நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கான அந்த செயலுக்கான முன்னேற்பாடுகளை நாம் முதலில் தயார் படுத்திக் கொண்டு பின் அந்த காரியத்தை செய்யத் துவங்க வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் அந்த செயல் பாதியில் நிற்ககூடும் அல்லது அரைகுறையாகச் செய்ய நேரிடும். Preparation மிக மிக அவசியமான ஒன்று நாம் அன்றாட வாழ்க்கையில் சமைப்பது, தூங்குவது, போன்ற சிறிய செயல்களும் இந்த preparation அவசியமானதாக உள்ள போது
வாழ்க்கையின் பெரிய முக்கியமான விஷயங்களுக்கு அது எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும்.
வறண்டு கிடக்கும் கரடுமுரடான பூமியில்
அப்படியே பயிரிட முடியாது. முதலில் நிலத்தை சமன்படுத்தி பண்படுத்தப் பட வேண்டும் .
அவ்வாறு செய்தால் தான் நல்ல விளைச்சலைப் பெற முடியும்.
அதைப் போலத்தான் நம் மனமும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்களின் கூட்டு கலவையாக பார்ப்பவை, கேட்பவை நிகளுகிற செயல்களுக்கு ஏற்ப மாறி… மாறி அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.
இது நம் பல்திரன் பேசியை கையில் வைத்து கொண்டு geams விளையாடிக் கொண்டே reels பார்த்து கொண்டே
இருந்தால் காலை முதல் இரவு வரை நேரம் ஓடிக்கொண்டே இருக்கும்.
ஆனால், அதனால் கடைசியில் நமக்கு எந்த பயனும் இருக்காது பொன்னான நேரம் வீணாய் கழியும். அதற்குப் பதிலாக பல்திரன்பேசியை பயன் படுத்தி ஏதெனும் ஒன்றை சிறிது சிறிதாகக் கற்றிருந்தால் கூட நாம் அதன் மூலம் ஏதேனும் பயன் அடைந்து இருக்கலாம்.
அப்படி நம் மனதையும் போகிறபோக்கில்
அலைபாய விட்டு விடாமல். நமக்கு எது வேண்டும் என்பதை முதலில் உறுதி
செய்து கொள்ளவேண்டும்.
அதை, அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து நாம் விருப்பியதை அடைய எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை கற்றுக் கொள்ளாம்.
இன்னும் நம்மை மேன்மைப் படுத்த என்ன பயிற்சி செய்ய வேண்டுமோ அதை செய்யலாம் நம் முன்னேற்றத்துக்கான சரியான வாய்ப்பு வரவில்லையா அதை நிதானமாக தேடலாம்.
நாம் ஒருமித்த சிந்தனையில் நம் இலக்கை நோக்கியே நகந்து கொண்டு இருந்தாலே
போதும் வெற்றியைத் தொட உன்னால் முடியும்.