29-இளமையில் கல்
மீனுக்குட்டி நாளைக்கு பள்ளிக்கூடம் போகப் போரா….. நல்லா படிக்கணும், அழுகாமல் சமத்தா இருக்கணும் என்றால் அம்மா.
என் பொண்ணு எப்பவும் சமத்து தான். நல்லா படிப்பா, அழுகாமல் சமத்தா இருப்பா என்றார் அப்பா.
புது துணி, புது பை, புது புத்தகம் எல்லாமே புதுசா இருப்பது போல் பள்ளிக்கூடமும் உனக்கு புதுசு தான் நல்லா படிக்கணும் என்றாள் பாட்டி.
எதுக்கு படிக்கணும் அம்மா என்றாள் மீனா.
நம்ம அறிவை வளர்த்துக் கொள்ள, பேச, பழக, வேலைக்குப் போக இப்படி எல்லா வற்றிற்கும் கல்வி அவசியம் மீனா என்றவள்.
“சின்ன வயதில் சொல்வது மனதில் ஆழமாக பதிந்து விடும். அவர்களுக்கு கல்வி கற்பது தான் வேலை.”
அதை இளம் வயதில் கற்க அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி இப்படி எல்லோரும் உதவுவார்கள். படிப்பதும் எளிது என்றால் அம்மா.
அப்ப நானும் சமத்தா, பள்ளிக்கூடம் போய் நல்லா படிப்பேன் என்றால் மீனா.
என் செல்லம் இல்லை! சமத்து பொண்ணு என்று தூக்கி முத்தம் கொடுத்தார் அப்பா.
புலவர் ஔவையாரும் “இளமையில் கல்” என்று சொல்லி கல்வியின் மேன்மையை உணர்த்துகிறார்.
