
சங்க நூல்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தன .இதனால் எளிதில் அழிந்து விடக்கூடியவனாக இருந்தன .
பல அரும் பெரும் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போனதற்கு ஓலைச் சுவடிகளை நாம் புத்தகங்களாக பதிப்பிக்க இயலாததே காரணம் .
ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி ஊர் ஊராக அலைந்து அவற்றைப் புத்தகங்களாக அச்சில் ஏற்றியவர் உ.வே.சா. அவர்கள். திருவாரூர் உத்தமதானபுரத்தில் 19.2.1856 இல் பிறந்தார். இயற்பெயர் வேங்கடரத்தினம் என்பதாகும்.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பயின்றார்.அவரது ஆசிரியர் சாமிநாதன் எனப் பெயரிட்டார். பிற்காலத்தில் அதுவே நிலைத்து விட்டது.
உ.வே.சாமிநாதன் தமிழ் மீது உள்ள பற்றால் ஓலைச் சுவடிகளைப் புத்தகம் ஆக்க எண்ணி ஓலைச் சுவடிகளை தேடித் தேடி ஊர் ஊராக அலைந்து அவற்றை வாங்கி புத்தகமாக வெளிவரச் செய்தார்.
சிலர் ஓலைச் சுவடிகளை கொடுக்க மறுத்து விடுவார்கள் .
கொடுமுடியில்; வசித்த தனவந்தர் ஒருவர் ஆடிப்பெருக்கு தினத்தில் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளை உ.வே.சா. அவர்கள் கடும் குளிரில் காலை வரை காத்திருந்து ஓலைச் சுவடிகளை எடுத்து வந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது .
பல சுவடிகளை ஒப்பிட்டுப் பார்த்தே பாட பேதங்களை நீக்கி நூல்களைப் பதிப்பித்தார்..
1.நற்றிணை , 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.பதிற்றுப் பத்து ,5.பரிபாடல் 6.கலித்தொகை 7.அகநானூறு ,8.புறநானூறு 9.திருமுருகாற்றுப்படை 10. சிறு பாணாற்றுப் படை 11.,பெரும் பாணாற்றுப் படை 12. முல்லைப் பாட்டு 13. மதுரைக் காஞ்சி ,14.பட்டினப் பாலை , 15.நெடுநல்வாடை, 16.குறிஞ்சிப் பாட்டு , 17.மலை படுகடாம் ,18.சிலப்பதிகாரம் மணிமேகலை.
12.புராணங்கள்,
9.உலா நூல்கள்
6.கோவைகள்
- தூது நூல்கள்
- வெண்பா நூல்கள்
3.அந்தாதிகள் - பரணிகள்
2.. மும்மணிக் கோவைகள்
2..இரட்டை மணிமாலை
4.பிரபந்தங்கள்
என 80 நூல்கள் உ.வே.ச. அவர்களின் பேரு முயற்சியால் பதிக்கப்பட்டன .
தமிழுக்கு அவர் செய்த தொண்டு காரணமாகவே தமிழ்த்தாத்தா எனச் சிறப்பிக்கப்பட்டார் .
சங்கத் தமிழ் நூல்களை அவர் கண்டறிந்து தந்தமையால் செம்மொழித் தமிழின் பெருமைகளை நாம் அறிய முடிகிறது ..
சிற்றிலக்கியங்களின் 96 வகைகளும்
பாடுபொருள்களும்
தமிழ் இலக்கிய வகைகளுள் சிற்றிலக்கியங்கள் என்றொரு பிரிவு உண்டு .இந்த இலக்கியங்கள் 96 வகை. எனக் குறிப்பிடப்படுகின்றன. 96 வகை பிரபந்தங்கள் என்றும் வழங்கப்படுகின்றன.
சிற்றிலக்கியங்களுக்கான இலக்கணத்தை பாட்டியல் நூல்கள் வரையறுக்கப்படுகின்றன .
96 வகை எனக் குறிப்பிட்ட போதும் எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை .
இலக்கியத்துக்குப் பின் இலக்கணம் என்ற அடிப்படையிலேயே பாட்டியல் நூல்களில் வரையறைகள் காணக்கிடக்கின்றன .
தொல்காப்பியத்தினுள் சுட்டப்படும் அக, புறத்திணைகளுள் சில பிற்காலத்தில் தனி இலக்கியங்களாக உருவெடுத்தன .
சிற்றிலக்கியமும் பாடு பொருளும்
1.அகப்பொருள் கோவை – களவு , கற்பு ,முதல் உரிஅகம் .
2./அங்கமாலை -ஆண், பெண் அங்கங்கங்கள்
3.அட்டமங்கலம் -கடவுள் காக்கப் பாடுவது
4.அனுராகமாலை -தலைவன் தன கனவை பாங்கற்கு கூறுவது .
5.அரசன் விருத்தம் – மலை,கடல்,காடு ,நிலவருணனை,வாள்,தோள் மங்கலம்
6.அலங்கார பஞ்சகம்
7.ஆற்றுப் படை – பாரிசில் பெற்றகலைஞர் பெற விரும்புவரை வழிப்படுத்துவது
8.இணை மணி மாலை
9.இயன்மொழி வாழ்த்து -குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்
10.இரட்டை மணிமாலை
11.இருபா இருப்ப.’.து
12.உலா – தலைவன் உலா வருதலை , ஏழு பருவ மகளிரும் கண்டு களித்தல்
13.உலா மாடல் -கனவில் பெண் இன்பம்
14.வாழ்த்திப் பாட்டு -பள்ளர், , பள்ளியர், உழவு -சக்களத்திச் சண்டை
15.உழிஞைமா – பகைவரின் ஊர்ப்புறம், கோட்டையை முற்றுகை இடல்
16.உற்பவமாலை – திருமாலின் பத்துப் பிறப்பு
17.ஊசல் -வாழ்த்துதல்
18.ஊர் நேரிசை – பாட்டுடைத் தலைவன் ஊர்
19.ஊர் இன்னிசை பாட்டுடைத் தலைவன் ஊர்
20.ஊர் வெண்பா -ஊர்ச் சிறப்பு
21.எண் செய்யுள்- தலைவன் ஊர்ப்பெயர்
22.எழு கூற்றிருக்கை -சிறுவர் விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டது
23.ஐந்தினைச் செய்யுள் -ஐந்திணை உரிப்பொருள்
24.ஒருபா ஒருப.’.து -அகவல் வெண்பா
25.ஒலியல் அந்தாதி
26.கடிகை வெண்பா -தேவர், அரசரிடம் காரியமாற்றுதல்
27.கடை நிலை
28.கண் படை நிலை
29.கல்பகம் -18 உறுப்புகள்
30.காஞ்சி மாலை -மாற்றார் ஊர்புறத்துக்காஞ்சி மாலைசூடுதல்
31.காப்பியம் – ஆறாம் , பொருள் ,இன்பம், வீடுபேறு என வைத்துப் பாடுவது
32.காப்பு மாலை – தெய்வம் காத்தல்
33.குலமகன் -பெண் தன் கையில் இருக்கும் குழந்தையைப் பாடுதல்
34.குறத்திப் பாட்டு -தலைவியின் காதலும் குறத்தி குறி சொல்லுதலும்
35.கேசாதி பாதம்- முடிமுதல் அடிவரை வர்ணித்தல்
36.கைக்கிளை – ஒருதலைக் காமம்
37.கையறு நிலை -உற்றார் இறந்த பொழுது வருந்துவது
38.சதகம் -(அகம், புறம்)நூறு பாடல் பாடுவது
39.சாதகம் – நாள், மீன் நிலைப் பற்றி கூறுவது
40.சின்னப்பூ – அரசனின் சின்னங்கள் பத்து
41.செருக்கள வஞ்சி-போர்க்களத்தில் அரசனின் வெற்றி, பேய்களின் ஆடல் பாடல்
42.செவியறிவுறுஉ- பெரியோருக்கு பணிவு, அடக்கம்
43.தசாங்கத்தயல் -அரசனின் பத்து உறுப்புகள்
44.தசாங்கப்பத்து -அரசனின் பத்து உறுப்புகள்
45.தண்டக மாலை
46.தாண்டகம் -27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்
47.தாரகை மாலை -கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்
48.தானை மாலை – கொடிப்படை
49.தும்பை மாலை – தும்பை மாலை சூடி போரிடுதல்
50.துயிலெடை நிலை -பொற்காலத்தில் (பாசறையில்)தூங்கும் மன்னனை எழுப்புதல்
51.தூது -காதலுக்காக அ.’.றிணைகளை தூது அனுப்புதல்
52.தொகை நிலைச் செய்யுள்
53.நயனப்பத்து -கண்
54.நவமணி மாலை
55.நாமமாலை -ஆண்மகனைப் புகழ்தல்
56.காலம்- இடம், பொருள் இவற்றுள் ஏதேனும் ஒன்று
57.நான் மணிமாலை
58.நூற்றந்தாதி
59.நோச்சிமாலை- மதில் காத்தல்
60.பதிகம்-ஏதேனும் ஒரு பொருள்
61.பதிற்றந்தாதி
62.பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது
63.பரணி – 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது
64.பல்சந்தமாலை
65.பவனிக் காதல் -உலாவுதளுடன், காமம் மிக்கு பிறரிடம் கூறுதல்
66.பன்மணிமாலை -கலம்பக உறுப்புகள்
67.பாதாதி கேசம் -அடி முதல் முடிவரை வர்ணித்தல்
68.பிள்ளைக் கவி,பிள்ளைத்தமிழ் -குழந்தையின் பத்துப் பருவங்களைப் பாடுதல்
69.புகழ்ச்சி மாலை -மாதர்கள் சிறப்பு
70.புறநிலை- நீ வணங்கும் தெய்வம் நினைக்கக் காக்க
71.புறநிலை வாழ்த்து -வழிபாடு தெய்வம் காக்க
72.பெயர் நேரிசை -பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்த்திப் பாடுதல்
73.பெயர் இன்னிசை -பாட்டுடைத் தலைவன் பெயரைச் சார்த்தி பாடுதல்
74.பெருங்காப்பியம் -கடவுள் வணக்கம், வருபொருள், நான்கு பொருள் பாடுதல்
75.பெருமகிழ்ச்சி மாலை -தலைவியின் அழகு, குணம், சிறப்பு
76.பெருமங்கலம் -பிறந்தநாள் வாழ்த்து
77.போர்க்கெழு வஞ்சி -மாறார் மீது போர்தொடுக்கும் எழுச்சி
78.மங்கள வல்லை- உயர்குலத்து பெண் பற்றியது
79.மணிமாலை
80.முது காஞ்சி – வயதில் மூத்தோர் ,அறிவில் மாக்கட்கு உரைப்பது
81.மும்மணிக் கோவை
82.மும்மணி மாலை
83.மெய்கீர்த்தி மாலை – அரசனின் கீர்த்தியை பாடுவது
84.வசந்த மாலை -தென்றல் வருணனை
85.வரலாற்று வஞ்சி -குலமுறை வரலாறு
86.வருக்கக் கோவை
87.வருக்க மாலை
88.வளமடல் -மடலேறுதல்
89.வாகை மாலை – போர் வெற்றியைப் புகழ்தல்
90.வாதோரன மஞ்சரி -யானையை அடக்கும் வீரம்
91.வாயுறை வாழ்த்து -பயன்தரும் சொற்களை அறிவுரையாக கூறுவது
92.விருத்த இலக்கணம் -படைக் கருவிகளைப் பாடுதல்
93.விளக்கு நிலை -செங்கோல் சிறக்க பாடுவது
94.வீர வெட்சி மாலை – ஆநிரைக் கவர்தல்
95.வெற்றிக் கரந்தை மஞ்சரி -ஆநிரை மீட்டல்
96.வேனில் மாலை – இளவேனில், முதுவேனில் வருணனை