வெயில் நூறு டிகிரியைத் தாண்டி அணல் காற்று வீசிக்கொண்டு இருந்தது சென்னை மாநகரில்.
பத்து மணியை காட்டியது கடிகாரம்.
ஆட்டோ சத்தம் அடங்கி சிறிது நேரத்தில் ஆரண் அடிக்கும் சத்தம் கேட்டது.
மருமகள் அமுதா கதவை திறந்தாள். பாட்டி என கட்டிப்பிடித்துக் கொண்டாள் பேத்தி இந்து.
ஊரில் இருந்து வந்த பாட்டி இந்துவை தூக்கி முத்தம் கொடுத்தாள்.
அமுதா செம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
தண்ணீரை குடித்த பாட்டி வெயில் தாக்கம் தணிந்தது. தணிந்தது கண்டு குளுகுளுப்பை உணர ஆரம்பித்தாள்.
வீட்டைச் சுற்றி பல ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்கள்.
பழைய குடியிருப்பாக இருந்தாலும் காற்று மாசு இல்லாமல் மரங்களில் நிழலும் காற்றும் சுகராகம் பாடியது.
சருகுகள் உதிர்ந்து குப்பையாக இருந்தாலும், காற்று சுகமாக வந்து கொண்டு இருந்தது.
மரம் வளர்ந்து இலை தளிர் முற்றி சருகு ஆனாலும் மக்கி உரமாகி பயன் தருகிறது.
சருகு என்ற குப்பையாக நினைத்தாலும் முழுமை பெற்ற இலை சருகாகி மக்களுக்கு உதவி கலகல என்று சிரிக்கிறது. இந்துவின் சிரிப்பைப் போல்