மார்கழி மாதம் ஐந்தாம் நாள்
பிரம்மா
சாதியில்லை மதமில்லை படைப்புத் தாயே
சஞ்சனே உயர்வு தாழ்வில்லை படைப்பில் நிதித்யா சனத்தில் இருக்கும் பிரம்மாவே
நித்திய சேவை செய்கிறோம் பணிந்து பாதிக்கும் குறைபாடு இல்லாமை தருவாய்
பக்குவப் படுத்தி நிறைவாய் படைப்பாய் போதிக்கும் நான்முகனே நல்லறிவு தருவாய்
பேதங்கள் பார்க்காமல் நல்லாசி தருவாய்
விஷ்ணு
மதுசூதனே மங்கையர் விரும்பும் கண்ணா
மாயசெயல் செய்து மடியவைத்தாய் அசுரரை சூதுசெய்து பாண்டவரை ஏமாற்றிய போது
சுனங்காமல் பாஞ்சாலிக்கு உதவிய கிருஷ்ணா
பதுங்கும் கல்லாகி பாழ்பட்ட அகலிகை
பாதம்பட்டு உயிர்பெறச் செய்த ராமா
பிதுங்கும் கண்ணுடைய அரக்கியைக் கொன்று
காத்தவனே கண்ணா எங்களையும் காப்பாற்று
சிவன்
பனிகள் சூழ்ந்து லிங்கமாக இருப்பவனே
பனிலிங்கா கைலை நாதா சர்வேசா
தனியாத ஆசையுடன் குளிர்தாங்கி வருகிறோம்
தனிமையில் இருப்பவனே சிவனே சங்கரா
கனி தருகிறோம் கற்கண்டாய் இனிப்பவனே
கணிவு கொண்டவனே கருணை உள்ளவனே முனிவர்க்கு அருளும் சதாசிவா கயிலைநாதா
முக்தி தருபவனே பக்தரைக் காக்கவா