ஆறு போல ஓடும் முருகா ஆறுதல் சொல்ல வருவாய்! ஏறு மயில் ஏறி வருவாய் ஏழையை காக்க வருவாய்! கூறு கொண்ட வேல் முருகா எதிரியை தாக்க வருவாய்! மாறு பட்ட கருத்தை கூட மதித்து காக்க வருவாய்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
உறுதி கொண்டு உணர்வு கொண்டு உள்ளம் நெகிழ வேண்டும்! குறுமுனி அகத்தியர் சித்த வைத்தியம் சிறப்பு பெற வேண்டும்! சிறுதுளி வெள்ளம் அணை நிறையும் அன்பு பார்வை வேண்டும்! இறுதி வரை உன் அருள் இணைந்தே இருக்க வேண்டும்.
சரணம் சரணம் சரண கோசம் சன்னதி பட்டு எதிரொலிக்கும்! வரணும் வரணும் வரணும் முருகா வந்து அருளைத் தரணும்! தரணும் தரணும் தரணும் முருகா தந்து அருளைத் தரணும்! மரணம் மரணம் மரணம் வரை மனதில் நிற்க வேண்டும்.
பாவலர் பாவடி நீயே முருகா பாமரர் துணையே முருகா!காவடி தூக்கி பாடியே வருவர் காவி உடை உடுத்தியே! சாவடி உள்ள இடத்தில் தங்கி சன்னதி வந்தே சரணடைவர்! சேவடி பணிந்த பக்தர் கண்டு சேயாய் காப்பாய் முருகா.
அகத்தில் உன்னை நிறுத்தினால் முருகா ஆனந்தம் பெருகுதே முருகா!நிகரில்லா உன்னை தொழுதால் முருகா நிம்மதி பெருகுதே முருகா! அகரத்தில் எழுந்த தமிழே முருகா அகத்தில் இனிக்குதே முருகா! உகரத்தில் எழுந்த உயிரே முருகா உபதேச குருவே முருகா.
29-இளமையில் கல் மீனுக்குட்டி நாளைக்கு பள்ளிக்கூடம் போகப் போரா….. நல்லா படிக்கணும், அழுகாமல் சமத்தா இருக்கணும் என்றால் அம்மா. என் பொண்ணு எப்பவும் சமத்து தான். நல்லா படிப்பா, அழுகாமல் சமத்தா இருப்பா என்றார் அப்பா. புது துணி, புது பை, புது புத்தகம் எல்லாமே புதுசா இருப்பது போல் பள்ளிக்கூடமும் உனக்கு புதுசு தான் நல்லா படிக்கணும் என்றாள் பாட்டி. எதுக்கு படிக்கணும் அம்மா என்றாள் மீனா. நம்ம அறிவை வளர்த்துக் கொள்ள, பேச, பழக, வேலைக்குப் போக இப்படி எல்லா வற்றிற்கும் கல்வி அவசியம் மீனா என்றவள். “சின்ன வயதில் சொல்வது மனதில் ஆழமாக பதிந்து விடும். அவர்களுக்கு கல்வி கற்பது தான் வேலை.”அதை இளம் வயதில் கற்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இப்படி எல்லோரும் உதவுவார்கள். படிப்பதும் எளிது என்றால் அம்மா. அப்ப நானும் சமத்தா, பள்ளிக்கூடம் போய் நல்லா படிப்பேன் என்றால் மீனா. என்…
இமைப் பொழுதும் நீங்காமல் என் நெஞ்சில் நிற்கும் முருகா!சுமை ஆக இல்லை என்றும் சுகமாக இருக்கும் முருகா! எமை ஏவும் தலைவா முருகா இட்டபணி செய்வேன் முருகா! தீமை நீக்கி நல்லதே செய்ய நாளும் அருளும் முருகா.
இமைப் பொழுதும் நீங்காமல் என் நெஞ்சில் நிற்கும் முருகா!சுமை ஆக இல்லை என்றும் சுகமாக இருக்கும் முருகா! எமை ஏவும் தலைவா முருகா இட்டபணி செய்வேன் முருகா! தீமை நீக்கி நல்லதே செய்ய நாளும் அருளும் முருகா.
புறம் சொல்ல சொல்ல துன்பமே புத்துயிர் பெற வேண்டின்! நிறம் தரும் ஒளி போல ஒருநிலை பெற வேண்டும்!சிறந்த செயல் செய்ய நினைத்து சிந்தை உயர வேண்டும்! விறவி கரிக்கட்டை ஆனால் கூட கந்தன் அடிசேர வேண்டும்.
தேவ சந்திரன் எழுதும் உடைந்த கப்பல் அடுக்கியிருந்த சேலையில் இரண்டு குறைந்திருந்தது என்ன லதா என்று ஒன்றும் தெரியாதவர் போல் அருகில் வந்தார் நவீன்.வந்து…. என்று இழுத்தாள் லதா. சிற்றன்னையின் சேலையில் இரண்டை காணவில்லை. அதுதான் பயமாக இருக்கிறது என்றாள் லதா. என்ன சொல்றே லதா என்றான் நவீன். வந்து… இரண்டு மூன்று நாளைக்கு முன்னால் கூட, கடலில் யாரோ ஒருத்தனை சில பேர் கத்தியால் குத்தினாங்க நான் பார்த்தேன். என்ன! லதா, சற்று விவரமாக சொல்லு என்றான் நவீன். இருவரும் பேசிக் கொண்ட லதா அறைக்கு வந்தனர். இவள் சொல்வதும் நான் தேடுவதும் ஒன்றுதானோ! நான் பார்த்தவைகளை இதில் எழுதி இருக்கிறேன். என்று லதா தனது டைரியை கொடுத்தாள்.அதில்… லதாவின் டைரியை புரட்டினான் நவீன். அவன் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்தது. லதா டைரி என்னிடம் இருக்கட்டும். அது சரி! மற்றவர்கள் டைரியைப் படிக்கலாமா? படிக்க கூடாது மற்றவர்கள் டைரியை ஆனால்…
