241- முயற்சி என்பது கடிகாரம் போன்றது முட்களுடன் ஓடுபவனே வெல்கிறான்.
242- உறக்கம் உடல் அசதி போக்க விழிப்பு உயர்வின் ஏணி .
243-சோம்பி இருப்பவன் சுகப்பட மாட்டான் ஆர்வம் அயராது உயர்த்தும்.
244-தொட்டால் சிணுங்கியாய் சுருங்கும் மனிதர் தொடுவது எல்லாம் சுருங்கும்.
245-பாசமெல்லாம் மனித உறவு எட்டிக்காய் பார்வைக்கு இருப்பது போன்றது.
246- கல்வி என்பது அறிவை வளர்க்க காசாக்கும் தொழிலாய் இன்று.