மார்கழி மாதம் 17ஆம் நாள்
பிரம்மா
சத்திய உலகத்து தலைவனே பிரம்மா
சந்தனம் போன்று மணப்பவனே பிரம்மா முத்திரை பதித்த தவப் பயன்
முடக்கம் இல்லா படைப்புத் தொழில்
புத்திர பாக்கியம் பெரும் தாயெல்லாம்
புத்துணர்வு பெறுவது தாய்மை உணர்வில் சித்திரை வெயில் என்றால் கூட
சிரமம் இல்லாமல் படைப்பவனே அருள்வாய்
விஷ்ணு
வண்டு பாடும் பிருந்தாவனக் கண்ணா
வந்து பாடுகிறோம் உன்னுடன் ஆட
ஒண்டுதல் ஆகி உன்னை சரணடைய
ஒரு முறை வாய்ப்பு தந்தவனை
தூண்டுதல் கொண்டு எரியும் விளக்காய்
துணையாய் வந்து அருள்வாய் கண்ணா தாண்டுதல் பிழை செய்ய மாட்டோம்
தடைகள் அகற்றி அருள்வாய் கண்ணா
சிவன்
பண்ணிசை பாடல் கேட்டு ஆடுபவனே
பாத கமலம் பற்றிக் கொண்டோம்
மண்ணில் நாங்கள் பிறந்த பாக்கியம்
மனதில் நினைத்து பக்தி கொண்டோம் விண்ணில் தோன்றும் முழுநிலவு ஒளிபோல்
விண்ணவர் போற்றும் மகேசா உன்னை
திண்ணமாக நினைத்து உருகி உருகி
திக்கெல்லாம் இருப்பவனே துதிக்கின்றோம் அருள்வாய்.