தள்ளாத வயதிலும் கவிபாட வரும்போது
தளிர்வு உடலுக்கு துடிப்பு மனதிற்கு
அள்ளல் செய்தாலும் அழியாத செல்வம்
அயர்வுற்று படுத்தாலும் எழுதவைக்கும் உணர்வு உள்ளல் உவகை தரும் உறுதிக்கு
உழைக்க நிலைக்க நீண்டு வாழ
கள்ளமை இல்லா கனிவு தரும்
கற்கும் தமிழ் அன்று வேறேது?
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அச்சம் துறந்தது ஆற்றல் பிறந்தது
எச்சமாய் பாரதியின் கனவு பெண்கள்
களம் காணும் காலமும் இதுவன்றோ!
துச்சமாய் துயர்செய்த வெள்ளையனை எதிர்த்து
கப்பலோட்டி களம் கண்டவர்
வ. உ. சி
மிச்சமாய் கல்வி கற்று இலண்டனில்
காலம் போற்றும் துறைகளில் தமிழன்.
கணினியில் தொன்மை நூல்கள் படிக்க
தொல்காப்பியம் கம்ப ராமாயணம் குறள்
பணி செய்யும் வாழ்வியலுக்கு காக்க
பகுத்தறிவு தரும் பொக்கிச காப்பியங்கள்
வணிகம் செய்து வெளிநாடு சென்றனர்
தமிழ் இணைந்து சங்கத் தமிழில்
கணினி இணைப்பில் உலகத் தமிழாய்
இளமை கொண்டு நிமிர்ந்த தமிழன்.