ஐம்புலன் அடக்கம் வேண்டும் என்கின்றனர் பெரியவர்கள்.
அப்புலன் அடக்கம் இல்லாதவர்கள். துன்பமாகிய கடலில் மூழ்கி துயரத்தை அனுபவிக்க நேரிடும்.
என எச்சரிப்பதற்காகவே நமது மூதாதைகள் ஐம்புலன் அடக்கம் தேவை என மீண்டும்.. மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அவற்றை சற்று ஆய்து பார்ப்போம்.
வாய் சுவை அடக்கம்:- மீன் பிடிப்பதற்காக மீனவர் புழுவை தூண்டியில் பொருத்தி குளம், கடலில் எறிவார்கள்.
தூண்டிலில் உள்ள புழுவிற்கு ஆசைப்பட்டு. மீன் தூண்டிலில் மாட்டிக்கொண்டு உயிரைவிடம். வாய் சுவையால் மீன் உயிர் விட்டது. எனவே,
உடல் நலத்திற்கு உணவு கட்டுப்பாடு வேண்டும். அப்படி கட்டுப்பாடு இல்லாத மனிதன் துன்பத்தை அனுபவித்து நோய் வாய்ப்பட்டு இறக்க நேரும். என நம்மை எச்சரிப்பதற்கே இவ்வுவமை கூறப்பட்டு இருக்கிறது .
மெய்யடக்கம் :-பெண் யானை மீது கொண்ட சுகத்திற்காக ஆண் யானை குழியில் விழுந்து பிடிக்கப்படும்.
ஆண் யானையின் தந்தத்திற்காகவே அவை இவ்வாறு பிடிக்கப் படுகிறது.
இதுபோல சில பெண்கள் பணத்திற்காகவே சில ஆடவரை தங்கள் வலையில் சிக்க வைத்துக் கொள்வார்கள்.
அதில் இருந்து மீண்டு வரும்பொழுது உடைமைகளை இழந்து உடம்பிற்கு வேண்டாத எயிட்ஸ் போன்ற நோய்களை சம்பாதித்து இருப்பார்கள்.
மெய்யடக்கம் இன்மையால் தான் அழிவதுடன் குடும்பத்தில் இருக்கும் தனது மனைவி குழந்தைகளுக்கும் பரவச் செய்து குடும்பத்துடன் அழிவர். எனவே,தான் மூதாதைகள் மெய்யடக்கம் வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.
கண்ணடக்கம்:- கண்டதே காட்சி என கண்ணில் பட்டவைகளுக்கு எல்லாம் ஆசைப்படுபவர் உண்டு.
எது தேவை, எது தேவையற்றது என யோசிக்கக்கூட மாட்டார்கள். கடன் பட்டாவது வாங்குவார்கள்.
கடனை அடைக்க வேறு இடத்தில் கடன் வாங்குவார்கள். இப்படி கடன் பட்டு கடன்பட்டு மன நிம்மதியைத் தொலைத்து விட்டு துன்பத்தில் உலாவுவார்கள். சிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள்.
அவ்வாறு தான் விட்டில் பூச்சி ஆசைப்பட்டது. விளைவு விளக்கு ஒளியை உணவு என்று நினைத்து அதில் விழுந்து சாகும். எனவே,
முன்னோர் நாம் நலமுடன் வாழ எண்ணியே கண்ணடக்கம் வேண்டும் என கூறினார்கள்.
செவி அடக்கம்:- “காதால் கேட்டதும் பொய்” என்பதற்
கினங்க ஒரு சின்ன கதை சொல்வார்கள்.
மணி என்பவன் கருப்பாக வாந்தி எடுத்து இருக்கிறான். அதைப் பார்த்த ஒருவன் மற்றவனிடம் சென்று மணி கருப்பு… கருப்பாக வாந்தி எடுத்தான் என்று சொன்னான்.
அவன் மற்றொரு நபரிடம் போய் காக்கா நிரத்தில் வாந்தி எடுத்தானாம் மணி என்று சொல்லி இருக்கிறான் .
அவன் மற்றொருவரிடம் போய் உனக்கு செய்தி தெரியுமா? என்றிருக்கிறான்.
என்ன? தெரியாதே! சொல் என வினாவ…
மணி! காக்கா …காக்காயா! வாந்தி எடுத்தானாம் என்றானாம்.
கருப்பு நிற வாந்தி செவி வழியாகச் சென்று இறுதியில் காக்காவாக உருமாறிவிட்டது.
இதுபோல் உண்மை ஒன்று இருக்க ‘திரித்து’ விடுவதை பலவாக பேசப்படும். எனவே, செவி வழி செய்தி கூட பல நேரங்களில் பொய்மான் போல் மாயத் தோற்றத்தில் தள்ளி விட்டு விடும்.
அது எப்படி எனப் பார்ப்போம். வேடுவர் மானை பிடிப்பதற்காக வலையை விரித்துவிட்டு மறைவான இடத்தில் மறைந்து கொண்டு மான்குட்டியைப் போல் கத்துவார்கள்.
அதைக் கேட்ட மான் தன் இனம் கத்துகிறது. என்று ஓடிவந்து வலையில் மாட்டிக் கொள்ளும். எனவே, செவின அடக்கம் மிக… மிக முக்கியம்.
சுவாச அடக்கம்:- நல்ல வாசனை, கெட்ட வாசனை என உணர்வது நாசி யாகும். நல்ல வாசனை என்றால் விரும்பி சுவாசிக்கும் நாசி துர்நாற்றம் என்றால் தன்னையும் அறியாமல் மூக்கை கையால் பொத்திக் கொள்கிறோம்.
உதாரணத்திற்கு நாம் அன்றாடம் உபயோகிக்கும் சிலிண்டரில் ஒருவித வாசனை கலந்திருக்கிறார்கள் .
அவ்வாறு அவர்கள் கலக்காமல் இருந்தால் சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் தெரியாமலே போய்விடும். அதில் ஒரு வாசனை இருப்பதால்தான்…
சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட உடனே சுவாசித்து கண்டுபிடித்து விபத்து ஏற்படாமல் தடுத்து விடுகிறோம்.
ஆபத்து வராமல் தடுக்கவும் முடியும் ஆபத்தில் சிக்கிக் கொள்பவர்களும் உண்டு. ‘வண்டு போல …’மாலை நேரத்தில் தாமரைப்பூவில் நறுமணத்தில் மயங்கிய வண்டு அவற்றின் மீது அமர்கிறது.
மலர் குவியும் போது அந்த வண்டு அதற்குள் அகப்பட்டு வெளியே வர முடியாமல் உள்ளையே இறந்துவிடும். எனவே,
சுவாச அடக்கமும் வேண்டும் என முன்னோர்கள் கூறினார்கள். “மூத்தோர் சொல் கேட்டல் இனிது” எனவே,
நாம் முன்னோர்கள் சொல்படி ஐம்புலன் அடக்கி வாழ்ந்தால் உடல் ஆரோக்கியமும், மன அமைதியும் பெற்று வாழ்வில் பல வெற்றிகளைப் பெற வழி வகுக்கும்.