229-வான வீதிக்கு நட்சத்திர விளக்கு உடலுக்கு கண்ணே விளக்கு.
230- எண்ணம் என்பது உள்ளத்தில் ஊற்று பிறநலம் அதில் காப்பு.
231-வெற்றி என்பது எட்டா கனியல்ல உள்ளங்கை நெல்லியாய் உன்னில்.
232-பிறப்பு என்பது பூர்வீக சொந்தம் புரிந்து ஏற்றல் இனிது.
233- துன்பம் சுமையாய் அழுத்தும் போது பொறுமையாய் ஏற்றல் சுடராம்.
234- தவம் செய்ய வருந்த வேண்டாம் அன்பாய் நேசிப்பதே தவம்.