Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

485-வழுக்குப் பாறையில் வழுக்கி விழுந்தாலும் எழுச்சி கொண்டு எழுந்திரு.486- எண்ணம் நல்லதாக இருந்தால் நாம் எங்கு சென்றாலும் சிறப்பு. 487-அர்த்தம் உள்ள வாழ்க்கை பொதுநலம் அவதியான வாழ்க்கை சுயநலம்.488- வீட்டை தாங்குவது தூண் என்றால் மனிதனை தாங்குவது நட்பு.489- முட்புதரும் நடக்க நடக்க பாதையாகும் முயலும் செயலே வெற்றி. 490-தள்ளிப் போடும் நேரம் சேலை முள்ளில் பட்டுக் கிழிந்ததாகும்.

Read More

35-தேன் உண்ணும் முருகன் நீயே !          இனிக்கும் தமிழும் நீயே !வான் புகழும் முருகன் நீயே !        வழிகாட்டும் துணை நீயே !மான் மயில் காடு நீயே!         மலர் செடியும் நீயே! நான் மாடக் கூடல் நீயே!             நாழி கிணறும் நீயே!

Read More

479- செய்யும் தொழில் சுகம் ஆனால் செயல் வெற்றியை நோக்கி. 480-புத்தகம் சுவாசம் ஆனால் சொர்க்கம் பூமியில் வாழும் போதே.481-ஆற்றல் அறிவோம் அயராது உழைப்போம் வெற்றிக்  கனியைப் பறிப்போம். 482-தயக்க மில்லா முயற்சி இருந்தால் தரணியில் உன்னை உயர்த்தும்.483- பணம் கொடுத்தால் பகை வரும் பார்த்து நடந்தால் நலம்.484- பேச்சு குறைவாக இருப்பின் செயல் வீச்சு அதிகமாக இருக்கும்.

Read More

34-திருநீர் அணிந்து இருப்பவன் நீயே!         திரு உள்ளம் நீயே! கருவில் இருந்து காப்பவன் நீயே !         கருத்தில் நிற்பவன் நீயே !உருவில் பாலகனாய் இருப்பவன் நீயே!             உதிரத்தில் ஓடுபவன் நீயே !தருவே தரணிபுகழ் முருகன் நீயே !     தடைகள் அகற்றுபவன் நீயே!

Read More

473- நாவில் தேன் பழம் மணம் சேர்ந்தால் இனிது நாக விஷம் கொடிது.474- நட்பு கொண்டு சந்தன மணமானால் நாளும் நட்பு வளரும். 475-இசை ஓசை எழுந்து தலைவி இயக்கம் கலைமகள் தானே! 476-ஈக்கு இடம் கொடுத்த போது நோய்க்கும் இடம் கிடைத்தது.477- ஐயம் நம்மை அரவணைத்த போது நம்பிக்கை விலகிப் போனது.478- முயற்சி உறுதி அணிகலன் ஆனால் தளர்ச்சி தானாக மறையும்.

Read More

33-துறவு பூண்டு சென்றவன் நீயே.      துதித்து போற்றுபவன் நீயே!உறவு துறந்து தனித்தவன் நீயே!       தனித்து சாதித்தவன் நீயே !மறம் விளைந்த மண் நீயே !        மனித பண்பும் நீயே! வறம் போக்கி காப்பவன் நீயே !        வாழ வைப்பவன் நீயே!

Read More

467-உழைப்பு  முயற்சியை முன்னே வை உயர்வு வந்து படியாகும்.468-இலட்சியப் பயணத்தில் சிறகுகள் விரியும் இலக்கியமாக சிந்தனையை மாற்று. 469-பிறர் வாழ வழிகாட்டும் போது தான் வாழ தடம்.470- உழைப்பு விதையை உரமிட்டு வளர்க்க கனியாய் வரும் வெற்றி. 471-திறந்த வானமாய் மனம் இருந்தால் திறக்கும் கருவூலம் மனம்.472- படிப்பின் பயன் அறிவு வளரும் பணம் கவலை தரும்.

Read More

32-கொடுக்கும் கொடைக் கரம் நீயே !   கொடி உடையவன் நீயே! எடுத்துக் காட்டாய் இருப்பவன் நீயே !    எழுத்து ஆணியும் நீயே! கடுவழி சென்று வளர்த்தவன் நீயே!        கருத்தில் நின்றவன் நீயே !தடுத்து தடை நிறுத்துபவன் நீயே!     தயவு காட்டுபவன் நீயே!

Read More

461-காலமாற்றம் இயற்கையின் இயல்பு உணர்ந்து மாற துன்பம் தூர.462-வண்டி ஓட அச்சாணி அவசியம் வாழ்க்கை ஓட பொறுமை.463- திறமை என்பது எல்லோருக்கும் பொது திறவு கோல் இலக்கு. 464-நாகரீகம் என்பது நடை பிணமாக்கும் நம்பிக்கை அணையா தீபம்.465- புன்னகை பூ முகத்தில் பிறக்க புதுப் பொழிவாய் அன்பு. 466-இல்லாமை கவலை தரும் மனநிறைவு உற்சாக ஊற்றாய் வரும்.

Read More

31-கூர் வேல் உடையவன் நீயே!         கூடாநட்பு தடுப்பவன் நீயே! சீர் அணி வரியும் நீயே!          சீரான வாழ்வும் நீயே! வீர் கொண்டு எழுந்தவன் நீயே !     விண்ணவர் காத்தவன் நீயே !தீர்க்க தரிசனம் தருபவன் நீயே !       தீமை அழிப்பவன் நீயே!

Read More