தானியங்களை ஒன்பதாக பிரித்தனர்.
திசைகளை எட்டாகப் பிரித்தனர் கிழக்கு, மேற்கு, வடக்கு ,தெற்கு,வடகிழக்கு, தென்கிழக்கு, வட மேற்கு, தென்மேற்கு என எட்டாகப் பிடித்தனர்.
இசையை ஏழாகப் பிரித்தனர் ச ரி க ம ப த நி என்று.
சுவையை ஆறாகப் பிரித்தனர். இனிப்பு, புளிப்பு ,உப்பு, துவர்ப்பு ,காரம், கசப்பு என்பன.
நிலத்தை ஐந்தாகப் பிரித்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என.
காற்றை நான்காகப் பிரித்தனர் கோடைக்காற்று, வாடைக்காற்று, தென்றல் காற்று, கொண்டல் காற்று எனறு நான்காகப் பிரித்தனர்.
இசையை மூன்றாகப் பிரித்தனர். இயல், இசை, நாடகம் என மூன்றாகப் பிரித்தனர்.
வாழ்வை இரண்டாக வகுத்தனர் அகம், புறம் என இரண்டு வகையாக.
“ஒழுக்கத்தை” மட்டும் ஒன்றாக வைத்தனர். அதை உயிரினும் மேலாக வைத்தனர். தமிழன் பண்பாடு அதுவே ஆகும்.