எக்காரணம் கொண்டும் உன்னை மறவாத
நிலைவர வேண்டாம் அக்கணமே மாயை விலகி தன்னிலை
உணரும் நிலை வேண்டும் திக்கெட்டும் தெரியும் உன் புகழ்
திகட்டாமல் இருக்க வேண்டும்
உக்கரமாக நீ ஒருபோதும் இருந்ததில்லை
சாந்த முகமே சண்முகா!
வேதம் கற்க வில்லை என்றாலும்
வேண்டும் வரம் தருபவன் சேதம் இல்லாமல் போர் செய்யும்
வீரன் தீரன் கந்தன்
பேதம் இல்லாமல் அருள் செய்யும்
கொடை வள்ளல் முருகன் நாதம் இசைக்கையில் நல்ல தமிழ்
கேட்டு மகிழும் பிரியன் !
திரியும் தயிரில் உள்ளது
பலபொருள்
உன்னுல் உலகமே இயக்கமாய்
விரிந்து பரந்து உலகின் உயிர்கள்
பிறப்பும் இறப்பும் ரகசியமாய் தெரிந்து கொள்ள முடியாத சக்தி
பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி
பிரிந்து போகும் உயிர் கூட
ஆத்ம தரிசனமாய் காலடி யில்.