மதுசூதனா! இந்த யோகம் சம பாவனையோடு கூடியதன்று உங்களால் சொல்லப்பட்டதோ, அந்த யோகத்தினுடைய உறுதியான, நிலையான நிலையை மனதில் சஞ்சலத்தினால் நான் உணரவில்லை என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! கர்மயோகம், பக்தியோகம், தியான யோகம், ஞானயோகம் முதலிய சாதனைகளில் எல்லையாகிய சம
பாவனையைத் தான் இங்கு யோகம் என்கிறேன். இவற்றை உணர்த்தவே உயரிய எண்ணத்தைப் பெறலாம் என்கிறார் கிருஷ்ணன்.
கிருஷ்ணா! இந்த மனம் எதிலும் நிலைக்காமல் அலையும் தன்மையுடையது. புலன்களை மிகவும் கலக்கும் தன்மை உடையது. திடமானது, வலிமை பொருந்தியது. ஆகவே, அதை அடக்குதல் காற்றை தடுத்து நிறுத்துவது போன்று மிகவும் கடினமானது என நினைக்கிறேன் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! தீபத்தின் சுடர் போல மனம் சஞ்சலமானது மட்டுமன்று பால், தயிர் கடையும் மத்தைப் போல உடலையும், புலன்களையும் கடைந்து கலங்கச் செய்து கொண்டே இருக்கும் இயல்பு உடையதுதான் என்கிறார் கிருஷ்ணன்.
கிருஷ்ணா! புலன்கள் கலங்கக் கூடியவை என்று கூறினீர்கள். இங்கு மனம் கூறப்படுகிறது இதற்கான காரணத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! போக விசயங்கள் சேர்வதால் மனம் புலன்களையும் புலன்கள் மனதையும் கலக்குகின்றன.இரண்டும் சேர்ந்து புத்தியைக் கலக்குகின்றது. ஆகவே, இரண்டுமே மிகவும் கலக்கக்கூடியவை என்கிறான் கிருஷ்ணன்.
கேசவா! மனம் வலிமை பொருந்தியது என்று கூறுவதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! மனம் நிலைத்து நிற்காமல் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். புலன்களையும், உடலையும் கடைந்து கொண்டே இருக்கும்.
மதம் பிடித்த யானையைப் போல மிகவும் பலம் கொண்டதும் கூட மிகவும் மதம் கொண்ட யானையின் மீது அடிக்கடி துரட்டியினால் குத்துவதால் எவ்விதப் பயனும் ஏற்படாது. அது தான் இஷ்டப்படி தான் நடக்கும்.
இவ்விதம் விவேகம் என்ற அங்குசத்தினால் மனதை அடிக்கடி தாக்கினாலும் பலம் மிகுந்த மனம் போக விசயங்கள் என்ற திசை தெரியாத காட்டில் இருந்து வெளியே வர விரும்பாது.
கேசவா! மனம் திடமானது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! சஞ்சலமானதும் மிகவும் கலக்கக் கூடியதும், வலிமை வாய்ந்ததுமான மனம் உடும்பு போல திடமானதும் கூட
எந்த விசயத்தில் திளைக்கிறதோ, அதையே உடும்பைப் போல விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அதனுடன் சேர்ந்து அதுவாகவே ஆகிவிடும். ‘திடமானது’ என்பதற்கு இது தான் பொருள் என்கிறார் கிருஷ்ணன்.

