Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

ஊமையை பேச வைத்து கவிதை பாட வைத்த முருகா! சீமைக்குப் போன செந்தில் ஆண்டவா எல்லையைக் கடந்த முருகா! ஆமை போல அடக்கி ஆள மனபலம் தரும் முருகா! உமையவள் அருளும் கிடைத்து விட்டால் உலகில் வேறு என்ன வேண்டும்?

Read More

சேவை செய்தால் செய்வது தெரியாமல் ஆனந்தம் வந்திடும் முருகன்! பாவை உனக்கு சேவகம் செய்ய பாக்கியம் பெற்றேன் முருகா! தேவை இவ்வுலகில் இல்லை முருகா தேர்ந்தெடுத்தேன் பாத மலரடி! கோவைப் பழயிதழ் சிரிப்பில் உந்தன் பாதம் பணிந்தேன் முருகா.

Read More

தீபச் சுடர் மெல்ல எரிந்து பிரகாசிப்பது போல் முருகா! ஞாபகச் சுடர் மெல்ல வந்து ஞான பழமாகும் முருகா! கோபம் கூட குறையாமல் வந்தால் பார்வை பட்டு பறந்தோடும்! சாபம் கூட நிவர்த்தி ஆகி சகல பாக்கியமும் வந்திடும்.

Read More

அலகு குத்தி ஆடிப் பாடி    வருப்பவர் ஒரு பக்கம்! திலகம் இட்டு காவடி எடுத்து    வருபவர் ஒரு பக்கம்! வலம் வந்து சரணம் பாடி     வருபவர் ஒரு பக்கம்! பலம் பெற்று வரம் பெற்று     வருபவர் ஒரு பக்கம்.

Read More

மறைந்தும் நிலைக்கும் அருள்பெற்ற சித்தர்கள்       சித்து செய்வது திருவிளையாடல்! நிறைந்த மனதில் நினைவில் வந்து        நிசத்தைக்  காட்டும் பித்தர்கள்! குறைந்த வயதே ஆனால் கூட       குன்றில் எழுந்து அருளியவனே! மறையா வாழ்வை சித்தர்க்கு தந்து        மனம் மகிழும் சித்தனே.

Read More

28-அழகலாதன செயேல் கோபியும், மதனும் கோயிலுக்கு சென்றார்கள். அன்று வெள்ளிக்கிழமை கூட்டமாக இருந்தது. வரிசையில் நின்றவர்கள். வரிசை நீண்ட தூரமாக இருந்தது. அபிசேக பூசை முடிந்து திரை போட்டு சாமிக்கு அலங்காரம் செய்து கொண்டு இருந்ததால் வரிசை நகரவில்லை. கோபி அமைதியாக நின்றான். மதனுக்கு பொறுமை இல்லை. பக்க கம்பியில் உட்காருவான் பின் எழுந்து நிற்பான். வரிசையைப் பார்ப்பான். இன்னும் போக வில்லையே என முணுமுணுப்பான் இப்படி அமைதி இல்லாமல் நின்றான். மதன் தவிப்பை புரிந்து கொண்ட கோபி. மதன் சாமியை கும்பிட வந்துவிட்டோம் அமைதியாக இரு. இதோ வரிசை நரக ஆரம்பித்து விட்டது என்றான். அப்பாடா! என்று மூச்சு விட ஆரம்பித்த மதன் நடக்க ஆரம்பித்தான். சில இடங்களில் அமைதியாக இருப்பது ஒழுக்கம் ஆகும். அதை மதிக்காமல் நடக்கக் கூடாது. என்பதை ஔவைப் பாட்டி “அழகலாதன செயேல்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

Read More

எத்தனை எத்தனை பேர் உன் அருள் பெற்று வாழ்ந்தவர்! அத்தனை அத்தனை பேர் வாயும் உன் பெயர் உச்சரிக்கும்! எத்தனை எத்தனை முறை என்று அளவிட்டு சொல்ல வில்லை! பித்தனை பித்தனைப் போல் தான் பிதற்றி புலம்பி வாழ்ந்தனர்.

Read More

வாழையடி வாழையாக வாழவைக்கும் முருகா வாசனை மலராய் மணப்பவனே! ஏழையின் வீட்டிலே தீபமேற்றும் முருகா ஏழ்மையை போக்கி வாழவைப்பவனே! கோழையாய் இருப்பவர் உன் அருளால் கோமான் ஆக்க வல்லவனே! தாழை மணம்போல் மணம் வீசவைத்து தரணி போற்ற வைப்பவனே.

Read More

தேவ சந்திரன் எழுதும் உடைந்த கப்பல் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர். நவீன், இன்றே புறப்படுங்கள் உங்களுக்கு வேண்டிய மற்ற குறிப்புகளையும் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்ஐ.சி. நன்றி சார் என்றான் நவீன். கன்னிகுடா செல்லும் எக்ஸ்பிரஸ் தன் முழு ஆற்றலை காட்டி ஓடத் துவங்கியது. அக்காவை சந்திக்கலாம் கடிதத்தில் எழுத முடியாத, அப்படி என்ன விஷயம்! உன் அத்தான் நடவடிக்கை சரியில்லை! நேரில் வந்து செல். என்று கடிதத்தில் எழுதி இருந்தது. புகைவண்டி ஓடிக்கொண்டிருந்தது. பெண்கள் என்றால் எல்லோரும் ஒன்று தான் அக்கா மட்டும் விதிவிலக்கா என்ன? காலை நேரம், புகைவண்டி கன்னிகுடா ஸ்டேஷனுக்குள் வந்து நின்றது. நவீன் இறங்கி நடந்தார்! கன்னிகுடா போலீஸ் நிலையத்தில், நவீன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இன்ஸ்பெக்டர் ரவியின் பொருட்கள் எங்கு உள்ளன நான் பார்க்க வேண்டும் என்றார். எஸ் சார்! வாங்க காட்டுகிறேன், என்று அழைத்துச் சென்றார். போலீஸ் நிலையத்தில்……

Read More

காட்சி உள்ள இடத்தில் அமர்வாய் கண்டு களித்து மகிழ்வாய்! மாட்சி கொண்ட முருகா மனம் நெகிழ்ந்து வணங்கி நிற்போம்! தாட்சண்யம் கொண்ட முருகா பக்தரை காத்து என்றும் அருள்வாய்! சாட்சி இதற்கு வேண்டாம் சன்னதியில் சரணம் அடைந்தால் போதும்.

Read More