கிறது. யானைக்கு மட்டும்தான் ‘கை’ இருக்கிறது.
அந்த தும்பிக்கையான். மேல் நம்பிக்கை வைத்து நம்பியவர் வாழ்வில் நல்வழி காட்டுவார் என்பதை உணர்த்தவே அந்த ஐந்தாவது ‘கை’ வைத்துக் கொண்டார்.
வழிபட்ட பின் கரைப்பது விநாயகர் கடவுளை மட்டுமே! ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் .என எண்ணினால் அப்போதுதான் நமது ‘பிறப்பை’ அவர் உணர்த்துகிறார்.
ஒருவன் பிறப்பதும் மண்ணில். இறந்த பின் அடங்குவதும் இம்மண்ணில் என்பதை உணர்த்தவே, தானே உருவமாகி வழிபாட்டுக்கு பின் கரையவும் செய்கிறார்.
உயிர் இருக்கும் வரை தான் உடலுக்குப் பெருமை, உயிரற்ற சடம் மண்ணில் மக்குவது எனவே, ஐந்து கரத்தான் போல் ஐம்புலன்களையும் அடக்கி வாழ்பவன்.
இறைவன் அடி சேருவான் என்ற தத்துவத்தையும் தன் வடிவில் விளக்கி காட்டுகிறார் விநாயகர். எனவே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பு உடையது.