முருகன் அருளாலும், அம்பாள் ஸ்ரீ சாரதாம்பாள் அருளாலும். விநாயகரும், முருகனும் அருள் தந்த ஔவையார் புலமையும், சமுதாய சிந்தனையும் கொண்டு ஊர்… ஊராய், தேசம்… தேசமாய் சென்று நல்ல சிந்தனையும், நல்வழி காட்டியவர்.
அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரிடமும் அன்பு செலுத்தி பெண்கள், சிறுவர்களுக்கு வழிகாட்டியாய் திகழ்த்து ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, விநாயகர் அகவல் என பல நூல்களைத் தந்தவர் ஔவையார்.
நாம் அன்புடன் அழைக்கும் ஔவைப் பாட்டி. அவர்கள் பெயரில் “ஔவையார் மாமன்றம்” தொடங்கி ஆறு ஆண்டுகள் முடிந்து ஏழாம் ஆண்டு தொடங்க இருக்கும் இந்த நாளில்…
முப்பெரும் சக்திகளான துர்க்கை,லட்சுமி, சரஸ்வதியை வணங்கும் நவராத்திரி நன்னாளில் வணங்கி தசமி வெற்றி விழா அன்று 2018ம் ஆண்டு தொடங்கிய “ஔவையார் மாமன்றம்”…
தனது பணிகளை செய்து இன்பம், துன்பம் தாங்கி முருகன் வழிகாட்டும் அடிச்சுவட்டை பின் தொடர்ந்து.
முருகன் இட்ட பணிகளை தொடர்ந்து செய்ய முற்படுகிறோம்.தொடர்ந்து ஔவையார் மாமன்றத்தில் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள். நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
டாக்டர் செந்தமிழ்வாணி ச. மல்லிகா,
ஔவையார் மாமன்ற நிறுவனத் தலைவி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.