மார்கழி மாதம் 29 ஆம் நாள்
பிரம்மா
மார்கழி மாதம் மனதிற்கு மகிழ்ச்சி
மாதவம் செய்தோம் பிரம்மனைப் பாட
கார்குழலி வீணை இசையைக் கேட்டு
இன்பம் கொண்டு நெகிழும் பிரம்மா
பார்புகழும் கோயில் சிற்பத்தில் இருப்பாய்
பார்க்கும் பொருளில் இருப்பாய் தேர்
சார்பு படைப்பில் இருப்பாய் எங்கும்
நிறைந்து இருப்பவனே காத்து அருள்வாய்
விஷ்ணு
மலர் மலர வண்டு பாட
மனம் நெகிழ கண்டு காண
அலர் தொடுத்து மாலை சூட
அபயம் தரும் கண்ணா வாராய்
குலம் தழைக்க குடி வாழ
குடக்கூத்து ஆடும் கண்ணா வாராய்
வலம் வருவோம் வரம் பெறுவோம்
வண்ணமயில் இறகுடன் வாராய் கண்ணா
சிவன்
முடி தரித்து ஆபரணங்கள் அணிந்து
முகம் மலர வந்த ஈசா தடி பிடித்த தண்டபாணி அன்னை
கரம் பிடிக்க வந்த ஈசா குடி வாழ அசுரனை அழிக்க
வழி வகுத்து தந்த ஈசா
இடி போல மோதி எழுந்த
சக்தி சாந்த சிவமே வாழ்த்துவீர்.