ஆத்திசூடி கதைகள்
43 -கௌவை யகற்று
இராமன் உயரமாகவும், குண்டாகவும் இருப்பான். அவன் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பான்.
யார் என்ன கொடுத்தாலும் வாங்கி சாப்பிடுவான். அவனை எல்லோரும் சாப்பாட்டு ராமன் எனப் பெயர் வைத்து விட்டார்கள்.
ஆரம்பத்தில் சாப்பாட்டு ராமன் என்றால் அவனுக்கு பெருமையாக இருந்தது.
நாட்கள் செல்லச்… செல்ல அவனை கேவலமாக பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டான் ராமன்.
அதற்கே! அவனுக்கு, பல வருடமானது.
அவன் மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான். இனி இவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று.
ராமன் உறுதியை உடைக்க சாப்பிட கொடுப்பார்கள்.
ராமன் தனது கொள்கையில் உறுதியாக இருந்தான்.
பிறர் கொடுக்கும் எதையும் சாப்பிடுவதில்லை. தானும் சதா சாப்பிடும் பழக்கத்தை மாற்றிக் கொண்டான்.
இப்போது ராமனை யாரும் சாப்பாட்டு ராமன் என்று கூப்பிடுவது இல்லை.
சிலருக்கு சில நேரங்களில் கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டு விடுகிறது. அதை அகற்ற வேண்டும் என்ற கருத்தை ஔவையாரும் “கௌவை யகற்று” என்று கூறிச் சென்றுள்ளார்.

