முக்கண்ணன் மகனே முருக வேலே முருகா என்றால் வருவாய்! தக்கார் தடைகள் அகற்றும் முருகா தங்கத் தேரில் வருவாய்! எக்கர் இடத்தும் அன்பு செய்து ஏற்றம் தர வருவாய்! சிக்கார் உன்னிடம் சிக்குண்ட பின் சிங்கார மயிலில் வருவாய்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
தண்டபாணி அருளாலே தடைகள் விலகும் தரம் உயர்த்திப் பார்ப்பான்! மண்டப படிகளில் மக்கள் கூட்டம் மனசார வாழ்த்திப் பார்ப்பான்! உண்மை உள்ள இடத்தில் எல்லாம் நன்மை செய்து பார்ப்பான்! திண்மை கொடுத்து உறுதி கொடுத்து திறமை வளர்த்துப் பார்ப்பான்.
33-கடிவது மற அன்று விடுமுறை என்பதால் தூங்கிக் கொண்டு இருந்தாள் கலா. கலாவை அம்மா எழுப்பினாள். பத்து மணி ஆகிவிட்டது. எழுந்திரு என்றாள் சுபா. கலா முழித்துக் கொண்டாள் என்றாலும் எழுந்திருக்க மனம் வரவில்லை. அதைக் கண்ட சுபாவிற்கு கோபம் வந்துவிட்டது. எழுந்திரு என்று தண்ணீர் எடுத்து வந்த முகத்தில் தெளித்தாள் சுபா. ஏன் அம்மா! இப்படி செய்தீர்கள் என்று அழ ஆரம்பித்துவிட்டாள் கலா. எழுந்தவளுக்கு, அம்மா மீது கோபம்… கோபமாக வந்தது. இப்படி அன்றைய… விடுமுறை ஒருவரை ஒருவர் கடிந்து பேசுவதில் கழிந்து விட்டது. ஏன் தான் விடுமுறை விட்டார்கள்? என்று நினைத்தாள் கலா. பலரின் வீடுகளில் நடப்பதை கண்ட ஔவையார் “கடிவது மற” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்.
படிப் படியாய் ஏறி ஏறி முருகன் அடி பணிய!அடி அடியாய் எடுத்து வைத்து அலகு குத்தி மகிழ! முடி முடியாய் எடுத்து முருகனுக்கு மொட்டை போட்டு மகிழ! இடி இடியாய் இன்னல் வந்தாலும் முருக வேல் காக்கும்.
குடம் குடமாய் தண்ணீர் ஊற்றி குமரனை குளிக்க வைக்க! மடம் மடமாய் கட்டி வைத்து பக்தரை காண வைக்க! தடம் தடம்மாய் பார்த்து பார்த்து தடைகள் போக வைக்க! வடம் வடமாய் இழுத்து மக்கள் முருகன் தேர் இழுக்க
வான் மழையாய் வரும் முருகா வந்து மக்களைக் காப்பாய்! தேன் சுவையாய் தித்திக்கும் முருகா தென்றல் காற்றாய் வருவாய்! நான் என்ற அகந்தை குறைத்து நலம் செய்ய வருவாய்! மான் போல் துள்ளி வரும் முருகா உன்னைக் கண்டால்…
கரும்பு சார் போல் இனிப்பவனே கந்த வேலே சண்முகா! துரும்பாய் நினைத்து முருகா உன் பதமலர் பணிய வேண்டும்! இரும்பு போல் உறுதியான முருகா இதயத்தில் இடம்தர வேண்டும்! சருகு போல் காய்ந்தாலும் முருகா சன்னதியில் உரமாக வேண்டும்.
அழற்சி சிவன் நெற்றிக் கண்ணில் பிறந்த போது ஆனந்தம்! அழகு முருகனுக்கு அலங்காரம் செய்து அழகு பார்ப்பது ஆனந்தம்! சுழலும் பூமியில் சுழன்று சுற்றி அருள் கொடுப்பது ஆனந்தம்! கழனி விளைய கதிர் அறுக்க உழவன் முகத்தில் ஆனந்தம்.
நாக்கில் நான் உன்னைப் பாட நல் அருள் புரிவாய்! வாக்கினில் நீ வந்து முருகா நல்ல சொல் சொல்வாய்! போக்கிடும் நீதான் முருகா உன் வீடு வருவதே புகலிடம்! பூக்கள் பறித்து தொடுத்து உன் மேனியில் போட்டு மகிழ்வேன்.
உந்தன் அருளை என்ன என்பேன் உச்சி குளிர்ந்து நின்றேன்! சிந்தனை சிறகாய் பறந்து முருகன் சின்னத் தாழ் பணிந்தேன்! சந்தனம் பூசி சன்னதி வந்தேன் சங்கடம் தீந்து போனது! கந்தன் அருள் ஞானம் கிடைக்க கருணை செய் முருகா.