உலகம் உன்னை இழிவு படுத்துகிறதா? கவலை வேண்டாம் உன் மதிப்பை நிர்ணயிக்க இயலாது யாராலும் நீ ஒரு சிறந்த மனிதன்- என் அருளின் படைப்பு உன் நிலையை உலகம் இப்போது புரியவில்லை என்றால் பரவாயில்லை! எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
உலகம் உன்னை இழிவு படுத்துகிறதா? கவலை வேண்டாம் உன் மதிப்பை நிர்ணயிக்க இயலாது யாராலும் நீ ஒரு சிறந்த மனிதன்- என் அருளின் படைப்பு உன் நிலையை உலகம் இப்போது புரியவில்லை என்றால் பரவாயில்லை! எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
தேவசந்திரன் எழுதும் புதிய தொடர்கதை காலை நேரம் சி. ஐ. டி. ரகுவும் அவர் மகன் பாபுவும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டின் உள்ளே டெலிபோன் அலறியது! ரகு ஃபோனை எடுத்தார். எஸ்!… ரகு ஹியர்!!.. என்ன?அப்படியா? நீங்க யார்? எங்கே இருந்து பேசுகிறீர்கள்? அப்படியும் இருக்குமோ? தொலைபேசியை வைத்து விட்டார்கள். போலீஸ் நிலையம். வெளிநாடு செல்லும் விமானம் புறப்பட இன்னும் அரை மணி நேரம் உள்ளது! சார்! வண்டி ரெடி!!ம்…. கிளம்பு! ஜீப் விரைந்தது, விமான தளத்தை நோக்கி… அதே நேரத்தில் ரோட்டில் காற்றை கிழித்துக்கொண்டு ஒரு கார் வந்து கொண்டிருந்தது! ரோடு ஓரத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து சுற்றும் மற்றும் பார்த்துக் கொண்டே ஒருவன் வெளியே வந்தான்! ரோட்டை கடக்க முயன்றான்! அப்பொழுது… விரைந்து வந்த கார், அவனைக் கண்டதும் உரசிக் கொண்டு நின்றது! அவன் பயத்துடன் ஓட முயன்றான்! காரில் இருந்த துப்பாக்கி ஏந்திய…
தனிமையில் அழுகிறாய் ஆனால் என் அருகில் தான் பேசும் ஒருவரில்லை உன் மனதை நான் கேட்கிறேன் மௌனத்தில் சிதறிய வலிகள் எனது செவியில் விழும் மனதைத் திறந்து வா தயங்காதே அங்கு நான் இருக்கிறேன். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
உடல் நோயல் தவிக்கிறாய் -ஆனால் மனம் தளர வேண்டாம் நீ உன்னை நம்பினால் உடம்பும் நம்பிவிடும் மருந்தோடு பரிகாரம் நம்பிக்கையாய் அருள் உறுதி கொள் குழந்தாய் குணம் என்பது உன் ஏதிர்பார்ப்பு. எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
ஆத்திசூடி கதைகள்38-கெடுப்ப தொழிஉமாவும், லதாவும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவிகள். உமா படிப்பு, விளையாட்டு என எல்லாவற்றிலும் ஆர்வம் உள்ள மாணவி. லதா மிகவும் சோம்பல் கொண்டவள். படி, இதைச் செய் என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். எதையும் தன் முயற்சி கொண்டு செய்ய மாட்டாள். பத்தாம் வகுப்பில் முதல் மார்க்கு வாங்கி பலரின் பாராட்டுக்களைப் பெற்று, பரிசுகளும் பெற்றாள் உமா. இதைக் கண்டு பொறாமை பட்ட லதாவிற்கு கோபம்… கோபமாக வந்தது. உமா காப்பி அடித்து முதல் மார்க்கு வாங்கியதாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தாள் லதா. இதைக் கேட்ட பள்ளி ஆசிரியர் “கெடுப்ப தொழி” என்று சொல்லி சத்தம் போட்டார் லதாவை. புலவர் ஔவையாரும் இப்படிப் பட்டவர்களைப் பார்த்து தான் “கெடுப்ப தொழி” என்று சொல்லிச் சென்று உள்ளார்.
எண்ணங்கள் தூயவையாயின் வாழ்க்கை சீராகும் அவைகள் தீமை அடைந்தால் செயலும் அதேதான் தூய எண்ணம் வளர்க்க பாவம் விலகும் புனித உணர்வே புனித வாழ்வின் தொடக்கம். எழுத்து இசைகலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.
எட்டாவது உமேசமூர்த்தி கந்தபுராணம் தந்துழிஈசன் தன்னைத் தனமரும் அயனும் மாலும் வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி நந்தமது அருள தாகும் நங்கையோடு இனிது சேர்ந்தாம் முந்தையின் வேதாச் செய்கைமுற்றிடும் போதியென்றான். முன்பொரு காலத்தில் பிரம்மன் படைப்பு தொழிலை செய்ய எண்ணி நான்கு புதல்வர்களை உண்டாக்கினார். அந்த நால்வரும் படைப்புக் கடவுளுக்கு உதவாமல் தவச் செயலை நாடிச் சென்று விட்டனர். அதன் பிறகு சிருட்டிச் செயல் நன்றாக நடைபெறாததால் விஷ்ணுவை நோக்கி பிரம்மா சென்றார். விஷ்ணுவின் பாதம் பணிந்து தன் இயலாமையை எடுத்துக் கூறினார். இதற்கு உதவக் கூடியவர் சிவனே என்றும், அவரை வணங்கினால் நமக்கு உதவுவார்… என்றும் விஷ்ணு கூறினார். பின்பு விஷ்ணுவும், பிரம்மாவும் வெள்ளிமலை அடைந்து அங்குள்ள நந்தி தேவரை வணங்கிச் சங்கரரை காண வந்துள்ள விபரம் கூறினர். நந்தி தேவரும் சங்கரனிடம் சொல்ல சங்கரனும் அவ்விருவரையும் தம் அருகே வரச் சொன்னார்.…
துன்பத்தில் அழைக்கிறாய் சந்தோசத்தில் மறக்கிறாய்அறிந்து கொள் மகனே நான் என்றும் உன் அருகில்தான் நீ வந்து பேசும் நொடி எனது அருள் பெருகும் உன்னை அணைத்து கொள்கிறேன். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
நல்லதோர் நண்பனைத் தேடு அவன்தான் ஒளி தவறின் வழியில் இழுக்காமல் நிறுத்துவான் நீ அணுக வேண்டியது அறத்தை மட்டும் நட்பும், துணையும் அவனிடமே நிச்சயம். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.
