ஆன்றோர்களுக்கும், சான்றோர்களுக்கும் , கவியுலக படைப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் .
. காலத்தை பிரதிபலிப்பவர்கள் கவிஞர்கள் .அவர்கள் காலத்திற்குப் பின் எத்தனையோ கவிஞர்களை மறந்து விடுகிறோம். அவர்களை சிறியவர், பெரியவர் என ஒதுக்காமல் அனைவரையும் மதிக்கும் வகையில் எங்கள் முயற்சியால் https://tamilsangam.org/இணையதளத்தை ஆரம்பித்து இருக்கிறோம்.
அதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கை சுருக்கம் , இதுவரை தமிழுக்கு ஆற்றிய பணிகள், பெற்ற விருதுகள் போன்றவற்றை பதிவு செய்து கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் தமிழ் தெரிந்த அனைத்து இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும்படி பதிவேற்றம் செய்யப்படுவதால், இது எப்போதும் கணினியில் இருக்கும்.
எங்கள் இந்த முயற்சியை எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் பயன்படுத்தி காலத்தில் நிலைத்து நிற்க வேண்டிப் பணிகிறோம். எழுத்துலக சகோதர-சகோதரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி எனது பணி சிறக்க உறுதுணையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் . .
இதில் பயன்பெற இந்தியாவில் உள்ளவர்கள் ரூ .1000/- (ஆயிரம் மட்டும்), ஒரு முறை செலுத்தினால் போதும். .(பணம் m.o., cheque மூலம் அனுப்பலாம் ) வெளிநாட்டு தமிழர்கள் பயன்பெற அமெரிக்க டாலர் 20 மட்டும் கீழ் கண்ட sree aishwariyam ,C/A no. 6483917499 ,Indian Bank ,Kalappatti Branch,coimbatore IFS code ; IDIBOOOK 173. (வங்கியில் அனுப்பியதும் எங்களுக்கு editorchandran@gmail.com –என்ற இணைய தள பதிவில் உடன் தெரிவிக்கவும் .எங்களுடன் தொடர்புகொள்ள -98420 49231, 96298 37167.
,உங்கள் குறிப்பு, நிழற்படம் ஒன்று -விருது பெற்ற படம் ஒன்றும் எங்களுக்கு அனுப்பி வைக்கவும் .
தமிழ் மொழி வரலாற்றையும், வளர்ச்சியையும், தொன்மையையும் முழுவதும் தெரிந்து கொள்வதற்காக கீழே பல பிரிவுகளில் தொகுத்தும், பிரித்தும், தமிழுக்காக வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி விவரங்களை வழங்கியிருக்கிறோம். எனவே இவற்றை படித்து முழுமையாக தெரிந்து கொள்ள விழைகின்றோம் .;.
மனிதனுக்கு மொழி உயிர் போன்றது. தாய் மொழி என்பது அமுதம் போன்றது .அமுதத்தை பருகியவர்கள் சாகாவரம் பெற்றவர்கள் போல் தாய் மொழியாம் தமிழ் மொழிச் சுவையை அள்ளிப் பருகப் பருக ஆயுள் பலம் கூடுகிறது . ஆரோக்கியம் பிறக்கிறது .இலக்கியம் படைப்பவர் மறைந்தும் காலத்தால் அழியாதவர்களாக காலம் கடந்தும் வாழ்கிறார்கள்.
ஆய கலைகள் 64 இல் தமிழ் மொழிக் கலையும் ஒன்று. தமிழ் மொழி தொன்மையானது . மதுரையில் பாண்டிய மன்னர்களால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர்.இணைய தளத்தில் தமிழ் சங்கம் அமைத்து இளைய தலை முறையினர் தமிழின் தொன்மையை தெரிந்து கொள்ளும் வகையிலும்,அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்ற நீண்ட நாள் எண்ணத்தின் விளைவாக இணையத்தில் ”தமிழ்ச் சங்கம் ” தொடங்கப்பட்டிருக்கிறது .
மதுரைமண்ணில் பிறந்த (செந்தமிழ் வாணி ச. மல்லிகா) நானும் எனது கணவர் (தினத்தந்தி ஆசிரியராக இருந்து பணி நிறைவு பெற்ற சோம. சந்திரன் அவர்களும் ). தமிழ் மீது உள்ள பற்றாலும்,பிறந்த மண்ணின் மகிமையாலும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இணையத்தில் தமிழ்ச் சங்கம் தொடங்கி இருக்கிறோம். எங்களால் முடிந்த அளவு இளைய சமுதாயத்திற்காகத் தமிழின் பெருமையைப் பதிவு செய்து இருக்கிறோம்.
இலக்கியமும், இலக்கியப் படைப்பாளர்களையும் இளைய சமுதாயத்திற்காக இங்கு பதிவேற்றம் செய்து வருகிறோம் .இதில் தமிழ் மக்களாகிய படைப்பாளர்கள், படிப்பவர்கள்,ஆன்றோர் ,சான்றோர் பெருமக்கள் இச்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தமிழ்ச் சங்கத்தில் பணியாற்ற உதவும்படி பணிகிறோம்.
அன்புடன்
செந்தமிழ் வாணி ச. மல்லிகா எம்.ஏ.,
மூத்த பத்திரிகையாளர் சோம. சந்திரன்.எம்.ஏ.,
பிரம்ம இல்லம் ,எண்.70 சக்தி நகர், நேரு நகர் மேற்கு , காளப்பட்டி -அஞ்சல் , கோயம்புத்தூர் -641 048 . அலைபேசி -9842049231, 9626837167 .
தமிழ் மொழிக்கலை -பகுதி 1

உடல் உறுப்புகளால் ஏற்படும் சில அசைவுகள் செவிப்புலனைத் தாக்கும் போது ஒலி உணரப்படுகிறது .
பேச்சு மொழியும் இவ்வாறே உணரப் படுகின்றது .எனவே, பேச்சு மொழி என்பது மக்களின் குரலில் பிறந்து செவியில் உணரப்படும் ஒலி வகை ஆகும் .
பேசுபவர், கேட்பவர் என இருவருக்கும் இடையே நிகழ்ந்து ஒருவர் உணர்ச்சியையோ, கருத்தையோ மற்றவர் உணர்ந்து கொள்ள துணைநிற்பது மொழி ஆகும் .
இத்தகைய ஆற்றல் வாய்ந்த மொழி மக்களால் படைக்கப் பெற்று, மக்களாலேயே காக்கப் பெறுவது அரியதோர் கலையாகும் .
மொழி மக்களின் அறிவு வளர்ச்சிக்குத் துணை நின்று அவர்களை உயர்வு அடையச் செய்யும் அறிய தொரு கருவியாகும் .
ஒரு தாய் தன் குழந்தையின் மழலை மொழியைக் கேட்டு இன்பம் அடைகின்றாள். மழலை பேசும் குழந்தையின் மன வளர்ச்சியுடன், மொழி வளர்ச்சியும் அடைகிறது .மொழியை வளர்ப்பவரும் மக்களே, மொழியால் வளர்பவர்களும் மக்களே.
மொழியின் நன்மை கருத்தை உணர்த்துவது மட்டும் மொழியின் பயன் அல்ல. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் சமுதாயமாக வாழவும் உதவுகிறது .
. மக்களை நாகரீகம் , பண்பாடு , கலை அனைத்திற்கும் அடிப்படை மொழியே ஆகும். தொழில் செய்ய துணை நிற்பதும் , காலம் விட்டுக் காலம் இயங்கவும் காலத்தை கடந்து நிற்பதும் மொழியாகும் .
சமுதாயமும் மொழியும்
மனித சமுதாய வாழ்விற்கு உதவுகின்ற மொழி சமுதாய மக்களை இனப்படுத்தி வாழவும் துணை செய்கின்றது. அவரவர் பேசுகின்ற மொழியே அடையாளச் சின்னங்களாகும்.”சமுதாய வாழ்விற்கு அறிகுறியாக உள்ள மொழியே அச்சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது .சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தை வளர்த்து வருவது மொழி.
மனித சமுதாய உயர்வு
”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பர்., மாவும் மாக்களும் ஐயறினவே ; மக்கள் தாமே ஆறறிவுயிரே ”-என்பர் தொல்காப்பியர் .
ஆறு அறிவு உயிர் என்ற சிறப்பினை மக்களுக்கு வழங்கியது. அவர்கள் பேசும் மொழியாலேயே என்பது இதனால் தெளிவாக உணரப்படுகின்றது.
மொழி இல்லை என்றால் மனித சமுதாயம் இல்லை .மொழி இல்லை என்றால் மனித நாகரீகம் இல்லை. .
மொழி அறிவு
மொழியைக் குறித்து ஆராய வேண்டுமானால் மனித மனத்தைக் குறித்து ஆராய வேண்டும்..மனமின்றி மொழி இல்லை. மொழியை வளர்த்தது மனமேயாகும்.
”ஒரு மனித மனத்தின் இயற்கையைக் காட்ட வல்லது மனத்தின் எதிரொலி ஆக திகழும் மொழியே என்பர்”- அறிஞர் வெண்ட்ரிஸ்.
பேசும் மக்களை விடுத்து மொழி என்று தனியாக ஒன்றில்லை .எனவே, தான் மனிதர் ஒவ்வொருவரின் அறிவின் ஆழத்திலும் மொழி வேர் உள்ளது. அங்கிருந்தே மொழி வளர்ச்சி பெற்று விளங்குகிறது என்று அறிஞர் வெண்ட்ரிஸ் விளக்கிக் காட்டுகிறார்.
மனத்தின் எதிரொலி
தொடக்க கால மக்கள் அறிவு வளர்ச்சி பெறவில்லை .தன் தேவைகளைச் சைகைகள் மூலமே புலப்படுத்தி நிறைவு செய்து கொண்டனர் .இவர்கள் நிலை ஊமையர் போன்ற நிலையே இருந்தது .ஊமையர் பொருள்களை அறிவார்களே அன்றி மேலும் அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை .
மனிதன் எப்பொழுது பேசக் கற்றுச் சொற்களைப் படைத்துக் கொண்டானோ அப்போது தான் அவன் அறிவு வளரத் தொடங்கியது.பேச்சுடன் நின்று விடாமல் எழுத்துக்களையும் கற்றுச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்திய பிறகே அவன் அறிவு விரைந்து வளர்ந்தது.
பழங்கால மக்கள் கை விரல்களின் எண்ணிக்கையினைக் கொண்டே எதையும் கணக்கிட்டுப் பழகினர். இப்பழக்கமே அவர்கள் கணித ஆற்றலை வளர்த்தது .
எண்ணுப் பெயருடைய சொற்களைப் படைத்து பயன் படுத்திய பின்பே கணிதக்கலை இன்று இமயமென வளர்ந்து உள்ளது .
கணக்கு அறிவுக்கு எண்ணுப் பெயர்கள் எவ்வளவு இன்றி அமையாததோ, அது போல பொது அறிவுக்குச் சொற்கள் மிகவும் இன்றியமையாதது.சொற்கள் பொருள்களின் குறியீடுகளே எனினும் அக்குறியீடுகள் இன்றி அறிவு வளர வழியில்லை .
மொழி ஒரு நாகரீகக் கருவி
மொழியின் இயல்பை நுணுகி…நுணுகி ஆராய்வோமே ஆனால் அது இறுதியில் மனித இயல்பையே காட்டுவதாக அமையும்.மனிதன் தன் மூளையைக் கொண்டு பாடுபட்டு அமைத்து போற்றிடும் சிறந்த நாகரீகக் கருவி மொழியே”
இத்தகைய மனித மொழியின் முக்கிய இயல்புகளை நடைமுறைப் பேச்சில் நாம் இயற்கையாகப் பயன்படுத்துகிறோம்..
இயற்கை என்பதானால் இவ்வியல்புகளை நாம் உற்றோ ,உணர்ந்தோ கவனிப்பதில்லை .கவனிப்போம் ஆயின் மொழியின் அருமை நமக்குப் புரியும் .
மனித மொழியின் இன்னும் ஒரு சிறப்பு இயல்பு என்னவென்றால் நாம் நேற்று நடந்தவற்றை இன்று சொல்ல முடிகிறது .கடந்த கால வரலாற்றினை இன்று நினைத்து பேச முடிகிறது .ஏன்நாளை நாம் செய்யக் கூடியவற்றை இன்றே சொல்லிவிட முடியும் .இவ்வாறு சொற்களைக் கால நிலைமைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிற திறமை நம் மொழியில் அமைந்துள்ளது .
இதனாலேயே மனிதன் எத்தனையோ தடைகளையும் காலத் தாழ்வு மற்றும் பிற்போக்கு நிலை அனைத்தையும் கடந்து மொழியைக் காத்து வருகிறான் என்பது ஆராய்ச்சியாளர்கள் கண்ட உண்மை. .
மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு சொல் அமைப்பு, இலக்கண அமைப்பு, முதலானவை இன்பம் தரும் நல்விருந்தாக அமையும்/.
”பாம்பின் கால் பாம்பறியும்” என்பது போல அவர்கள் இவ்வாராய்ச்சி இன்பத்தில் திளைப்பர்,ஏனையோர் இதனை வீண் முயற்சியாகவும், தொல்லையாகவுமே கருதுவர் .
மக்கள் பேச்சு மொழி நிலையில் சில முன்னேற்றப்படிகளைக் கடந்தனர்..எனினும், எழுத்து மொழியை உருவாக்கிக் கொண்ட பின்னர் தான் அவர்கள் முன்னேற்றப் பாதையில் பலபடிகளைக் கடக்க முடிந்தது .
அச்சுப்பொறியின் வளர்ச்சி அவர்களின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளம் ஆயிற்று இன்று மனிதனால் கடக்க முடியாத இடத்தையும், காலத்தையும் கடந்து வாழும் ஆற்றலை மொழி பெற்று விட்டது .
மக்களின் வாழ்வில் சிறந்த மொழிக்கலை மக்களாலேயே வளர்க்கப்பெற்று , மக்களின் வாழ்வை நாகரிக நிலையில் உயர்த்திவரும் அறிய கலையாக விளங்குகிறது .
பேச்சு மொழியும், எழுத்து மொழியும்
புலன்களால் உணரப்படும் குறியீடுகளை உடையது மொழி. இவற்றுள் ஒலி வடிவமான குறியீடுகளைக் கொண்டது பேச்சுமொழி .
வரிவடிவான குறியீடுகளைக் கொண்டது எழுத்து மொழி. எண்ணுவது , நினைப்பது, கனவு காண்பது ஆகிய அனைத்தும் வெவ்வேறு நிலைகளில் அமைந்த மொழியே ஆகும். எனினும்பேசப்படுவதும், கேட்கப்படுவதும் உண்மையான மொழி .எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்து எண்ணத் தகும் மொழி ஆகும்.
ஒரு மொழி எப்பொழுது நிலையான தன்மையைப் பெறுகின்றது என்றால், மக்கட் கூட்டத்தால் பேசப்பட்டு பேச்சு வழக்கில் இருந்து வந்தமொழி இலக்கிய வழக்குப் பெறும் போது ஓர் அளவிற்கு அழியாமல் நின்று அதன் தன்மையைக் காட்டுகின்றது.
மொழியும் இலக்கணமும்
கற்றவர்கள் பேச்சில் உள்ள இலக்கணம் கல்லாதவர்கள் பேச்சிலும் உள்ளது என்பதே உண்மை.மேலும் திருந்த ஒலிப்பதும்,நாகரிகமாகப் பேசுதலும் இலக்கணம் அல்ல. சொற்களைத் தக்க இடங்களில் அமைத்தலும் சொற்களோடு ஏற்ற உருபு முதலியவற்றைச் சேர்த்தலுமே இலக்கணம் எனப்படும்.இக்கருத்தினை ஏற்றால் கல்லாதவர் பேச்சிலும் இத்தகைய இலக்கணம் இருத்தல் கண்கூடு .இவ்வாறு ஆராய்ந்தால் நகரமக்களின் பேச்சிற்கும், நாட்டுப்புற மக்களின் பேச்சிற்கும் இலக்கண அமைப்பில் வேறுபாடு இல்லை எனலாம்.
அறிஞர் வெண்ட்ரியோ இன்னும் ஒருபடி மேலே சென்று நாட்டுப்புற மக்கள் பேச்சிலேயே இலக்கண அமைப்புக் கடுமையாக உள்ளதென்றும் ,படித்தவர்களைப் போல அவர்கள் இலக்கணம் நெளிவு விட்டுக் கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார் .
இவ்வுண்மையைத் தமிழ்மொழி வழக்கு ஒன்றினைக் கொண்டே ”நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம் .தமிழில் கற்றவர்கள் உயர்திணைக்கு அ.’. றினைவிகுதி கொடுத்து ”எனது குரு” என்று எழுதுகின்றனர் .
படிக்காத பாமர மக்கள் இவ்வாறு எழுதாது ”என் குரு” என எழுதுகின்றனர் .அவர்கள் மரபு வழி வழக்கிலிருந்து பெரும்பான்மையும் மாறுவதில்லை .
பேச்சு மொழி, எழுத்துமொழி என்ற பாகுபாட்டைக் கடந்து ஒரு மொழியில் தொன்று தொட்டு அடிப்படையாய் இருந்து வருவது இலக்கணமாகும் .
மரபு வழியாகவே இவ்விலக்கணச் சிந்தனை நமக்கு ஏற்படுகின்றது .பல சொற்றொடர் அமைப்புகளைக் கேட்டு கேட்டு அந்த அடிப்படை நம் நினைவில் நிலைத்து விடுவதால் மரபு வழியாகவே நமக்கு இலக்கணச் சிந்தனை வந்து விடுகிறது .
தமிழ் எழுத்துக்களின் வரலாறு தொன்மையானது .தமிழ் எழுத்துக்கள் ”நெடுங்கணக்கு” எனக் குறிக்கப் பெறுகின்றன .
தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவுகளை உடையது .
இயற்றமிழ் என்பது உலக வழக்கு .செய்யுள், வழக்கு என்னும் இருவகை வழக்கினும் இயங்குகின்ற உரைநடையும் செய்யுளுமாகும் .நூல்களின் தொகுதியும் ஆகும்.இதன்கண் இலக்கிய இலக்கணங்கள் அனைத்தும் அடங்கும் .
”செந்தமிழ் நாடே ”சந்தனப் பொதியச் செந்தமிழ் முனிவனுக்கு
செளந்தர பாண்டிய நெனுந் தமிழ் நாடனுஞ்
சங்கப் புலவரும் தழைத்தினிதிருக்கும்
மங்கலப் பாண்டி வளநாடென்ப”
என்ற நூற்பாவால் செந்தமிழ் நாட்டின் செழுமை தெரிகிறது .
முற்காலத்து பெருநாரை, பெருங்குருகு ,இசைநுணுக்கம் ,தாளவகை யோத்து.
இசைத் தமிழ் இடைக்கால நூல்களுள் மூவர் பாடிய தேவாரம் ,தமிழுக்கே உரிய பண்ணுந் திறமும் பயின்றனவாகி விளங்குகின்றன.
நாடகத் தமிழ் நூல்களுள் பரதம் , அகத்தியம் ,முறுவல், சயந்தம் ,குணநூல் ,செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் , கூத்தநூல் என்பன சங்கப் புலவர்கள் செய்த நாடகத்தமிழ் நூல்கள் .
சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் மட்டுமே பிழைத்து இன்றும் நம்மிடம் உள்ளன .
ஐவகை இலக்கணங்கள்
எழுத்து, சொல், பொருள், யாப்பு , அணி என்பன ஐவகை இலக்கணங்கள் ஆகும் .
தமிழ் நூற் பரப்பினை அறிய
1.ஆதி காலம் ,
2.இடைக்காலம்,
3.பிற்காலம்- என அறியலாம் .
ஆதிகாலம் கி.பி. 102 க்கு முற்பட்ட காலம் .தலைச்சங்கம் , இடைச்சங்கம் , கடைச் சங்கத்தின் முற்பகுதி இதன்கண் அடங்கும் .
முச்சங்கங்கள் குறித்து இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்பெற்றுள்ளது .
”கடலால் கொள்ளப்பட்ட மதுரையிலும், கபாடபுரத்திலும் இச்சங்கங்கள் இருந்தன என்று கூறப்பெற்றுள்ளன .
தலைச்சங்கத்தினரால் பாடப்பட்டது பரிபாடலும், முதுநாரையும் ,முதுகுருவும் ,களரியாவிரையும் ஆகும்.
அகத்தியர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெறிந்த முருக வேலும் , முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவன் தலைச் சங்க காலத்தவர்.
சங்கத்தை நிறுவியோர் காய்சின வழுதி , கடுங்கோநீறார் சங்கத்தில் கவியரங்கேறினார் .எழுதியவர் பாண்டியர் என்பவர்.
மதுரையில் அரங்கேறி கடலால் கொள்ளப்பட்ட நூல் அகத்தியம் .அகத்தியர் ,தொல்காப்பியர் இருந்தையூர்க் கருங்கோழி மோசி முதலியோர் ஆவர். .
அவர்களால் பாடப்பெற்ற கலி, குருகு, வெண்டாளி வியாழமாலை யகவல் முதலியன தொடக்க காலத்தவை .அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம் , இசை நுணுக்கம் , பூத புராணம் முதலியன .
இச்சங்கத்தை நிறுவியோர் வெண்டேர்ச் செழியன் ,,முதலாகவும் , முடத் திருமாறன் இரண்டாவதாகவும் , இவர்களுடன் கவியரங்கேரியவர் ஐவர் பாண்டியவர் ஆவர். இவர்கள் சங்கமிருந்து தமிழாய்ந்தது கபாடபுரம். அக்காலத்தேதான் பாண்டிய நாட்டை கடல் கொண்டது .
தலைச் சங்கமும், இடைச்சங்கமும், நீண்ட காலம் நடந்தன என்றும் , பலநூற்கள் இயற்றப்பெற்றன என்றும், பாவலர் பலர் சங்கத்தை ஒட்டியே வாழ்ந்தனர் .
சங்கங்கள் இருந்த மதுரையும் ,கபாடபுரமும் கடலால் கொள்ளப் பெற்றதால் அரிய தமிழ் நூல்கள் அழிந்து விட்டன என்று தெரிந்து கொள்ள முடிகிறது .
கடைச்சங்கம் மேலும், ஆரியப் பட்டவை ‘கலவியர் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரின் பத்தாவது தலைமுறையாளராகிய நீலகண்டனார் கடைச் சங்கத்தில் இருந்து தமிழ் ஆராய்ந்தார் .
சிறுமேதாவியார், சேந்தம்பூனார் ,அறிவுடையரனார், பெருங்குன்னூர்க்கிழாரும் , இளந்திருமாரனும், மதுரை ஆசிரியர் நல்லந்து வனாரும், மருதனிளநாகனார் என நாற்பத்தொன்பது பேர் என்பர் .
நானூற்று நாற்பத்தொன்பது பேர் பாடினார் என்பர். இவர்களால் பாடப்பட்டவை நெடுந்தொகை நானூறும் ,குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும் ஐங்குறு நூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கழியும், எழுபது பரிபாடலும், கூத்தும் வரியும் பேரிசையும், சிற்றிசையும் கடைச் சங்கத்தினர் தொன்னூற்றி ஐம்பது பேர்என்பர் .
இடைச் சங்க கால இலக்கண நூலாகிய தொல்காப்பியமும், கடைச்சங்க காலத்துச் செய்யப்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.
இடைக்காலம் முற்பகுதி கி.பி. 100-600 .இது கடைச் சங்கப் பிற்காலம், இக்காலத்தில் தான் சிலப்பதிகாரம் , சிந்தாமணி, மணிமேகலை . வளையாபதி, குண்டலகேசி என்ற ஐம்பெருங்காப்பியங்களும் எழுந்தன .
நீலகேசி, சூளாமணி ,யசோதரகாவியம், நாக குமாரகாவியம் ,உதயணன் கதை என்ற ஐந்து சிறு காப்பியங்களும் இக்காலத்தில் தோன்றியவை .
மாணிக்க வாசகரின் பக்தி நூல் ‘திருவாசகம்’ இந்நூல் சிவபெருமானைப் பாடியதோர் அரிய நூல். இவர் எழுதிய மற்றும் ஒரு நூல் ‘திருச்சிற்றம்பலக் கோவையார் ‘ இந்நூல் சிற்றின்ப கருத்தும் பேரின்பப் பொருளும் ஒருங்கே கூறுவதாகும்.
‘ மேரு மந்தரபுராணம் ‘என்ற சைவ நூலும், ‘திவாகரம்,’ ‘பிங்கலம் ‘என்ற நிகண்டுகளும் ‘அணியியல்’ என்ற அலங்கார நூலும் இக்காலத்து நூல்கள் .
சேர, சோழ, பாண்டியர் மூவரையும் தனித்தனியாகச் சிறப்பித்துக் கூறும் ‘முத்தொள்ளாயிரம் ‘ என்ற நூலும் இக்காலத்தவை. இந்நூலின் சில பகுதிகளே காணப்படுகின்றன .
இடைக்காலம் பிற்பகுதி கி.பி. 600 முதல் 1400 இவ்விடைக் காலத்தில் தான் சமய சரித்திர நூல்கள் எழுந்தன ….ஆழ்வார்களும், நாயன்மார்களும் தோன்றித் தத்தம் சமயங்களை வளர்த்தனர் .
திருஞானசம்பந்தர் ,திருநாவுக்கரசர் இருவரும் ஒரே காலத்தவர் .சுந்தரமூர்த்தி நாயனார் இவர்களுக்குப் பிற்பட்டவர்.
இம்மூவரும் பாடிய தேவாரப் பதிகங்கள், சைவர், சமய நூல்களைப் பன்னிரு திருமுறைகளாகத் திவ்யப் பிரபந்தங்கள் யாத்தனர். வைணவர் ‘நாலாயிரப் பிரபந்தம் ‘ எனத் தொகுத்தனர் .
கிபி 10 -ஆம் நூற்றாண்டில் எழுந்த அரியநூல் ‘கல்லாடம்’ .இந்நூல் அகப் பொருட் துறைகளை எடுத்து விளக்குகிறது .
நன்னூல், நேமிநாதம் , அகப்பொருள் விளக்கம், புறப்பொருள் , வெண்பாமாலை , யாப்பெருங்கல விருத்தி , யாப்பருங்கலங்காரிகை என்ற நூல்கள் எல்லாம் தோன்றியது இக்காலமே ஆகும்.
கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் அவைக்களத்தைச் சிறக்கச் செய்தவர்கள் கம்பர், ஒட்டக்கூத்தர் , புகழேந்தி முதலியோர் ஆவர் .
சங்க கால ஔவையாரே அன்றி இக்காலத்தும் ஓர் ஒளவையார் என்பர்.
கம்பர் பாடிய இராமாயணம் பெரிதும் மதிக்கத் தக்க நூலாகத்திகழ்கின்றது.இராமாயணத்தின் பிற்பகுதி என்று கருதத்தக்க உத்தரகாண்டத்தைப் பாடியவர் ஒட்டக் கூத்தர்.
இவர் குலோத்துங்க சோழன் மீது அகப்பொருட் துறைகளால் அமைந்த ‘கோவை’ ,’உலா’ ‘அந்தாதி ‘ நூல்களைச் செய்துள்ளார்.
புகழேந்திப் புலவருக்குப் புகழ் தருவது ‘ நளவெண்பா ‘ என்ற நூலாகும் .ஔவையார் ‘நல்வழி’, ‘நீதி வெண்பா’ என்ற நூல்களை இயற்றி உள்ளார்.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் செயங்கொண்டார் என்பவரால் இயற்றப் பெற்றது ‘கலிங்கத்துப் பரணி ‘என்ற நூலாகும்.
‘பெரிய புராணம் ‘,’ கந்த புராணம் ‘, என்ற நூல்களும் ‘வீரசோழியம் ‘ என்ற இலக்கண நூலும் இயற்றப்பட்டது .
பின்னர் திருவெண்காட்டடிகள் எனப்படும் பட்டினத்துப் பிள்ளையாரது பாடல்கள் , தண்டியலங்காரம் என்ற நூலும் இக்காலத்ததே உரையாசிரியர்கள் ஆகிய சேனாவரையர், பரிமேலழகர் ,நச்சினர்க்கினியார் அடியார்க்கு நல்லார் ஆகியோர் விளக்கிய காலமும் இக்காலமே.
பிற்காலம் கிபி 1400 க்குப் பிற்பட்ட காலம் ஆதிகாலத்தே சங்கத்தார் ஆதரவும் இடைக்காலத்தே சிற்றரசர் ஆதரவும் இருந்தன .
இவ்விருவகை ஆதரவும் அற்ற பிற்காலத்தில் குறுநில மன்னர் சிலரும் சைவ மதத்தினரும் தமிழையும் தமிழ்ப் புலவரையும் போற்றினர் .
அதிவீரராம பாண்டியரும், வரதுங்கராமபாண்டியரும் பலவகைத் தமிழ் நூல்கள் செய்தனர். ‘நிடாதம்’ ‘கூர்ம புராணம் ‘ ,காசி காண்டம் முதலிய நூல்கள் அதிவீரராம பாண்டியர் இயற்றினார் .
‘இலிங்க புராணம்,’திருகருவைப் பதிற்றுப் பத்தந்தாதி ‘முதலிய நூல்கள் வரதுங்க ராம பாண்டியர் இயற்றினார் .
இவர்களுக்கு ஆசிரியராகிய நிரம்ப வழங்கிய தேசியர் ‘சேது புராணம் ‘, திருப்பரங்கீப் புராணம்’ என்ற நூல்களை இயற்றினார் .
வில்லிபுத்தூரர் வடமொழியில் இருந்து பாரதத்தை மொழி பெயர்த்தார். இந்நூல் ‘வில்லிபுத்தூர் பாரதம் ‘என வழங்குகின்றது .
அருணகிரிநாதர் முருகப் பெருமான் மீது பக்தி கொண்டு ‘திருப்புகழ்’ என்ற நூலினைப் பாடினார் திருப்புகழ் பாசுரங்கள் சந்த நலங் கொழிப்பவை.
நல்லாப்பிள்ளை என்பவர் வில்லிபுத்தூரர் பாடல்களை இடையிடையே செறித்துஅவர் சுருக்கிக் கூறியதை பிரித்தும் விடுபட்ட கதைகளைக் கூட்டியும் 14000 செய்யுட்களில் ஒரு நூல் பாடி முடித்தார் .இந்நூல் ‘ நல்லாப் பிள்ளை பாரதம்’ என வழங்கப் பெறுகிறது .
‘திருவிளையாடல் புராணம் ‘ என்ற நூல் பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்டது
திருவாவடுதுறை ஆதினத்தவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினர். இவ்வாதீனத்தைச் சேர்ந்த அருணந்தி சிவாச்சாரியார் , உமாபதி சிவாச்சாரியார் ஆகியோரால் சைவ சித்தாந்த சாத்திரங்கள் வெளிப்பட்டன .
இம்மடத்தைச் சார்ந்த மயிலேறும் பெருமாள் பிள்ளை ‘ கல்லாட உரையும் ஈசான தேசிகர் ‘இலக்கணக் கொத்து’ உறையும், சிவஞான முனிவர் ‘சித்தாந்தமரபுகண்டன ‘ கண்டனம்’ ,’ தொல்காப்பியச் சூத்திர விருத்தி, ‘இலக்கண விளக்கச் சூறாவளி’ என்ற நூல்களை இயற்றினார் .
தருமபுரம் ஆதினத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர் ‘குட்டித் தொல்காப்பியம்’ எனப்படும் ‘இலக்கண விளக்கம்’ இயற்றினார் .
இவருதவி கொண்ட மாதைத் திருவேங்கட மன்னன் வடமொழியிற் கிருஷ்ணமிசிரன் என்பவர் ‘பிரபோத சந்திரோதயம்’ என்ற நாடகத்தை காப்பிய வடிவில் அமைத்தனர் .இது நகைச்சுவை உடைய நூல் .
சிவஞான முனிவர் செய்யுள் நூல்கள் இயற்றியும், தருக்க நூல் இயற்றியும் சித்தாந்த சாத்திரங்களுக்கு உரை வகுத்தும் இலக்கண நூல் புனைந்தும், கண்டனங்கள் வெளியிட்டும் மாணவர்கள் பலருக்குத் தமிழ் கற்பித்து விளக்கினார் .
மாணவர்களுள் சிறந்த கச்சியப்ப முனியார், தணிகைப் புராணம் , விநாயக புராணம் முதலிய நூல்கள் பாடினார். திருத்தணிகைக் கந்தப்பையருக்குத் தமிழ் அறிவுறுத்தியவர் இவரே .
இலக்கணம் சோமசுந்தரம் கவிராயர் இராமநாதபுரஞ் சென்று தமிழ்க் கல்வியைப் பரப்பினர். ‘திருக்கழுக்குன்றக் கோவை ‘ என்ற நூல் இவரால் இயற்றப் பெற்றன.
இராமநாதபுரத்தில் சேது காவலர்கள் தமிழ் மொழியை வளர்த்தனர் .அமிர்த கவிராயர் இரகுநாத சேதுபதியின் மீது ஒரு துறைக் கோவை என்ற நூலினைப் பாடினார்.
கற்பனைக் களஞ்சியம் என்று கருதப்படும் சிவப்பிரகாச சுவாமிகள் ‘பிரபுலிங்க லீலை ”’திருவெங்கைக் கோவை ‘,’நன்னெறி’ முதலிய நூல்களை இயற்றினார் .
தருமபுர ஆதினத்தைச் சார்ந்த குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் ,’ நீதிநெறி விளக்கம் ‘ என்னும் நூல்களை இயற்றினார் .
தத்துவராயறது ‘அடங்கன் முறையும் ,’பாடு துறையும்’ தாயுமானவர் இயற்றிய திருப்பாடல்களும் பக்திச்சுவை மிக்கவை.
தாயுமானவர் காலத்தவராகிய வீரமாமுனிவர் ‘தொன்னூல் விளக்கம்’ என்னும் இலக்கண நூலும் ‘தேம்பாவணி’ என்னும் காவியமும் செய்தார் .
வைணவ திவ்விய கவி என்று அழைக்கப்படும் பிள்ளைப் பெருமாள் , ஐயங்கார் சொல்லின்பமும், பொருளின்பமும் அமைய ‘ அட்டப் பிரபந்தம் ‘ என்றஎட்டு நூல்களை இயற்றினார் .
சைவ எல்லப்ப நாவலர் ‘திருவாரூர்க் கோவை’ ,’அருணாசல புராணம்’,’ அருணைக் கலம்பகம்’ முதலிய நூல்களை இயற்றினார் .
திரிகூடராசப்பக் கவிராயர் ‘திருக்குற்றாலத் தல புராணம்’ முதலிய பல நூல்களை இயற்றினார் .
இக்காலத்தில் அந்தாதி, கலம்பகம் , பிள்ளைத்தமிழ், சிலேடை, வெண்பா மாலை , பதிகம் என்ற வகைகளில் பல நூல்கள் இயற்றப் பெற்றன .
கி.பி. 19 ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை ஆதினத்தைச் சார்ந்த மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தோன்றி கணக்கற்ற நூல்களை இயற்றினார்.பலருக்குத் தமிழ் நூல்களை கற்பித்தார். தனிப்பாடல் பல இயற்றினார் .இவர் இயற்றிய நூல்களுள் ‘ திருநாகக்காரோணம் புராணம் பெரிதும் பயிலப்படுவதாகும் .
தமிழில் உரைநடை நூல்கள்
உரை நடை நூல்கள் இனி தமிழில் உரைநடை நூல்கள் தோன்றிய வரலாற்றினைக் காண்போம்
தமிழில் உரை நடை நூல் என்பது உரையாசிரியர் களாலேயே நூலுரைகளில் பயிலப்பட்டு வந்தது .
உரை நடையில் பாட்டுடைச் செய்யுளாகிய ‘பெருந் தேவனார் பாரதம்’, ‘சிலப்பதிகாரம்’ நூல்களில் உரைநடை காணப்படுகின்றது .
கி.பி.17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழில் உள்ள நடை சிறப்பாக வழங்கப் பெற்றது .
இதன் பின்னர் திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயர் ,யாழ்ப்பான ஆறுமுக நாவலர் முதலியோர் வசன நடையைப் பெரிதும் போற்றினர்.
இப்போது அச்சு இயந்திர வசதி ஏற்பட்டு பல்வேறு இதழ்களில் வெளிவருகின்றன .இவற்றின் வழியாக புதினங்கள் , சிறுகதைகள் பல வெளிவந்துள்ளன .
தமிழ் உயர்தனி செம்மொழி
நாட்டு உணர்வும் ,மொழி உணர்வும் உடையவர்கள் தாய் மொழியைக் கற்றல் மிகவும் அவசியம் .
வடமொழி, இலத்தீன் ,கிரீக்கு முதலிய மொழிகள் போல நம் தாய்மொழி ஆகிய தமிழ் மொழியும் ஓர் உயர் தனிச் செம்மொழி ஆகும் .
ஒரு நாட்டில் வழங்கும் பல மொழிகளுள் சிறந்ததொரு மொழியே ‘ உயர் மொழி’ எனப்படும்.
தெலுங்கு முதலிய மொழிகளுக்கு எல்லாம் தலைமையும், அவற்றினும் மிக்க மேதகவும் உடையமையால் தமிழ் மொழி உயர்மொழி ஆகும்.
தான் வழங்கும் நாட்டிற் பயிலும் பிற மொழிகளின் உதவியின்றி தனித்து இயங்கவல்ல ஆற்றல் உடையதே ‘தனிமொழி’ எனப்படும்.
தான் பிற மொழிகட்குச் செய்யும் உதவி மிகுந்தும் , அவை தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் இருத்தலே வழக்காறு தமிழ் மொழியின் உதவி நீக்கப்படின் தெலுங்கு, மலையாளம் முதலியன இயங்குதல் முடியாது.ஆனால்……
தமிழோ அவற்றின் உதவி இல்லாமல் சிறிதும் இடர்ப்பாடின்றித் தனித்து இனிமையில் இயங்க வல்லது. இக்கருத்து மொழி நூல் அறிஞர்கள் ஒப்புக்கொண்டு தமிழுக்கு செம்மொழி தகுதியை வழங்கி உள்ளனர்.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூயமொழியே
‘செம்மொழி’ ஆகும். இம்மொழி இலக்கணம் தமிழ் மொழியின்கண் அமைந்திருத்தல் கண்கூடு .
இடர்ப்பட்ட சொல்முடிவுகளும் பொருள் முடிவுக்களுமின்றி சொற்கள் கருதிய பொருள்களைக் கேட்டான் தெள்ளிதின் உணர வல்ல தாய்ப் பழமையான கழிந்த புதியன புகுந்து திருத்த மெய்தி நிற்றலே திருந்திய பண்பாகும் .
இது தமிழ் மொழியின் கண் முற்றும் அமைந்திருக்கிறது .
நாட்டின் நாகரிகத் முதிர்ச்சிக் கேற்ப சொற்கள் உருவாகி மொழியிலும் நாகரிக முதிர்ச்சிக் கேற்ப சொற்கள் உருவாகி மொழியிலும் நாகரிக நலம் விளைதல் வேண்டும். அவ்வாறு சொற்கள் உருவாகும் போது பிறமொழிச் சொற்கள் இன்றி தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவனவாகும் .
தமிழ் தூய மொழியும் ஆகும் .எனவே, தமிழ் செம்மொழி என்பது தமிழ்மொழி என்பது திண்ணம்.இது பற்றியே தொன்று தொட்டுத் தமிழ்மொழி கற்றறோரால் ‘செந்தமிழ்’ எனப் போற்றப் பெறுகின்றது. எனவே, தமிழ்மொழி எவ்வாறு ஆராய்ந்தாலும் ”உயர்தனிச் செம்மொழியே என்பது உறுதியாகும்