சிவ மைந்தன்
தோன்றினான்-சிவன் நெற்றிக் கண்ணில்
தோன்றினான்
காலம் காலமாய்
போற்றிடலாம்-
கண்ணால்
கண்டு வணங்கிடலாம்
வடிவேலனை.
காவடி ஆடும்
சாலையில்- மனம் சேவடி பாடி
மகிழ்ந்திடும்
பாவடி தரும்
ஞானத்தில்- முருகன் காவடி தூக்கி
ஆடிடுவோம்.
ஆறுபடை வீட்டில்
முருகன் -அன்பு
வேறுபாடு இன்றி
அருள்வான்
மாறுபட்ட கருத்தை
கொண்டதால் -அசுரன் கூறு பட்டுப்
போனான்.
திருச்செந்தூர் சூரன்
சம்ஹார- விழா
வரும்பக்தர் கூட்டம்
கண்டால்
கருணை கந்தன்
மனம் -புரியும்
தரு கற்பகமாய்
வளரும்.
அலை கடலும்
வணங்கி- வரும் மலை மகளும்
காட்சிதர
தலை வணங்கி
ஆசி -பெற
உலைக் களமாய்
மனமுருகும்.
உமையவள் வேலால்
வெற்றி -வரும்
படைவீடு காத்து
நிற்கும்
தடைகள் எல்லாம்
தகர்த்து- செல்லும் கொடை உள்ளம்
காத்து நிற்கும்.
மலர் தூவி
மனம் -மகிழும் வலம் வந்து
வணங்கி நிற்கும் நலம் யாவும்
உன்- அருளால் குலம் காக்கும்
குடிகாக்கும்
கார் மேகம்
மழை- கொடுக்கும் மார்கழி மாதம்
பனி பெய்யும் பார்த்த சாரதி
மருமகன் நீ
பார் முழுவதும்
புகழிருக்கும்
பால் வடியும்
முகம் -முருகா
வேல் வெற்றி
கொடுக்கும்
மால் மகளை
மணந்தாய்- முருகா
தோகை மயிலில்
அமர்ந்தாய்
மனம் விரும்பி
காடு சென்றாய் வனம் சென்று
வள்ளி கண்டாய் தனம் வாங்கி
குறிசொன்னாள்-வள்ளி தினம் நினைத்து
மனம் புரிந்தாள்.
வாடி நிற்கும்
பக்தர்க்கு- முருகன்
கோடி நலம்
தரும் பாலன்
நாடி வரும்
பக்தர்க்கு- முருகன்
தேடி வந்து
அருள்வான்.
கூப்பிட்ட குரலுக்கு
ஓடி- வருவான்
காப்பிட்டு கந்தன்
காத்தருள்வான் பூபோட்டு உன்னை
வணங்கி வந்தால்
தாயாட்டம் தாங்கி
தோள்கொடுப்பான்.
பால் அபிஷேகம்
செய்து- வந்தோம்
பன்னீர் அபிஷேகம்
செய்து -வந்தோம்
தேன் அபிஷேகம்
செய்து- வந்தோம் பஞ்சா அமிர்தம்
படைக்கிறோம்
சந்தன அபிஷேகம்
செய்து -வந்தோம் இளநீர் அபிஷேகம்
செய்து -வந்தோம்
தயிர் அபிஷேகம்
செய்து -வந்தோம் தரணி காக்க
செய்து- வந்தோம்
கார்த்திகைபெண்களின்பிள்ளையவன்வானத்தில் கார்த்திகை நட்சத்திர
கூட்டமவன்
ஆறுமகன் ஒன்றாய்
ஆனஅவன்அன்னை அணைக்கும் பார்வதி
அன்புமகன்.
தந்தைக்கு குருவான
சுவாமி- அவன்
மந்தைமாடு மேய்த்த
சிறுவனவன்
ஔவைக்கு பழம்
கொடுத்த- அவன் சிந்தையை தூண்டிய
சிகரமவன்
முருகன் கையால்
கொட்டுப்பட்டு- பிரம்மன் முழுமை அடைந்தது
பாக்கியமே
பிள்ளை உயர்வை
கண்டு – பிரம்மன் பிரமித்து இருப்பது
வியப்பில்லை
உலகைச் சுற்றியே
வலம்- வந்து
பழத்தை வாங்க
வந்தானவன் உமாபதியைச்
சுற்றியே- பெற்றான்
மூலக் கணபதி
கணேசன்.
கோவணம் கட்டி
குன்றின்- மேலே கோபித்து நின்றாய்
தனியாக
ஞானப் பழமே
நீயப்பா- நல்லதை நாட்டுக்கு செய்ய
வந்தாயப்பா
குன்றில் தனியாக
நின்றதனால்- குமரன் குன்று இருக்கும்
இடமெல்லாம்
குமரனிருக்க அன்னை சொன்ன
அமுதமொழி -முருகன் அன்பு கொண்டான்
அதைஏற்று
கண்ணால் முருகனைக்
கண்டாலும் உள்ளம் காட்சி கண்டு
பயனடையும்
மூக்கால் திருநீற்றை
சுவாசித்தாலும்-முருகன் சுவாசத்தை தள்ளியே
போடுவானாம்
செவியால் அவன்குரல்
கேட்டாலும்- செவி
வேல் கூர்மை
பெற்றுவிடும்
கையால் அவனை
வணங்கிடவே- எழுத சக்தியைத் தருவான்
வேலன்
வாயால் அவன்
புகழ்பாட-வாழ்த்தி
வழியைக் காட்டுவான்
கந்தன்
மனதால் அவனை
நினைத்திடவே- நித்தம் மங்கலப் பொருளாய்
வந்திடுவான்
பிறவிப் பயனே
நீயப்பா- உள்ளம்
பிறந்த பயனை
அடைந்ததப்பா கடமை செய்யும்
அன்பருக்கு- உன் கருணை உள்ளம்
கிடைக்குமப்பா.