373-எறும்பின் சுறுசுறுப்பு ஆமையின் நிதானம் எருமையின் பொறுமை பெண்.
374- காடுவளர நாடு செழிக்கும் பெண்ணின் வளர்ச்சி சமுதாய வளர்ச்சி .
375-முடியாத கணவனும் முயற்சி செய்வான் ஆற்றலுள்ள மனைவி யாள்.
376-அதிர்ஷ்டத்தை நம்பி அமைதியாக இருந்தால் ஆற்றல் அடங்கி முடங்கும்.
377- ஆத்ம திருப்தி ஆழ்மன சந்தோசம் அடையும் மார்க்கம்
பிறநலன்.
378- தனக்காக உழைப்பவன் ஒரு மடங்கு செய்வான் பிறருக்காக உழைப்பவன் இரு மடங்கு.