புத்தாடை எடுக்க கடைக்கு செல்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கிறது.
அவர்…. அவர்களுக்குப் பிடித்த வண்ணத்தில் துணியை தேர்வு செய்து எடுத்துக் கொள்கிறோம்.
வண்ணம் தான் மாறுபட்டு இருக்கிறது. தவிர துணி ஒரே ரகம்தான். இதுபோலத்தான் கடவுள் ஒருவர்தான் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்த உருவத்தில் வழிபடுகிறோம்.
இறைவனை அடையும் வழி ஆறு இவைகளை ஆறு சமயங்களாக அழகுற வகுத்து நமக்கு தந்தவர் ஆதிசங்கர்.
ஏதாவது ஒரு வழியை பின்பற்றி இறை சாதனை மூலம் உள்ளத்தில் “பேரொளியான” இறைவனின் அருளால் வெற்றியும் மேலான ஆனந்தமும் பெற்று உயருங்கள். அதுவே, மனிதப் பிறப்பின் ரகசியம்.
1.காணாபத்யம்- கணபதி
2 .கௌமாரம் -முருகன்
3.சைவம் -சிவன்
4.வைணவம்- திருமால்
5 .சாக்தம்- சக்தி
6. சௌரம் -சூரியன் என ஆறு வழிகள் ஆகும்.
காணாபத்யம்- கணபதி” ஓம்” என்ற பிரணவ சொல்லின் உருவமாய் இருப்பவர் கணபதி. அவரை வழிபடும் முறையே காணபத்தியம் என அழைக்கப்படுகிறது.
“கணபதியை வழிபட்ட பின்பே ஒரு இந்து எந்த காரியத்தையும் தொடங்குவான்”.
கணபதி தான் முதல் கடவுள். அவருக்குள் எல்லா கடவுளும் அடக்கம்.
வயிற்றில்- பிரம்ம ரூபமும் முகம் – முருகன், திருமால் கண் – சிவ வடிவமும்
இடப்பாகம் -சக்தி ரூபம் வலப்பகம் – சூரிய ரூபம்
எனவே, எந்த தெய்வத்தை எண்ணி பூஜை செய்தாலும் முதலில் விக்னேஸ்வரரை வணங்குகிறோம்.
விக்கினம் என்றால் ‘தடை’ எந்த தடையும் வராது வெற்றியை கொடுக்க வல்லவன் விக்னேஸ்வரன்.
யானை முகன்- கஜபதி வளைந்த துதிக்க உடையவன் -வக்ரதுண்டர்
பானை வயிறு- லம்போதரர் எலிவாகனம் -ஆகுரதன் தடையை நீக்குபவன் -விக்னேஸ்வரர்
சித்திகொடுப்பவன்-சித்தி
தாதா
செல்வம் கொடுப்பவன்- சுவர்ண ஆகர்ஷணகணபதி வீரம் கொடுப்பவன்- வெற்றி கணபதி என… இன்னும் எத்தனையோ பெயர்களை உடையவன் கணபதி.
உடலுக்கு’ கண்’ எவ்வளவு முக்கியமோ!அதுபோல்
உலகிற்கு கணேசன் முக்கியமான முதல் கடவுள்.
நினைத்த இடத்தில் கோயில் கொள்ளும் மூர்த்தி விநாயகர். சாண பிள்ளையார்,
மஞ்சள் பிள்ளையார், அருகம்புல் பிள்ளையார், வெல்லம் பிள்ளையார்,
கல் பிள்ளையார் இவற்றில் எழுந்தருளி இருபவர் கணபதி.
எளியோரின் கடவுள் எந்த இடத்திலும் எளிமையாக கோயில் கொள்பவர். ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி இவை மூன்றிலும் இவர் அருள் முழுமையாக இருக்கும் .
ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுக்லசதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி இந்த இரண்டு நாட்களிலும் இறைவனை வழிபட்டு ஹோமம், ஜெபம் செய்தால் புண்ணியமும் மந்திர சித்தியும் கிடைக்கும். என்பது சித்தர்களின் வாக்கு ஆகும்.
“ஓம் தத்புருசாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தந்நோ தந்தி பிரசோதயாத்”
என்ற மூல மந்திரத்தை 108 முறை உச்சரித்து வணங்க எல்லாத் தடைகளும் நீங்கி செயல்களில் வெற்றி பெற முடியும்.