கைலாயப் பயணம் சென்ற மே ஐந்து
தொழில் பக்தி கொண்ட மே தினம்
வையம் புகழ் தொல்காப்பியம் பிறந்த
இலக்கியத் தமிழ் மே ஐந்து
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி
காட்சி தரும் சித்ரா பௌர்ணமி
கைலாய நாதர் வாக்குடன் கலந்தார்
கோவை பட்டீஸ்வரர் பாதம் பற்றி
புண்ணியம் செய்தீர் சிவ பக்தியில்
சிவ பக்தரான தங்கள் உடல்
மண்ணுலகில் இல்லை என்று எண்ணாமல்
சிவ தலம் சென்றதாய் எண்ணி
கண்ணீரில் கரைந்து தெளிந்து எழுந்து
முருகன் கைபிடித்து எழுத வைத்து
திண்ணிய எண்ணத்துடன் வழி நடத்தி
வாழ்வை நகர்த்தும் வழி காட்டி
அன்பில் மிஞ்சும் மகன் மருமகள்
பாசம் காட்டும் பேரன் பேத்தி
அன்பு செலுத்தும் உறவும் ஊரார்
எழுத வைத்த இறை அருளும்
கன்ன நீர் துடைக்க வந்த
கருணைக் கடல் முருகன் அருள்
உன்னை வணங்கிய மகளுக்கு சித்ரா
பௌர்ணமியில் மதி மல்லி
சந்திரன் முகம்
மல்லிகா சந்திரன்
குடும்பத்தினர்