Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

கண்ணால் முருகனைக்       கண்டாலும்- உள்ளம் காட்சி  கண்டு        பயனடையும் மூக்கால் திருநீற்றை    சுவாசித்தாலும்-முருகன் சுவாசத்தை தள்ளியே       போடுவான்

Read More

ஆத்திச்சூடி கதைகள் 34-கிழமை படவாழ் கந்தனுக்கு நாலு பெண் குழந்தைகள். அவனுக்கு ஆடு, மாடு மேய்க்கும் தொழில்தான் தெரியும். அரேபியாவில் ஒட்டகங்களை பார்த்துக் கொள்ள ஆட்கள் எடுத்ததை தெரிந்துகொண்ட கந்தனும் விசாரித்தான். அவனையும் அழைத்துப் போவதாக சொன்னார்கள். அவன் மனைவி உறவினர்கள் பண உதவி செய்தார்கள். அப்படியும் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. யாரிடம் கேட்கலாம் என எண்ணிய கந்தனுக்கு அவர்கள் ஊர்க்காரர் சோமன் நினைவுக்கு வர அவரிடம் கேட்டான். அவரும் சொல்வதாக சொன்னார். அவர் மனைவியிடம் பேசி ஆலோசித்தார். இவனை நம்பி நான்கு பெண் குழந்தைகள் இருக்கிறது, கொடுத்து உதவினால் அந்த குடும்பமே முன்னுக்கு வந்துவிடும் என எண்ணியவர்கள்.முழுமனதாக பணத்தை கொடுத்து உதவினார்கள். அவர்கள் செய்த உதவியால் அந்த குடும்பம் நல்ல மேன்மையை அடைந்து விட்டது. தனக்கு என சேர்க்காமல் பிறருக்கு உதவும் போது அந்த மன நெகிழ்வால் அங்கு ஒரு சொந்தம் உண்டாகிறது.அதைத்தான் ஔவை பாட்டியும் “கிழமை படவாழ்”…

Read More

தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை காது வலிக்கிறது லதா! ஏதாவது மருந்து இருக்கிறதா? இருங்கள்! பார்த்து வருகிறேன் என்றாள் லதா. நவீன் பையில் இருந்த சிறிய கருவியை காதில் பொருத்திக் கொண்டான் அதில்… சாப்பிட மாட்டேன் என்கிறார்கள். கட்டாயப்படுத்தி கொடு என்றார் பூபதி. பாஸ்! போலீஸ் நடவடிக்கை பற்றி ஒன்றும் தெரியவில்லையே! டைகர்! போலிஸ் அமைதியாக இருப்பதால் ஆபத்து அதிகம் சற்று விழிப்பாக இரு! கவனமாக நமது ஆட்கள் இருக்கிறார்கள். அதோடு, நேற்று கன்னிகுடா எக்ஸ்பிரசில் ஒரு சி.ஐ.டி வருவதாக தகவல் கிடைத்தது! ஆளை அமுக்கி விட்டாயா?இல்லை பாஸ், தகவல் தாமதமாக கிடைத்தது. ஆள் வந்த சுவடி தெரியவில்லை. சரக்குகள் தயார் ஆகிறதா, டைகர்! ஆமாம் பாஸ்! எல்லாம் ரெடி! சரி!எச்சரிக்கையாக இருங்கள்! ஓவர். உரையாடல் முடிந்தது. நவீன் சிரித்தபடியே காதில் உள்ள கருவியை எடுத்தான். என் வேலைகள் எல்லாம் சுலபமாக நடக்கின்றன! வலையை பக்குவமாக பிரிக்க வேண்டியதுதான்! எந்த…

Read More

நான்காவது சதாசிவ மூர்த்தி சதாசிவ மூர்த்தி படிக நிறம் கொண்டவர். இவர் சடை முடி தாங்கிய தலையைக் கொண்டவர். ஐந்து திருமுகங்கள் உடையவர். சதாசிவ மூர்த்தி ஈசானம், தற்புருடம், வாமம், அகோரம், சத்தியோசாதம் முதலாகிய ஐந்து திருமுகங்களுடன் எழுந்து அருளிஇருப்பவர். பத்து கரங்களை உடையவர். வலது கையில் சூலம், கட்வங்கமும், வாளும், பீஜாபூரகமும், அபய முத்திரையுடன் இருக்கிறார். இடது கையில் நாகம், பாசம், பரதம், மணி, நீலோற்பலத்துடன் இருக்கிறார். ஈசான முகத்தில் இருந்து இருபத்தெட்டு ஆகமங்களை அருளச் செய்தார். 1-காமிகம்,2-யோகசம், 3-சித்தியம்,4-காரணம், 5-அசிதம்,6- தீப்தம், 7-சூட்சுமம்,8- சஹசிரம், 9-அம்சுமான்,10-சுப்ரபேதம்,11- விஜயம்,12-நிசுவாசம்,13-சுயம்புவம், 14-ஆக்கிநேயம்,15- வீரம், 16-கௌரவம்,17- மகுடம், 18-விமலம்,19-சந்திரஞானம் 20-முகப்பிம்பம், 21-புரோத்கீதம், 22-லலிதம்,23- சித்தம், 24-சந்தானம், 25-சர்வோத்தமம், 26-பரமேஸ்வரன்,27-கிரணம், 28- வாதுளம் எனப்படுகிறது. சிவ ஆகமங்களுள் முதலில் கூறிய பத்தும் சிவ வேறுபாடுகள் ஆகும். அடுத்து உள்ள பதினெட்டும் உருத்திர பேதங்கள் ஆகும். “வேதமோ டாகம மெய்யாம் இறைவன்நூல் ஓதும் பொதுவுஞ்சிறப்புமென் றுன்னுகநாதன்…

Read More

உலகைச் சுற்றியே                    வலம்- வந்து பழத்தை  வாங்க                    வந்தமுருகன் உமா        பதியைச்                  சுற்றி- பெற்றான் மூலக்   கணபதி                கணேசன்

Read More

கார்த்திகை பெண்களின் பிள்ளையவன்- வானத்தில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டமவன் ஆறுமகன் ஒன்றாய் ஆனஅவன்- அன்னை அணைக்கும் பார்வதி அன்புமகன்

Read More