நஞ்சு விதைத்தாலும் நல்லதே நடக்கும் நாசம் நலிந்து போகும்! பஞ்சு போல மனம் லேசாகும் பரந்த மனம் கிட்டும்! மிஞ்சி எதுவும் நடக்காது முருகன் வேல் இருக்கும் போது! மஞ்சு கிடைக்கும் முருகா உன் அருளால் எதிர்த்து நிற்க.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
பந்த பாச உறவு என்றாலும் பாழும் கிணற்றில் தள்ளிவிடும்! உந்தன் பாச உறவு மட்டும் உயர்ந்த நிலையை அடையும்! கந்தன் காலை பற்றிய பின்பு கால பயம் இல்லை! சந்தனமாய் மணக்கும் சாந்தம் வந்து சரண கோசம் பாடும்.
தீய எண்ணம் உடையவர் வந்தால் தீயில் பொசுக்கி விடும்! தூய எண்ணம் உள்ளவர் அருகில் வரவே அஞ்சி விடும்! மாய வலையில் விழ வைப்பவரை மண்டியிட்டு ஓட வைக்கும்! சாயம் எல்லாம் வெளுக்க வைத்து சகதியில் அமுக்கி விடும்.
சோதனை வந்தால் வரட்டும் என்று வரமாக ஏற்றுக் கொள்ளும்! வேதனை வந்தால் நெஞ்சம் தாங்கி நிம்மதி பெற்று விடும்! சாதனை செய்யும் சக்தி கிடைத்து சங்கடம் நீங்கி விடும்! போதனை செய்யும் அறிவு பெற்று போதிக்க வைத்து விடும்.
27-வஞ்சகம் பேசேல் பாலுவும், மதனும் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவர்கள். இருவரும் நன்றாக படிப்பார்கள். பக்கத்து… பக்கத்து வீடு என்பதால் நட்புடன் இருந்தார்கள். பாலுவிற்கு பந்து விளையாடுவதில் விருப்பம். அதனால், பள்ளியில் பந்து விளையாடும் குழுவில் சேர்ந்து பயிற்சி எடுத்து போட்டிகளில் கலந்து கொண்டான். பாலுவின் விடாமுயற்சி விளையாட்டில் உள்ள ஆர்வம் பல பரிசுகளையும், பதக்கம், விருதுகளை வாங்கித் தந்தது. மதனுக்கு விளையாடுவது பிடிக்காது. பாலு முதலில் மதனையும் விளையாட கூப்பிடுவான். பாலுவை கிண்டல் செய்வான். வேறு மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு புகழ்வது போல் இகழ்வான். பாலு முதலில் நண்பன் தானே என்று கண்டு கொள்ளவில்லை. பாலு மாநில அளவில் சென்று விளையாட ஆரம்பித்த போது… மதன் மனதில் வஞ்சக எண்ணத்தை வைத்துக் கொண்டு பேச… மதனா இப்படி பேசுகிறான் என்று பாலுவிற்கு கஷ்டமாக இருந்தது. அவன் வீட்டிற்கு வந்தவுடன் பாட்டியிடம் சொல்லி அழுதுவிட்டான். பரவா இல்லை உனக்கு பிடித்த விளையாட்டை…
பக்தி என்ற தீ பிடித்தால் மனமெல்லாம் பற்றிக் கொள்ளும்! முக்தி கிடைக்கும் வரை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளும்! சித்தி பெற்று சிரம் தாழ்ந்து சிந்தை நிறைந்து விடும்! புத்தி தெளிந்து புவி மறந்து நேசம் பிறந்து விடும்.
சித்திரையே வருக வருக முதன்மை என்ற அகரமே தமிழ்! முருகன் என்ற வெற்றியே தமிழ்! முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்! முடியும் என்ற நம்பிக்கையை தமிழ்.உருக்கம் என்ற அன்பே தமிழ்! உறுதி என்ற வேரே தமிழ்! உயர்வு என்ற கனியே தமிழ்! உழைப்பு என்ற வேர்வையே தமிழ்.நல்வினை என்ற தவமே தமிழ்! நல்லறம் என்ற ஒழுக்கமே தமிழ்!நன்மை என்ற மேன்மையே தமிழ்!நட்பு என்ற நட்சத்திரமே தமிழ். பரிதி என்ற ஒளியே தமிழ்!பரிசு என்ற கொடையே தமிழ்! பரீட்சை என்ற ஆராய்ச்சி தமிழ்! பண்பு என்ற பரிவே தமிழ்.அகல் என்ற விளக்கே தமிழ்! அகக்கண் என்ற ஞானமே தமிழ்! அடித்தளம் என்ற திடமே தமிழ்! அடக்கம் என்ற அறிவே தமிழ்.விழிப்பு என்ற தெளிவை தமிழ்! விளைவு என்ற முதிர்ச்சியே தமிழ்! விருத்தி என்ற சித்தியே தமிழ்! தமிழ் புத்தாண்டே வருக வருக.
அசையும் பொருளில் எல்லாம் முருகா அசைந்து ஆடி வருவாய்! இசைக்கும் இசையில் எல்லாம் முருகா இன்னிசை ஆக வருவாய்! திசை எல்லாம் திகட்டாத தமிழாய் நிறைந்து நீ வருவாய்! பசை கொண்டு பக்தரை காக்க வடிவேலன் பறந்து வருவான்.
தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை உடைந்த கப்பல் இன்ஸ்பெக்டர் கையில் துப்பாக்கி சுழன்றது. துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டாக்கள் டைகர் படகை துளைத்தது. நடுக்கடலில் இரண்டு படங்களுக்கும் இடையே தீப்பொறி பறந்தது. அப்போது இன்ஸ்பெக்டர் ரவி தன் கையை உதறினார் ஆ…அம்மா! அம்மா!என்ற அலறலுடன் டைகர் படகில் இருந்தவன் சாய்ந்தான். நெஞ்சில் இருந்து ரத்தம் கொட்டியது. டைக்கரின் படகு இன்ஸ்பெக்டரின் படகை நெருங்கியது. போராடிக் களைத்த நேரத்தில் இன்ஸ்பெக்டரின் படகில் தாவி ஏறினார்கள். என்ன அண்ணே! பரிசை கொடுத்து விடலாமா? என்றான் ஒருவன். பொருடா! என்ற டைகர் அட்டகாசமாக சிரித்தான். அந்த நேரத்தில்… அம்மா! பூபதி பங்களாவில் லதா அலறியபடி சாய்ந்தாள். வேலைக்காரி ஓடி வந்தாள். லதாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். லதா கண்களை திறந்தவள், கத்தி குத்து, துப்பாக்கி சண்டை என புலம்பினாள். சப்தம் கேட்டு பூபதியும் வந்தார். என்னம்மா லதா என்றார் பூபதி. கடலில் படகுகள் சண்டை…
வானம் பொழிந்து வாழ்ந்து சொல்லும் உந்தன் சீடன் ஆனதால்! கானம் பாடி மகிழ வைக்கும் உந்தன் பக்தை ஆனதால்! சான்றோர் நட்பு கிடைத்து விட்டது உந்தன் ஆசி கிடைத்ததால்! தானம் செய்யும் மனம் தந்தாய் சரணம் என்று பணிந்ததால்.
