சங்கத் தமிழ்
சங்கத் தமிழ் முழங்கும்
சிங்கத் தமிழ் நாட்டில்
பொங்கும் வளமும் நீயே
சீர்அணி நாடனும் தொட்டிலிலே
வாய் சிவக்கச் சிரிப்பவள் நீ!
(சங்)
முடியுடை மூவேந்தர் மடியினிலே
முத்தமிழ் வழங்கும் அற்புதமே வள்ளுவர் நாவினிலே பிறந்தாய் கம்பன் ஏட்டினிலே தவழ்ந்தாய் தமிழே !தாயே !எங்கள்
தவத் திரு மணியே!
சித்தம் குளிர வாராய்
என் சித்தம் குளிர வாராய்!
நீ என்றும் நிலைத்திருப்பாய்
(நீ)(சங்)
சங்கத் தமிழ்
சங்கத் தமிழ் முழங்கும்
சிங்கத் தமிழ் நாட்டில்
பொங்கும் வளமும் நீயே
சீர்அணி நாடனும் தொட்டிலிலே
வாய் சிவக்கச் சிரிப்பவள் நீ! (சங்)
முடியுடை மூவேந்தர் மடியினிலே
முத்தமிழ் வழங்கும் அற்புதமே
வள்ளுவர் நாவினிலே பிறந்தாய்
கம்பன் ஏட்டினிலே தவழ்ந்தாய்
தமிழே !தாயே ! எங்கள்
தவத் திரு மணியே!
சித்தம் குளிர வாராய்
என் சித்தம் குளிர வாராய்!
நீ என்றும் நிலைத்திருப்பாய் (நீ)(சங்)