Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

பிறர் பிழையை எண்ணாதே உன் பிழை பார்த்து திருத்து பேசும் மொழியில் பாசமே ஒலியாக்கு பகைவரினும் பொறுமையுடன் எதிர்கொள் பிள்ளாய் பரிசு தரும் நேரம் நிச்சயம் வருவது. எழுத்து இசைக்களை மணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

தியானம் நிமிர்ந்த மனதிற்கு தெளிவைத் தரும் தப்பில்லை தவறை உணர்ந்தால் போதும் மன்னிப்பு என்பது இறைவனின் வழி மனம் தான் முதன்மை அதில் முருகன் வாழ்ந்திடும். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

11-உளிக்கு பயர்ந்த கல் படிக்கல்லாய் பாதையில் பணிந்த கல் சிலையாய்.12- காற்றடித்தால் பறக்கும் பஞ்சு கலங்காமல் நிற்கும் சந்தனம் உழைப்பால் உயர்வு. 13- விளைச்சல் மண் விளைந்தது நெல் விதைப்பதே அறுவடை.14- உடைகள் பட்ட கறைஉடனே துவைக்க போனது ஒழுக்கமின்மை?15- சிறுக சிறுக சேமிக்கும் தேனி சேர்த்தை எடுக்கும் மனிதன் அரசியல்வாதி.16- வானத்தில் பறவை பறக்குது தேவைக்கு உணவை உண்ணுது சேமிக்க அது மறக்குது.17- வரிசை வரிசையாய் அணிவகுப்பு கடுமையாய் உடல் உழைப்பு சேமிக்க சொல்லுது எறும்பு. 18-செடி மரமாகி உதிர்ந்து உரமாய் முதியோர் இல்லம். 19- சுத்த காற்று உள்ளே அசுத்த காற்று வெளியே காற்று போல் உயிர்.20- சோதனை என்பது துன்பமில்லை பக்குவப் படுத்தும் ஊட்டச்சத்து ஆற்றல் வெளிப்படும்.

Read More

அஞ்சாதே பிள்ளாய் தோல்வி வெற்றிக்கு                      வாசல் அழுவதை விட அடுத்தபடி                    ஏறி வா மரணமெனும் முடிவும் ஒரு பயணம்                 மட்டுமே மெய்யான வாழ்வு அருள் உணர்வோடு                   தான்.             எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

சொல்லாத இடத்தில் சும்மா இருக்கத் தெரிகவெறுப்பேதும் வந்தாலும் பொறுமையோடு வாழ அறம் எனும் நெறியில் நடைமுறையில் நட அருள் கடல் ஆழத்தில் இன்பமே கிடைக்கும். எழுத்து இசைக்கலை மணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

36-குணமது கைவிடேல் காலையில் எழுந்த மஞ்சளா தனது காலை வேலைகளை முடித்துவிட்டு. குளித்து தலையை துவட்டி முடியின் நுனியில் முடிச்சு போட்டு, மஞ்சள் பூசிய முகத்தில் குங்குமம் வைத்தவள்… பூஜை அறையில் சாமி படங்களுக்கு பூக்களை வைத்து வணங்கி தானும் சிறு துண்டு பூவை தலையில் வைத்துக் கொண்டாள். விநாயகர், முருகன் பாடல்களை பாடிய படி வணங்கினாள். பக்கத்தில் அமர்ந்து இவற்றைக் கவனித்துக் கொண்டு இருந்த செல்லப் பெண் மீனு… அம்மா! ஏன் சாமி கும்பிட வேண்டும். என மழலை மாறாத குரலில் கேட்டாள். குட்டி தங்கம். மீனு! செல்லம் என்று தூக்கி மடியில் வைத்துக் கொண்ட மஞ்சுளா! சாமி கும்பிடுவதால் மனம் சாமிகிட்டே ஒருநிலைப்படும். மனம் அமைதியாகி சந்தோசமாக இருக்கும். நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதால் சுவாசத்திற்கு நல்லது. சாம்பிராணி, ஊதுபத்தி காட்டுவதால் நல்ல வாசனை இறைவனுடன் நம்மை இணைக்கும். இப்படி தினம் செய்யும் போது மகாலட்சுமி நம் வீட்டில் நித்திய…

Read More

தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை சிக்னல் கிடைத்தவுடன் உடைந்த கப்பலின் வயிற்றுப் பகுதியில் இருந்து சிறிய படகுகள் கிளம்பின! படகுகளில் போதை தரும் கஞ்சாவும், இளம் பெண்களும் நிறைந்திருந்தனர்! திடீர் என்று எல்லோரும் கூச்சலிட்டனர்! ஐயோ ஆ…ஆ போலீஸ்…. என்று… போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். படகில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டனர். எல்லோரும் கரைக்கு கொண்டுவரப்பட்டனர். கரையில் பூபதி கையில் விலங்குடன் நின்றிருந்தார். அருகில் லதா அழுதபடி நின்று இருந்தாள். கைது செய்யப்பட்ட பெண்கள் எல்லோரும் பாதுகாப்பு இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். போலீஸ் நிலையத்தில்! மிஸ்டர் பூபதி உங்க மனைவியை ஏன் மறைச்சீங்க! பூபதி கடந்த கால நிகழ்சிகளை கூறினார். அன்று ஒரு நாள்…! கணவனின் புத்தக அறைக்குள் மீனா நுழைந்தாள். அங்கே… டைகர், ஆழகான பெண்கள் நல்ல விலைக்கு போகிறார்கள். நம் ஆட்களை பரவலாக அனுப்பு! என்றார் பூபதி.எஸ் பாஸ்! இந்த உடைந்த கப்பலை மாற்றி கோட்டையாக…

Read More

சூழ்நிலை மாற்றம் பயம் தரக்கூடும் உனது மனதிலே உறுதி இருந்தால் போதும் தொலைவிலா இருக்கின்றேன் அழைப்பு வந்தாலே தோளோடு தோளாய் உனக்கென்றே தோன்றுவேன். எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

ஆறாவது உமா மகேச மூர்த்தி உமா தேவியாரே உலகத்தின் அன்னையாக இருக்கிறாள். இறைவனின் திருக் குறிப்பின்படி ஒவ்வொன்றினையும் செய்து வருகின்றாள். நெருப்பில் இருந்து வெப்பத்தைப் பிரிக்க முடியாதது போல, நீரில் இருந்து குளிர்ச்சியை பிரிக்க முடியாதது போல, உமாதேவியை சிவத்தில் இருந்து பிரிக்க முடியாது. உமாதேவி கருணை உருவம் கொண்டவள். ஐந்து வகைச் செயல்கள் ஆற்ற ஐந்து வகை பேதங்களாகத் தோன்றுகிறாள். பராசக்தி, ஆதி சக்தி, இச்சா சக்தி,ஞான சக்தி, கிரியா சக்தி என்பனவாகும்.1- பராசக்தி என்பவள் பரமசிவத்தில் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டவள் ஆகும்.2- ஆதிசக்தி பராசக்தியில் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டவள் ஆகும். 3- இச்சா சக்தி ஆதி சக்தியின் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டதாகும். 4-ஞானசக்தி இச்சா சக்தியின் ஆயிரத்து ஒன்று கூறு கொண்டதாகும். 5-கிரியாசத்தி ஞான சக்தியின் ஆயிரத்துஒன்று கூறு கொண்டதாகும். இதில் ஆதிசக்தி என்பவள் ஆன்மாக்களுக்குச் சுகத்தை கொடுக்கின்றாள். இச்சா சக்தி என்பவள்…

Read More

அழுக்காறு கைவிடு அகம்பாவம் போகட்டும் அன்புடன் பேசு அவன் உன்னை நேசிப்பான் அறிந்தவன் தவறுகள் மன்னிப்பான் என்றும் அறிவு என்பதுதான் நன்றாக நடப்பது. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்

Read More