மார்கழி மாதம் பத்தாம் நாள்
பிரம்மா
கற்ற கல்வி வாழ
வழிகாட்டும்
கற்பிக்கும் பாடம் தொழிலுக்கு உதவும் உற்ற உறவாய் எல்லோரையும் எண்ணி
உழைப்பு என்னும் மந்திரம் சொன்னாய் பற்றற்று பகிர்ந்து கொடுத்தாய் தொழில்
படைப்பில் எல்லாம் இருப்பவனே பிரம்மா முற்றும் துறந்தாய் முழுமையாய் உழைக்க பிரபஞ்சம் படைத்தவனே உழைக்கிறோம் அருள்வாய்
விஷ்ணு
வெண்ணை உண்ட வாயால் சிரிப்பாய்
வெண் பற்கள் தெரிய சிரிப்பாய்
கண் பட்டு விடாமல் இருக்க
கடுகு மிளகாய் உப்பு சுற்றுகிறோம்
வண்ணப் பட்டு அணிந்த கண்ணா
வருவாய் நடந்து
தேர்போல் அசைந்து உண்ண உனக்கு வெண்ணை தருவோம் உள்ளம் குளிர்ந்து அருளைத் தருவாய்
சிவன்
விண்ணவர் போற்றும் சிவனேஉன்னை
விடியும் வரை விழித்து வணங்குவோம்
மண்ணவர் போற்றும் சிவனே உன்னை
மனதில் நினைத்து தவம் செய்வோம்
திண்ணமாய் உன்னை மனதில் நிறுத்தி
திடமாய் உனக்கு பணிதல் செய்வோம் கண்ணியமாக நாங்கள் வாழ காளையில்
அமர்ந்தவனே கண் திறந்து அருள்வாய்