அமிழ்தம் உண்டவர் அழியாதது போல்தொன்மை மொழி தமிழ் மொழிமேகத் திரை கொண்டு மூடினாலும்சூரியக் கதிராய் கிழித்து வரும் கடல்நீர் கரித்தாலும் மேகம்உண்டுமழை நீராய் கொட்டுவது போலகடினமான மரபுக்குள் ஒளிந்து இருந்துமக்கள் வாழ வழிகாட்டும் கரும்பின் சுவை மறைந்து இருக்கும்கடித்து உண்ண இனிப்பு ருசிக்கும்பார்க்கும்போது கடினம் தருவதுபடிக்கும் போது இனிமை தரும் முட்கள் பல செடியில் இருந்தாலும்மலரை முயன்று பறிப்பது போல்கடினம் என கருதாமல் சென்றுகல்வி மலரை பறிக்க வேண்டும் ஆழமான கிணற்றில் கூட முயன்றுஅடி நீரை எடுப்பது போலமுயற்சி என்னும் ஆழம் கொண்டுஅறிவு வளர்க்க முயற்சி கொள்வோம் பாடுபட்டு உழைக்கும் நெற்றித்தண்ணீர்நிலத்தில் உரமாய் விழுவது போல்தேடித்தேடி படிக்கும் தமிழ்கோடி கோடி பலன் தரும் அன்புடன்டாக்டர் செந்தமிழ்வாணி ச மல்லிகாஔவையார் மா மன்றம்நிறுவனத் தலைவி
