மார்கழி மாதம் 22 ஆம் நாள்
பிரம்மா
தாய் தன்னைக் கரைத்து வளர்ப்பாள்
தரணியில் புகழ் சேர்க்க இழைப்பாள்
சேய் உயர்வே தன் உயர்வாக
எண்ணித் தன்னை மறப்பவள் தாய்
காய் போன்று கடினமாக இருந்தாலும்
கனிய வைப்பவள் தாய் அதுபோல்
நோய் போக்கும் மருந்தாகி தாயாகிய
பிரம்மா எங்களை காத்து அருள்வாய்
விஷ்ணு
கருமேகம் பார்த்து ஒதுங்கி நின்ற
கன்றுக் குட்டி ஆடும் மயில்
உருமாறி படமெடுத்து ஆடும் பாம்பு
உருக வைத்து பாடும் குயில்
தருவாகிய கற்பக மரம் சிலிர்த்து
தாவரம் எல்லாம் தலை ஆட்ட
திருவே உன் வருகை கண்டு
தியானம் கழைந்தது எங்களைக் காப்பாய்
சிவன்
பனி உருகுது உள்ளம் உருகுது
கைலாய நாதனை காணும் போது
கனி கசியுது உணவு ஆகுது
சிவனே உன் திருவருள் கூட
சனி விலகுது சங்கடம் தீருது
சங்கரா உன்மூத்த பிள்ளை அருளால்
துனி விலகுது துன்பம் விலகுது
தூயவனே உன் பாதம் பணிய