Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

2-இலிங்கேற்ப மூர்த்திபிரம்மாவிற்கு 2000 சதுர்யுகம் ஒரு நாள் ஆகும். அவர் நாள் கணக்குப் படி துயிலச் சென்றார். புயல் வெள்ளம் தோன்றி கடல் பெருக்கல் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் அழிந்தது. திருமால் ஒரு ஆல் இலையில் மேல் குழந்தை வடிவில் நித்திரை செய்தார். முனிவர்கள் திருமாலை வணங்கினர். துதிப் பாடல் கேட்டு விழித்த திருமால் பழைய உலகை தேடத் தொடங்கினார். அது பாதாளத்தில் அமிழ்ந்து இருந்ததைக் கண்டார். வராக உருக் கொண்டு பாதாளம் சென்று தனது கொம்பினால் குத்தி எடுத்து வந்து முறைப்படி நிறுத்தியவர் பாற்கடலில் படுத்து யோக நித்திரையில் இருந்தார். ஆயிரம் சதுர்யுகம் கழியப் பிரம்மா இரவு காலம் நீங்கி, பகல் காலம் தொடங்கக் கண்விழித்து உலகை பார்த்தார். தேவர்கள், மனிதர்கள், செடி, கொடிகள் முதலியவற்றை படைத்தார். பூலகங்களையும், தேவ உலகங்களையும் திரட்டி இந்திரனை அரசர் ஆக்கினார். திருமால் யோக நித்திரையில் திருப்பாற்கடலில் இருப்பதைக் கண்டு எழுப்பினார் நீ…

Read More

அலை    கடலும்               வணங்கி- வரும் மலை      மகளும்                 காட்சிதர தலை    வணங்கி                ஆசி- பெற உலைக்  களமாய்                மனமுருகும்.

Read More

திருச்செந்தூர்   சூரன்             சம்ஹார -விழா வரும்பக்தர்  கூட்டம்                   கண்டால் கருணை  கந்தன்                      மனம்- புரியும் தரு    கற்பகமாய்              வளரும்.

Read More

33-காப்பது விரதம் நகர்புறத்திற்கு தள்ளி இருந்த ஒரு பகுதி முள் செடிகளும், புதர்களும் மன்றியிருந்த இடம். அந்தப் பகுதியில் இடம் வாங்கி போட்டு இருந்தார்கள். வீடு கட்டலாம் என எண்ணி வாஸ்து பூஜைகள் செய்து வீடு கட்ட ஆரம்பித்து விட்டார்கள் மனோவும், ஈஸ்வரியும். பெயரில் மட்டும் ஈஸ்வரி அல்ல! பக்தியுடன் இருப்பதிலும் ஈஸ்வரி தான். அவர்கள் வீடு கட்டும் போது சல்லிகள், செங்கல் எடுக்கும் போது அடியில் குட்டி பாம்புகள் பத்துக்கும் மேல் இருக்கும்… அதைக் கண்ட வேலை ஆட்கள் பாம்பை அடிக்க கட்டைகளைத் தூக்கி வந்தார்கள். அதை கண்ட ஈஸ்வரி அவர்களை அடிக்க வேண்டாம் என தடுத்தவள். வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி அனுப்பி விட்டாள். மூன்று மணி நேரம் சென்றவுடன் சென்று பார்த்தபோது அங்கு ஒரு பாம்பு குட்டி கூட இருக்கவில்லை. வேறு எங்கோ சென்று விட்டது. அவள் மட்டும் தடுக்கவில்லை என்றால் அத்தனை குட்டி பாம்புகளையும் கொன்று…

Read More

அட்டாட்ட விக்கிரக லீலை ஐந்து முகச் சிவமாம் சிவனும், ஆறுமுகச் சிவமாம் முருகனும் ஒன்றே என்று கூறும் 64 திருமேனிகள். கலியுக ஆண்டு 500இல் நிகழ் விளம்பி வருடத்தில் பாம்பன் சுவாமிகளால் அருளப்பட்டது. தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி, ஆயுள் விருத்தியுடன், சர்வார்த்த சித்தியும், முக்தியும் வாய்க்கும். எனவே, 64 திரு மேனிகளை காண்போம். 1-இலிங்கமூர்த்தி மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்கள் அற்றது லிங்கம். லிங்கம் நிறுவப்பட்ட பீடமே ‘சக்தி’ உருவமாகும். மேலே, உள்ள லிங்கம் சிவரூபம் ஆகிய ஞான உருவமாகும். சிவன் எழுந்தருளி உள்ள தேகமாகும் இந்த தேக லிங்கமே பரமசிவன். சிவலிங்கத்தின் வட்டமாக இருக்கும் பாகம் ருத்ர பாகம். கீழ்புற நான்கு மூலைகளும் பிரம்ம பாகம். லிங்கம் பொருத்தப்பட்ட பகுதியில் எட்டு மூலைகள் திருமால் பாகம் ஆகும். ஓம் பிரணவம் அ, உ, ம் என்பதாம். அ-சிவம்,உ -சக்தி,ம்-பரம்.…

Read More

திரியும் தயிரில் உள்ளது பலபொருள் உன்னுள் உலகமே இயக்கமாய்! விரிந்து பரந்த உலகின் உயிர்கள் பிறப்பும் இறப்பும் ரகசியமாய்! தெரிந்து கொள்ள முடியாத சக்தி பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி! பிரிந்து போகும் உயிர் கூட ஆத்ம தரிசனமாய் காலடியில். முருகனின் ஆத்ம தரிசனம் படித்த அனைவருக்கும் முருகப்பெருமானின் நல்லாசி கிடைக்கட்டும். ஓம் சரவணபவ இன்று சஷ்டி விரதம் முருகனுக்கு அரோகரா.

Read More