இறைவனை எந்த ரூபத்தில் வழிபடுவது என்று நமக்குள் ஒரு கேள்வி வரலாம்.
இறைவனை களிமண், கல். அல்லது உலோகம் இவற்றால் பல வடிவங்கள் செய்யும் போது அதன் சிறப்பு மதிப்பும் அதிகப்படுகிறது.
இறைவன் எங்கும் நிறைந்து காட்சி தந்தாலும், அவனுக்காக செய்யும் வடிவங்களில் அருளாட்சி செய்கிறான்.
“மண் வடிவம் பெறும் போது எப்படி சிறப்பு கிடைக்கிறதோ!” அதுபோல் இறைவன் வடிவம் கிடைத்த பின் அவன் அருள் மழை பொழிகிறான்.
“இந்த பூமியில் எப்போது எல்லாம் இறைவன் அவதாரம் எடுக்கிறான்?” எனப் பார்த்தால், எப்போது எல்லாம் தர்மம் தாழ்வடைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ! அப்போது எல்லாம் இறைவன் அவதரிக்கிறான்.
சாதுக்களை காத்து துஷ்டர்களை ஒழிப்பதற் காகவும். தர்மத்தை நிலை நாட்டவும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவன் அவதார புருசராக அபதரிக்கிறார்.
அப்படி பிறக்கும் போது அவதார ரகசியத்தை யார் ஒருவர் உணர்ந்து தெரிந்து கொள்கிறானோ! அவன் மீண்டும் இப்பூமியில் பிறப்பதில்லை.
அவன் இறைவனுக்குப் பிடித்தவனாகி அவன் பாதகமலத்தில் ஐக்கியமாகி விடுகிறான்.
அச்சம், விருப்பு, வெறுப்பு, சினம் ,ஆசை போன்றவற்றை விலக்கி இறைவனை சரணாகதி அடைந்த வரை இறைவன் ஒருநாளும் ஒதுக்கியது கிடையாது.
‘ஞானம்’ என்னும் மோட்சத்தை அடைந்து இறை பாதங்களை வந்து அடைகிறார்கள். அதற்கு தகுந்தபடி தரிசனம் கொடுக்கிறார் இறைவன்.
மானிடப் பிறப்பில் பெண்ணாசை ,மண்ணாசை, பொன்னாசை என பல ஆசைகள் நம்மை ஆட்கொண்டு அழிவு பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
இவற்றை எல்லாம் கடந்து அறவழியில் நடந்து வருபவர் மட்டுமே இறைவன் அருள்பெற்று ஞானம் என்னும் தவத்தால் மோட்சத்தை அடைகிறார்கள்.
இறையருள் பெற்ற தவசீலர்கள் எல்லா உயிர்களிடத்திலும் இறைவனை பார்ப்பதால். வெறுப்பு, விருப்பு இன்றி எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்துகிறார்கள்.
அவ்வாறு அன்பு செலுத்தும் எண்ணம் அவர்கள் இடத்தில் இருப்பதால் தனக்குத் துன்பம் செய்பவர்களையும் மன்னித்து. அவர்களிடமும் அன்பு செலுத்தி அறவழியில் நடப்பார்கள்.
எல்லா உயிர்களிடமும் இறைவனைக் காண்பதால், எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும். என எண்ணும் மன வலிமை படைத்தவராக வாழ்கிறார்கள்.
தானும் இன்புற்று பிறரும் இன்புற்று வாழ வேண்டும் என்ற கடல் போன்று பரந்த மனநிலையில் இருப்பதால் அவர்கள் பிறவி கடலில் எளிதாக நீந்தி கரை சேர்கிறார்கள்.
இதையே வாரியார் அவர்கள் கூறும்போது…
ஆசை -விலங்கு வாழ்க்கை அன்பு -மனித வாழ்க்கை
அருள் -தெய்வீக வாழ்க்கை என விளக்குகிறார் .
ஆசையை ஒழித்து எல்லா உயிரிடத்தும் அன்பு செலுத்தி ஈசனே சரணடைந்தால் அருள் ஆகிய தெய்வீக வாழ்க்கை அமைவது திண்ணம்.