Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

30-அறனை மறவேன் உச்சி வெயில் எண்ணெய் தேய்க்காத பறந்த வெள்ளை முடி. அழுக்கு படிந்த வேஷ்டி, சட்டை அணிந்து கையில் தடியை பிடித்துக் கொண்டு தள்ளாடி… தள்ளாடி வந்த வயதானவர். எதிர் பாராத நிலையில் தடியை ஒரு கல்லின் மேல் வைக்க நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார்.சாப்பிடாமல் இருந்து இருப்பார் போலும் விழுந்த வேகத்தில் மயக்கம் ஆகிவிட்டார். இதைக் கண்ட தெருவோர தள்ளுவண்டி கடைக்காரர் ஓடி வந்து தூக்கி உட்கார வைத்தார். அவரிடம் இருந்த தண்ணீரை எடுத்து வந்து முகத்தில் தெளித்து குடிக்க கொடுத்தார். சாலையில் போனவர்கள் சிலர் வந்து அவர் ஓரமாக உட்கார வைக்க உதவினார்கள். தள்ளுவண்டி கடைக்காரர் ‘டீ’யும் பண்ணும் வாங்கி வந்து சாப்பிட கொடுத்தார். சாப்பிட்ட வயதானவர் தன் நிலைக்கு வந்தார். எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சாப்பிட கொடுத்த தள்ளுவண்டி காரரைப்… பார்த்து நன்றி தம்பி, வெயில், தாகம், பசி தடுமாறிவிட்டேன். என்றவர் மெதுவாக…

Read More

விதி என்று சும்மா இருந்தால்      சுகப் பட மாட்டார்! கதி என்று சும்மா இருந்தால்      காலம் கடந்து போகும்! மதி என்று மார் தட்ட       மடமை ஆகிப் போகும்! அதி  காரம் கொண்ட வேலவா     அறிவு தந்து காத்திடு.

Read More

வேல் போன்ற கூர்மை கொண்டு புத்தி கூர்மை வேண்டும்! பால் முருகன் அருள் பெற்று தாழ் பணிய வேண்டும்! கால் தொட்டு நாளும் வணங்க காலம் அருளவேண்டும்! வால் பட்டு தூய்மை ஆகி வளம் பெறுக வேண்டும்.

Read More

சிக்கல் தீர்க்கும் சிங்கார வேலா சிரமம் போக்கி அருள்வாய்! தக்கம் கொண்டேன் உன் மேல் தடைகள் தகர்க்க வருவாய்! பிக்கல் பிடுங்கு இல்லாமல் உன்னை நினைக்க ஆற்றல் தருவாய்! பக்கம் வந்து பாதம் தொட பக்குவம் எனக்குத் தருவாய்.

Read More

நெற்றியில் பிறந்த வேல் முருகா நிறைவைத் தரும் மாமருகா!வெற்றி தரும் கந்த வேலா விளக்கு தீபத்தில் வருபவனே! சுற்றி வருவேன் சுகம் தருவாய் சுமையை குறைத்து அருள்தருவாய்! பற்றிக் கொண்டேன் பாத அடியை பரிவு காட்டி அருள்வாய்.

Read More

தாமரையில் அமர்ந்த தங்கத் தாமரையே தடகத்தில் எழுந்த முருகா! சாமரம் வீசி வளர்த்த பெண்கள் சாமத்தில் வரும் நட்சத்திரங்கள்! தாமதம் இன்றி நலன் செய்ய தரணியில் பிறந்த முருகா! கோமாதா போல் பிறரை காக்கும் கோல மயில் முருகா.

Read More

கண்ணால் நீ பார்த்தால் போதும் கருணை பொங்கி வருமே! வண்ண மயிலில் ஏறி வந்தால் வாழ்த்து ஒலி வருமே! திண்ணக் கரத்தில் ஆசி தந்தால் திறமை வந்து சேரும்! கண்ணியம் காக்க சக்தி தருவான் சக்தி பால முருகன்.

Read More

சீட்டுக் கவி கேட்டு மகிழ சிறுவனாக வருவாய் நீ! சிட்டுக் குருவி போல பறந்து சிந்தை மகிழுந்து நெகிழ்வாய்! ஆட்டுவிக்கும் ஆண்டவன் நீயே உன் அருளை கொடுத்து காப்பாய்! மாட்சி தந்து மனம் நெகிழ்ந்து ஆட்சி செய்ய வருவாய்.

Read More

நாட்டு நலனே தன் நலனாக நட்பு காட்டி வருவாய்! பாட்டு பாடி ஆடு மேய்த்து சிறுவன் ஆக வருவாய்! காட்டு செடிகள் காக்க வேண்டி குன்றில் போய் அமர்ந்தாய்! நாட்டுப் பழம் நல்ல தென்று நாவல் பழம் தருவாய்.

Read More

காற்றுப் போல எங்கும் வருவாய் காக்கும் கடமை உணர்ந்து! நாற்றுப் போல நட்டு வைப்பாய் நல்லா வளர வேண்டி! ஊற்றுப் போல ஊரி வருவாய் உயிர்கள் வாழ வேண்டி! சேற்றில் கூட கால் வைப்பாய் உழவன் வாழ வேண்டி.

Read More