மார்கழி மாதம் 15 ஆம் நாள்
பிரம்மா
பத்து கண்கள் உடையவனே பிரம்மா
ஏட்டில் விதியை கணிப்பாய் பிரம்மா
பத்து கரங்கள் உடையவனே பிரம்மா
எதையும் ஏற்று படைப்பாய் பிரம்மா மொத்த வாழ்க்கையை விரிவாய் எழுதி
எங்கும் நிறைந்து இருப்பவனே பிரம்மா புத்துயிர் தரும் பிரம்ம தேவா
எதையும் ஏற்று செய்ய அருள்வாய்.
விஷ்ணு
சுண்டு விரலில் மலையைத் தூக்கி
மக்களைக் காத்த கோகுலக் கண்ணா உண்டு வெண்ணை தின்னேன் என்று
சொல்ல மறுத்த திருட்டுக் கண்ணா
சீண்டி மோர் பானை உடைத்து
குடிக்கும் கண்ணா குறும்பு கண்ணா
பாண்டு ரங்கா பண்டரி நாதா
பக்தர் குரலுக்கு வருபவனே பணிகிறோம்
சிவன்
பிறை சூடிய கங்கா தரனே
பினைந்த சதைமுடி கொண்ட சிவனே
நிறை மனதுடன் உன்னை நினைக்க
நிலவின் குளிர்ச்சி தருபவனே சிவனே
குறை கூறி வந்தவர் வாழ்வில்
நிறை மதியாய் சுடர் தருபவனே
மறைத்த போதும் திரை விலகி
திருவருள் வந்து முன்னே அருளும்