நாம் கருணை நிறைந்தவராய் இருக்க வேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
நம் கண் முன்னால் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கஷ்டத்தை போக்கக் கூடிய சக்தி நமக்கு இருந்தால் நாம் அவர்களுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டும்.
நாம் சுயநலக்காரர்களாக இருந்து விட்டால் நம்மால் இந்த உலகிற்கு என்ன? தான் பயன்.
கருணை காட்டாத மனிதர்களை விட பிராணிகள் எவ்வளவோ மேல் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பிராணிகளால் மனிதர்களுக்கு எவ்வளவோ உதவிகள் கிடைக்கின்றன. பிராணிகள் இறந்த பின் அவற்றின் தோல் மனிதர்களுக்குப் பயன் படுகிறது.
மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் தோல் ஒன்றுக்குமே பயன்படாது. ஆகவே, நமது வாழ்க்கை பயனுள்ளதாக அமைய வேண்டுமானால்…. நாம் மற்றவர்களுக்கு கருணை காட்ட வேண்டும்.
மனிதர்களுக்குத்தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும் கூட நான் செய்தேன். என்று அகங்காரம் வரும். அந்த அகங்காரம் நிறைய தவறுகளுக்கு காரணமாக அமைந்துவிடும்.
எனக்கு எல்லாம் தெரியும் நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள். எனக்கு எது விருப்பமோ !அதை செய்வேன். என்ற எண்ணமே! எல்லா தீமைகளுக்கும் காரணமாகும்.
எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனை விட நிறைய தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
எனக்கு நிறைய’ சக்தி’ இருக்கிறது என்று சொல்பவனை விட “சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்”. இந்த உண்மை எல்லாம் அகங்காரம் உள்ளவர்களுக்குத் தெரியாது.
மேலும், அவர்கள் தாங்கள் செய்கின்ற ‘தீய ‘செயல்களை யாரும் பார்ப்பதில்லை, என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள்.
நம்முடைய செயல்களை யாரும் பார்ப்பதில்லை. என்று நினைப்பது தவறு, இங்கு ஒரு கதை பொருத்தமாக இருக்கும்.
ஒரு குருவிடம் சில சீடர்கள் கல்வி கற்க சென்றார்கள். குரு கல்வி கற்றுத் தந்தார். கடைசியில் அவர்கள் குருவைப் பிரியும் நேரம் வந்தது. அப்போது குரு அவர்களை ‘வருத்தும்’ ஒரு பரிட்சை வைத்தார்.
அனைவருக்கும் ஒவ்வொரு வாழைப்பழத்தை கொடுத்தார். யாரும் பார்க்காத இடத்தில் இந்த வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு வாருங்கள், என்றார் குரு.
ஒருவனைத் தவிர எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டார்கள்.
ஒரு சீடன் மட்டும் சாப்பிடாமல் கையில் வைத்திருந்தான். அந்த சீடினை அழைத்த குரு நீ ஏன் சாப்பிடாமல் கையில் வைத்திருக்கிறாய் எனக் கேட்டார்.
குருவை பணிவுடன் வணங்கிய சீடன். பேச ஆரம்பித்தான். குருவே! நான் எங்கு சென்று சாப்பிட நினைத்தாலும், பரம்பொருளாகிய இறைவன் இருக்கிறார்.
அவருக்குத் தெரியாமல் எப்படி இப்பழத்தை சாப்பிடுவது? எனக் குருவிடம் சொன்னான் சீடன்.
அம் மாணவனே! சிறந்த பக்திமான் என ஆசி வழங்கி சிறந்த சீடராக தேர்வு செய்தார் குரு. இதுவே பக்தியின் சிறந்த குணமாகும்.