கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்பார்கள். “கோபுர தரிசனம் பாப விமோசனம் அளிக்கும்” எனவும் கூறுவார்கள்.
கோபுரத்தின் உச்சி முனையில் புனிதத் தன்மை நிறைந்த கலசம் இருக்கிறது. மேல்நோக்கிப் பார்க்கும் போது அந்த கலசம் மிகத்தெளிவாக தெரியும் எனவே நம் பார்வை உயர்த்தி மேல் நோக்கி செலுத்துமாறு செய்வது கலசமாகும்.
இதன் மூலம் உயர்ந்த பார்வை ஏற்படுகிறது. அப்பார்வை மிகவும் உன்னதமானதாகும்.
பார்வை உயர…. உயர எண்ணங்கள் உயர்வடையும். எண்ணங்கள் உயர …உயர மனிதன் புனிதமாகிறான். அதனால், தெய்வீகத் தன்மையை அடைகிறான். என்பது கோபுர தத்துவமாகும்.
கோயில் கோபுரம் உயர்ந்து நிற்பதால். இறைவன் குடி கொண்டு இருக்கும் இடத்தை பறைசாற்றுவதோடு நம்முடைய வாழ்க்கையில் நாம் கொண்டுள்ள குறிக்கோளையும் உயர்த்துகின்றது. எனவே, கோபுர தரிசனம் கண்டு ஒவ்வொருவரும் வாழ்வில் உயர்வினை பெறுவோம் ஓம் முருகா! சரவணபவ.