தேவ சந்திரன் எழுதும் உடைந்த கப்பல்
அடுக்கியிருந்த சேலையில் இரண்டு குறைந்திருந்தது
என்ன லதா என்று ஒன்றும் தெரியாதவர் போல் அருகில் வந்தார் நவீன்.
வந்து…. என்று இழுத்தாள் லதா. சிற்றன்னையின் சேலையில் இரண்டை காணவில்லை. அதுதான் பயமாக இருக்கிறது என்றாள் லதா.
என்ன சொல்றே லதா என்றான் நவீன்.
வந்து… இரண்டு மூன்று நாளைக்கு முன்னால் கூட, கடலில் யாரோ ஒருத்தனை சில பேர் கத்தியால் குத்தினாங்க நான் பார்த்தேன்.
என்ன!
லதா, சற்று விவரமாக சொல்லு என்றான் நவீன்.
இருவரும் பேசிக் கொண்ட லதா அறைக்கு வந்தனர். இவள் சொல்வதும் நான் தேடுவதும் ஒன்றுதானோ!
நான் பார்த்தவைகளை இதில் எழுதி இருக்கிறேன். என்று லதா தனது டைரியை கொடுத்தாள்.
அதில்…
லதாவின் டைரியை புரட்டினான் நவீன். அவன் முகம் மகிழ்ச்சியால் பிரகாசித்தது.
லதா டைரி என்னிடம் இருக்கட்டும்.
அது சரி! மற்றவர்கள் டைரியைப் படிக்கலாமா?
படிக்க கூடாது மற்றவர்கள் டைரியை ஆனால் இது….
இந்த புத்தம் புதிய டைரியை நான் தானே பிரட்ட வேண்டும்!
ம்… விடுங்கள் யாராவது வரப்போகிறார்கள்.
இவளிடம் நிறைய விஷயங்கள் இருக்கும் போல் தெரிகிறது.
லதா எனக்கு இந்த புது ஓட்டை கப்பலைச் சுற்றி காட்டேன்.
சரி கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குங்க… கூட்டிப் போகிறேன்!
மறுநாள் கப்பலின் உள்ளே நவீன் கண்கள் ஆராய்ந்து கொண்டே வந்தன!
லதா என்ன இது?
ஒரு பெட்டியை காலால் தள்ளிவிட்டார்,நவீன்.
அப்பொழுது…
டேய் பேசாமல் போக மாட்டாய்.
காதில் விழாதது போல அந்தப் பெட்டியை எடுக்க குனிந்தார் நவீன்.
தம்பி! உன்னைத்தான் சும்மா சொன்னா ஏராதோ?
நவீன் சற்றென்று நினைத்தார்!
ஏன் அண்ணே! ரொம்ப கூலா இருக்கீங்க… இருவருக்கும் இடையே சண்டை மூண்டது!
அண்ணே! போதுமா? இல்லை இன்னும் வேணுமா?
கும்பிடறேன்! விட்டு விடு…!
என்றவனிடம்…
ஏதாவது சுளுக்கு இருந்தா சொல்லு நிமிர்த்தி விடுறேன்!
ஐயா விட்டாலே போதும்!
லதா ஓடி வந்த தடுத்தாள்! அத்தான்! போதும் விடுங்க!
உடைந்த பெட்டியில் இருந்து செல்ல பொட்டலங்கள் சிதறின…
அத்தான் இவை என்ன… விதைகளா?
இவ்வளவும் கஞ்சா! இப்பொழுது ஒன்றும் செய்யக்கூடாது! சேர்த்து வளைக்க வேண்டும் என எண்ணினான் நவீன்.
ஆமாம்! லதா!ஆள் கொல்லும் விதை!
இதைப் பற்றி பிறகு விளக்குகிறேன்.சரி மற்ற பகுதிக்கு செல் என்றான் நவீன்.
ஏன் நீங்களே வம்பு சண்டைக்கு போகிறீர்கள்.
சண்டையார் போட்டது கொஞ்சம் கை, கால் பயிற்சி அவ்வளவுதான் என்றான் நவீன்.
நவீனும், லதாவும் சுற்றி வந்து ஓரிடத்தில் நின்றனர். அவ்வளவு தான் கப்பல் என்றாள் லதா.
வெளியே நின்று பார்ப்பதற்கு பெரிய கப்பல் மாதிரி தெரியுது. அவ்வளவுதானா!
கப்பலின் ஒரு பகுதியைத்தான் காட்டுகிறார்கள். மற்ற பகுதியில்….
லதா உங்க அப்பா பற்றி என்ன நினைக்கிறாய்?
என்ன அத்தான் திடீர் என்று கேட்கிறீர்கள் என்றாள் லதா.
ஒன்றுமில்லை சோர்வா இருந்தாரே என்று கேட்டேன்!
சரி வீட்டுக்கு கிளம்பங்கள்!
பூபதி,கப்பல், கடத்தல், கொலை சரியாகத்தான் வருகிறது!
வீட்டில்…
பூபதி, நவீன், லதா மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது…
பூபதியின் கையில் உள்ள கடிகாரத்தில் விட்டு விட்டு சிறு ஒளி தெரிந்தது.
நவீனும் அதை கவனித்தான்!
லதா, அத்தானுடன் பேசிக் கொண்டிரும்மா! இதோ வந்து விடுகிறேன் என்றவர். எழுந்து சென்றார் பூபதி.
தொடரும்
