34-திருநீர் அணிந்து இருப்பவன் நீயே!
திரு உள்ளம் நீயே! கருவில் இருந்து காப்பவன் நீயே !
கருத்தில் நிற்பவன் நீயே !
உருவில் பாலகனாய் இருப்பவன் நீயே!
உதிரத்தில் ஓடுபவன் நீயே !
தருவே தரணிபுகழ் முருகன் நீயே !
தடைகள் அகற்றுபவன் நீயே!