Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

நாக்கில் நான் உன்னைப் பாட நல் அருள் புரிவாய்! வாக்கினில் நீ வந்து முருகா நல்ல சொல் சொல்வாய்! போக்கிடும் நீதான் முருகா உன் வீடு வருவதே புகலிடம்! பூக்கள் பறித்து தொடுத்து உன் மேனியில் போட்டு மகிழ்வேன்.

Read More

உந்தன் அருளை என்ன என்பேன் உச்சி குளிர்ந்து நின்றேன்! சிந்தனை சிறகாய் பறந்து முருகன் சின்னத் தாழ் பணிந்தேன்! சந்தனம் பூசி சன்னதி வந்தேன் சங்கடம் தீந்து போனது! கந்தன் அருள் ஞானம் கிடைக்க கருணை செய் முருகா.

Read More

31-அனந்த லாடேல் வாசு தினமும் பள்ளிக் கூடத்திற்கு தாமதமாகவே வருவான். சரியான நேரத்திற்கு வர வேண்டும் என ஆசிரியர் தினமும் சொன்னாலும், தாமதமாகவே வருவான். உன் பெற்றோரை அழைத்துக் கொண்டு வா! என ஆசிரியர் ஒரு நாள் சொல்லிவிட்டார். அம்மாவிடம் சென்று தயங்கி…. தயங்கி நின்றான் வாசு. என்ன…. என மகனை அழைத்து விசாரித்தாள் அமுதா. அம்மா…. நான் பள்ளிக் கூடத்திற்கு தாமதமாக போவதால் பெற்றோரை அழைத்துக் கொண்டு வரச் சொல்லிவிட்டார்கள். நாளைக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு தான் வரவேண்டுமாம் என்றான் வாசு. வாசு என்ற அமுதா! தூக்கம் என்ற சோம்பல் அம்மா, அப்பா மேல் கோபம் வந்தது. இன்று ஆசிரியர் அழைத்து வரச் சொன்னதும், உனக்கே ஒரு தயக்கம் வருகிறது பார்த்தாயா என்றாள் அமுதா! வாசும் மௌனமாக அமர்ந்து இருந்தான். இனியாவது காலையில் எழுந்து நேரத்தில் கிளம்பு எல்லாம் சரியாகிவிடும். நாளைக்கு அப்பாவும், நானும் வருகிறோம் என்றாள் மகனின் தலையை…

Read More

கூர்கொண்ட வேலால் சூரனை வென்றாய் கூத்தன் மகனே முருகா! வேர் பலா போல தித்திப்பாய் வேண்டும் வரம் தருவாய்! சீர் போல சிறப்பு தந்து சீரான வாழ்வு தருவாய்! தேர் ஏறி வருவாய் முருகா மக்கள் குறை போக்க.

Read More

கதியென நம்பியவர்க்கு ஒளி காட்டுவாய் கந்தன் அருள் கூட்டுவாய்! சதி செய்யும் கூட்டத்தை வேலால் முருகன் சம்காரம் செய்வான்! நதி போல ஓடி உழவர் உழைக்க வழி செய்வான்!மதியில் வந்து மனதில் நின்று மங்கல வாழ்வை தந்திடுவான்.

Read More

இல்லத்தில் என்றும் நீ இருக்க இன்பம் நிறைந்து நிலைத்திடும்! அல்லல் படும் பக்தர் கண்டு அன்னை போல் காத்திடுவாய்! வல்லபம் தந்து அருள் செய்வாய் வளம் தந்து வாழ்ந்திடுவாய்! நல்லதே நினைத்து நாளும் சிறக்க நல்ஒளி காட்டி அருள்வாய்.

Read More

வரம் பெற்ற தவம் முருகா வலம் வந்து சேர்ந்தது! கரம் பட்ட பின் முருகா கருணை வந்து சேர்ந்தது! மரம் வெட்ட வளரும் முருகா புறம் வெட்டஅடி சேர்ந்தது! சரம் உள்ள வரை முருகா சரண கோசம் கேட்டது.

Read More

கௌளி சொன்ன வாக்குப் பழிச்சது முருகன் அருள் கிடைத்தது! மௌனம் காத்து இருந்ததால் மனம் இறங்கி அருள் கிடைத்தது! கௌரி கௌமாரி மகனே முருகா அன்னை அருளும் கிடைத்தது! மௌலி தரித்த முருகா உன் திருவடி அருளும் கிடைத்தது.

Read More

இனிது உன் நினைவே இனிது முருகன் நிழலே இனிது! புனிதமான மனம் இருப்பது இனிது புறம் பேசாமை இனிது! கனிந்த பழச் சாறு இனிது ஞானப் பழமே இனிது! பனித்துளி பட்ட மலர் இனிது மலர்ந்த முகமலர் இனிது.

Read More

உழைக்க உழைக்க உயர்வு வரும் உணர்ந்து நீயும் உழைத்திடு! அழைக்க அழைக்க அன்பு வரும் அருளைத் தர வந்திடுவான்! தழைக்க தழைக்க குழை வரும் வாரிசை அவன் தந்திடுவான்! புழையிட புழையிட மூங்கில் கம்பின் இசையாய் முருகன் வந்திடுவான்.

Read More