எத்தனை முறை அழைத்தாலும் வெறுப்பு
இல்லாமல் விரும்பி வருவாய்!
சித்தனே சிக்குண்டேன் உன்னிடம் முருகா!
சிறை பட்டேன்
மீளமாட்டேன்!
பித்தனைப் போல் இருந்தாலும் பரவாயில்லை!
மருந்து தின்ன மாட்டேன்!
மத்தம் தெளிய மாட்டேன் முருகன்!
மறந்தும் பிரிய மாட்டேன்!