மார்கழி மாதம் இரண்டாம் நாள்
பிரம்மா
நான்கு வேத நாயகனே நான்முகனே
நல்லாசி தருவாய் நலம் கூட
சான்றோர் கற்ற கல்வியின் நாயகனே
சத்திய லோகத்தில் தியானத்தின் பிறப்பிடமே கான் தவம் கடுமையாக இருந்தால்
காட்சி தந்து வரம் கொடுப்பவரே
பான்மை பண்புடன் படைப்பை ஏற்று
பயனறிந்து வணங்குகிறோம் வாழ்த்தி அருள்வாய்
விஷ்ணு
காலை எழுந்து நீராடி வணங்குகிறோம் கதிரவன் வருமுன் கோலமிட்டு வணங்குகிறோம்
மாலை தொடுத்துப் பூச்சூடி வணங்குகிறோம்
மனம் நிறைந்த கண்ணனை வணங்குகிறோம் சோலை மலரை அர்ச்சித்து வணங்குகிறோம்
சோதனை வந்தாலும் தாங்கியே வணங்குகிறோம்
பாலை கடைந்து வெண்ணைதந்து வணங்குகிறோம்
பாலும் மோரும் குடிக்க தந்து வணங்குகிறோம்
சிவன்
தில்லைக் கூத்தனை சிதம்பரத்தில் பார்க்க
திரிசூல நாயகன் நடனத்தைக் காண முல்லைப் பூத்தொடுத்து முக்கண்ணனை காண
மூன்றாம் பிறைசூடிய நர்த்தகனை காண அல்லை நாதன் ஆதரவைப் பெற
ஆதவன் உதிக்கும் முன்பே காண
எல்லை இல்லா சோதியைக் காண எழுச்சியுடன் சென்று சிவனருள் பெறுவோம்