Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

தேவசந்திரன் எழுதும் தொடர் கதை பார்சல்கள் உடைக்கப் பட்டன! மேலும், இந்த கரடி பொம்மைகளையும் உடைத்துப் பார்க்க வேண்டும்!… அழகான கரடி பொம்மைகள் சில நொறுக்கப்பட்டன!ஆனால், எதிர்பார்த்தபடி எதுவும் இல்லை! தவறான தகவலா? இன்ஸ்பெக்டர் யோசித்தார். சாரி! தொந்தரவுக்கு மன்னியுங்கள் என்றார் இன்ஸ்பெக்டர். பரவாயில்லை சார்! நல்லதுக்குத் தான் காலமே இல்லையே! அவன் அவ்வளவு தெளிவாக சொன்னானேஇடையில் என்ன ஆயிற்று!…ஏமாந்து விட்டோமா? நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய கட்டிடம். அழகான பொம்மைகள் ஆயிரக்கணக்கில் உருவாகிக் கொண்டிருந்தன. விரைந்து வந்த அந்த கார் உள்ளே நுழைந்தது. உள்ளே சென்று நின்றது கார். காரில் இருந்து திமு திமு என்று இறங்கினார்கள்! ஒரு அறைக்குள் நுழைந்தனர். கதவுகள் மூடிக் கொண்டன! உடனே…. இருள் சூழ்ந்த அந்த அறை மெல்ல கீழே இறங்கியது. சிறிது நேரத்தில் அப்படியே நின்றது. கதவு திறந்தது! அனைவரும் ஒரு மிகப்பெரிய ஹாலில் நுழைந்தனர். சுற்றிலும் எலக்ட்ரானிக் கருவிகள். ஒரு…

Read More

உணர்வுகள் காயப்பட்டால் துயரமாக இருக்கலாம் ஆனால் காயங்களை மெல்ல பரிசுத்தம் செய்வேன் நீ ஒவ்வொரு இரவும் என்னை நினைத்தால் போதும் அந்த நீரூற்றில் உன் இதயம் மீண்டும் மலரும். எழுத்து இசைகலை மணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

நேசித்தவன் விலகினான் என்றால் சோர்ந்திடாதே அன்பு என்ற ஒன்று தவிர்த்தான் வலிக்கத்தான் செய்கிறது ஆனால் அதனை எல்லாம் உணர்ச்சி அல்ல உரையாடல் எனப்பார் நீயும் உயர்வாய் உண்மையை தாங்கும் போது. எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

பணம் இல்லாமல் வாழ்வதும் சிறுமையல்ல                      வலிமை அறம் வாழ்வதையே நான்             பாராட்டுகிறேன் நீ தர்மம் செய்தால் தேவைகள்           ஓயாமல் தீரும் பரிசுகள் இல்லையெனில் பரிபூரண        வாழ்வு இருக்கும்.            எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

39-கேள்வி முயல் கோவிந்தன் சுமாராகப் படிப்பவன். அவர்கள் வீட்டிற்கு அருகில் ஒரு ஆசிரியர் குடி வந்தார். ஆசிரியர் வீட்டை கடந்து போகும் போது கோவிந்தன் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வான். ஆசிரியரும் ஏற்றுக் கொள்வது போல் தலையை ஆட்டி புன்னகைப்பார். ஒருநாள் பாடத்தில் ஒரு சந்தேகம் வரவே, கோவிந்தன் ஆசிரியர் அழகரிடம் சென்று சந்தேகம் கேட்டான். அவரும் புன்னகையுடன் உட்கார வைத்து புரியும்படி விளக்கி கூறினார். அன்றில் இருந்து ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து நன்றாகப் படிக்க ஆரம்பித்து விட்டான் கோவிந்தன். படித்தவர் சொல்படி கேட்ட கோவிந்தன் இன்று பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கி எல்லோர் பாராட்டுதலையும் பெற்றான். படித்தவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை எப்பொழுதும் கேட்க வேண்டும் என்று ஔவையாரும் “கேள்வி முயல்” என்று கூறிச் சென்றுள்ளார்.

Read More

9- சோமாஸ்கந்த மூர்த்தி கந்தபுராணம் எந்தை சக்திகள் உயிரெலாம் ஏங்குறும் எல்லை முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவுமொன் றாகிக் கந்த னென்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன் ஏல வார்குழல் இறைவிக்கும் மெம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞான மேலுறு மிரவொடு பகலுக்கு நடுவாய் மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும். பணி படர்ந்த கயிலை மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீட்டிலிருக்கும் போது… தேவர்கள் சிலர் ஓடி வந்து நந்தி தேவரை வணங்கினர். உடனே, மகாதேவனை காண வேண்டும் என வேண்டி நின்றனர். நந்தி தேவர் இச்செய்தியே மகாதேவனிடம் கூறினார். மகாதேவனும் தேவர்களை காண விருப்பம் கொண்டு அழைத்தார். தேவர்கள் சிவனை வணங்கி மகாதேவனே! மகேந்திர புரியில் அரசு செய்யும் சூரபன்மன் என்னும் அசுரன் எங்களைக் கொடுமைப் படுத்துகிறான். வல்லமை வாய்ந்த ஓர் மகனை பெற்று எங்களின் துன்பங்களை நீக்கி அருள்…

Read More

மனைவியோ கணவனோ புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் மனம் இன்னும் காணவில்லை உன் அருமை நீ நீயாக இரு- பொறுமையே பெரிய பூசை மனது மாறும் நாள்- என் அருளினால் விடியும். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

பிள்ளைகள் பேசுவதில்லை- அதில்            வேதனை உண்டா? அவர்கள் மனம் மாறும்- நீ            அமைதியாக இரு அன்பு பாசமே அவர்கள் பக்கம்             கொண்டு போகும் தூய எண்ணங்களும் உன் அன்பும்              முடிவில் வெல்லும்.             எழுத்து இசைக்கலை மணி சி.எம். பாலகிருஷ்ணன். 

Read More

ஆலமரம் 31- வளர்த்த கடா முட்டியது வளர்த்த யானை கொன்றது முதியோர் இல்லத்தில் பெற்றோர்.32- மரம் நிறைந்த கனிகள்மாசு நிறைந்தது வீடு நிறைய பிள்ளைகள்.33- மழை வருகை மண்வாசனை உழவனின் சந்தோசம்.34- நிலவுப் பெண் வராததால் நட்சத்திர தோழிகளும் வரவில்லை அடை மழை.35- இயற்கை வெளிச்சத்தில் குடும்பத்தினர் பேசிக்கொண்டு மின்தடை.36- குளிர்ந்தது வீடு குளிர்சாதனம் இல்லாமல் மழையின் வரவால். 37- பேயாட்டம் ஆடியது மரங்கள் புயல் சின்னம்.38- தண்ணீரில் மிதந்தது வீடு மழைக்காலம்.39- கிளையில் பறவை பறவை கூட்டம் தாக்கியது வேற்றுப் பறவை.40- அன்பு பாதைக்கு அழைத்துச் சென்றது திருக்குறள்.

Read More

தாய் தந்தையர் ஆதரவு இல்லை          என்று கூறுகிறாய் ஆதரவு தந்தது மனிதன் அல்ல           கடவுள் தான் நீ வளர உனக்கு தேவைப்படும்           எல்லாம் தருவேன் அன்பு இல்லாமல் வளர்ந்தாலும் அருள்பெருகும்          வாழ்க்கை உண்டு.           எழுத்து இசை கலைமணி சி. எம். பாலகிருஷ்ணன்.

Read More