Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

காலத்தால் அழியாதது கள்வரால் எடுக்க முடியாது நீரால் கரையாதது நெருப்பால் எரியாது. மனதில் இருப்பது மதிப்பை கொடுப்பது பண்பை தருவது பார் புகழ வைப்பது. கொடுத்தால் குறையாது கொடுக்க கூடுவது கண்ணாய் இருப்பது கல்வியாய் வந்தது. சூரியனைக் கண்டு மலரும் தாமரை போல்…. மாணவமாணவியரின்வளர்ச்சி கண்டு மலரும் ஆசிரியர்களே அறியாமை இருளில் இருப்பவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்கும் ஆசிரியர்கள். ஒற்றுமை விழுதுகள் வேரூன்றிதேசம் எல்லாம் பரவி உங்கள் பெயர் சொல்லும் ஆசிரியர் தினத்தில்… கண்ணனின் கானகீதத்தை குழலிலே கேட்கவும்.. குயில் கூவும் சங்கீதத்தை பாடும் குரலிலே கேட்கவும் வீணையின் சுரராகத்தை விரல் அசைவில் கேட்டிடவும் யாழின் இசை நாதத்தை தலையசைத்து கேட்கவும் சிவதாண்டவத்தை சிரம் தாழ்த்தி பார்த்திடவும் பாக்கியம் செய்த நாங்கள் பண்புடனே வந்துட்டோம். அறிவு என்னும் சுடர் விளக்கு ஏற்றி நீங்கள் மகிழ்ந்திடவே அணையா விளக்காய் நீங்கள் அனைத்தையும் கற்க நாங்கள் .ஆண்டு தோறும் வருவதுண்டு ஆசிரியர் தினம் ..அகம்…

Read More

உன்னால் முடியும்உன்னால் முடியும்.. உன்னால் முடியும்..உன்னால் முடியும்…என்று உன் ஆழ்மனதின் செவிகள் நிறையும் வரை இதை நீ உச்சரித்துஇரு..உன்னால் முடியாத செயல்களே இந்த உலகில் இல்லை. ஆம் ! நீ நம்ப மறுத்தாலும் அதுவே உண்மை உன்னால் முடியும்.யோசித்து பார்த்து இருக்கிறீர்களா? ஒவ்வொரு உயிரினத்திர்க்கும் ஒரு கட்டமைப்பு இருக்கும். ஒரு குறிப்பிட்ட எல்லை இருக்கும். ஆனால் மனிதன் மட்டும் அதில் விதி விளக்கானவன்.ஒருவன் கூர்முனை கத்தியின் மேல் குதித்து சாகசம் செய்வார். ஒருவர் கண்ணாடியையும் கடித்து விலுங்குவார்.ஒருவர் கடலையே நீந்தி செல்லுவார்.இரும்பையும் உடைப்பவர். இமையத்தையும் தொடுபவர் என்று நாம் எண்ணி பார்க்க முடியாத அளவு அற்புதங்களை நிகழ்த்துபர்கள் நம் கண்முன்னே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் விதி விலக்கானவர்கள் நாம் அப்படி இல்லையே சராசரி மனிதன் தானே என்று எண்ணுகிறீர்களா அந்த எண்ணத்தை உங்கள் அடி ஆழ்மனதில் இருந்து இப்போதே தூக்கி எறிந்து விடுங்கள்.இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு அற்புதமானவர்கள்…

Read More

அம்மாவின் கருவறையோ நெறிப் படுத்தும் அன்பு மொழியோ சிறைப் படுத்தும் வாழ்க்கை நெறியை வழியாய் சொல்ல பாட்டன்உண்டு குறளின் வடிவில் தப்பு தப்பாய் தாளங்கள் போட்டால் தரமான பாட்டு கிடைக்குமா அப்போது ?பண்பாட்டை கொஞ்சம் மாற்றி அமைத்தால் பாசமிகு குடும்பம் கிடைக்குமா அப்போது ?மண்ணை வளமாக்க வானம் பொழிகிறது மரங்கள் பிறருக்காக காய்த்து கனிகிறது இயற்கை வளங்கள் மண்ணுயிர் காக்க மெழுகாய் உருகி கொடுப்பவர் உயர்வார் விருந்து கொடுப்பது தமிழர் பண்பு உயிரை மதிப்பது மக்கள் பண்பு ஒதுங்கி வாழ்தல் விலங்கின் பண்பு கற்றதை கற்பித்தல் அறிஞர் பண்பு அகிம்சை காத்த காந்தி நெறி பாட்டிசைத்த பாரதி சுதந்திர தாகம் பொறுமை காத்த பண்பால் தானே!பெருமை தாங்கும் இந்தியராய் இன்று வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் வல்லரசு இந்தியாவிற்கு வழிகாட்டிய அப்துல்கலாம் தன்னையே வருத்தி வாழ்ந்த அன்னை தெரசா உயர்ந்து வாழ்வதும் பண்பு நெறியால்.

Read More

உயர்ந்த உணர்ச்சி உரம் போன்றது உயர்ந்த நோக்கம் விளளைச்சல் ஆகும் உயரப் பறக்கும் பறவை போல உயரிய எண்ணமே உலகில் நிலைக்கும் .கடலில் சிக்கிய படகாய் தவித்தாலும் கரையில் விழுந்த மீனாய் துடித்தாலும் நம்பிக்கை என்னும் மூச்சுக் காற்றில் மதியால் வென்றால் சிலையாய் ஆவார். தகுதி குறைவால் தன்னலம் கருதுவர் தப்பை உணர்ந்தால் தண்டனை குறையும் தகுதி உடையவரை பாராட்டும் மனிதரை தளிர் கூட பாராட்டி மகிழும். குறை உள்ளவர் நிறை கானார் இழிவாய் எண்ணும் மனம் உடையார் பிழை செய்தாரை மன்னிக்க மாட்டார் பழிவாங்கிய வீழ்ந்து போவார். தன்னை அறிய முயல வேண்டும் தரணி உயர உழைக்க வேண்டும் கடமை உணர்ந்து உயர வேண்டும் தளர்வை கிள்ளி எறிய வேண்டும்.

Read More

இவர்கள்…. இந்த நூற்றாண்டில் இளைய தலைமுறை! ஆம் !இவர்கள் இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை! இந்த நூற்றாண்டின் இளைய தலைமுறை! நாட்டை காக்க பாடுபட்டது அன்றைய தலைமுறை! உயிரினைக் காக்க பாடுபட்டது இன்றைய தலைமுறை! 40 பேர் ஓர் இடத்தில் கூடி உள்ளன் சங்கமித்து உள்ளனர் விளைவு சங்கம் அமைத்து உள்ளனர் இங்கே இவர்கள் உள்ளங்கள் சங்கமம் ஆகி உள்ளனர். இச்சங்கத்திலிருந்து பிறப்பது சண்டைகள் அல்ல !கூச்சல்கள் அல்ல !விசில் சத்தங்கள் அல்ல !ஆம் இங்கே…. இதயத்தின் துடிப்பு !உயிரின் கீதம் ! ஆம்……மழைத்துளி சேர்ந்தால் வையம் தழைக்கும் !இரத்த துளி சேர்ந்தால் மானிட உடல் தழைக்கும் இவர்கள் செய்தது 100 , 200 யூனிட் ரத்தம் கொடுத்தது இந்த இரத்த துளிகள் என்றும் நிற்கப் போவதில்லை! இலட்சமாகும் வரை ஏன் என்றால் இவர்கள் இலட்சியவாதிகள். ஆம் சிந்தியுங்கள் இந்த இலட்சியத்தில் நமது பங்கு என்னவென்று !இது ஒரு புதிய சாதனை!…

Read More

பச்சை பச்சை செடிகளைப் பார்த்து பார்த்து ரசிக்கலாம் வண்ண வண்ண மலர்களை கண்டு நாமும் மகிழலாம். உயர்ந்த உயர்ந்த மரங்களை உவகை யோடு ரசிக்கலாம் உலவும் தென்றல் காற்றுடன் உளம் மகிழ்ந்து பாடலாம். கூவும் குரலை கேட்கலாம் ஆடும் மயிலை பார்க்கலாம் பறவை பாடும் சங்கீதம் பரவசப் படுத்தும் சந்தோசம். துள்ளித் திரியும் ஆட்டையும் புல்லை மேயும் மாட்டையும் தெளிந்த ஓடை நீரையும்காத் திருந்து பார்க்கலாம். குளிர்ந்த நீரின் குளிர்ச்சியை குளித்து குளித்து மகிழலாம் கொட்டும் மழை தூரலில் நனைந்து நாமும் ஆடலாம். வான வில்லைப் பார்க்கலாம் மின்னும் மின்னலைப் பார்க்கலாம் இடிச் சத்தத்தைக் கேட்கலாம்இன்பமாய் நாம் பாடலாம்.

Read More

யானை போல் வலிமையும் மானைப் போல் நற்பண்பும் எறும்பு போல் சுறுசுறுப்பும் காகம் போல் பகிர்ந்துண்டும் வாழ்வது இனிது.சிங்கம் போல் கம்பீரமும்புலி போல் விரைவும் தேக்குப் போல் உறுதியும் தேன் போல் இனிமையுடன் வாழ்வது இனிது.குயில் போல் கூவி மயில் போல் ஆடி மந்திபோல் தாவாமல் நாய் போல் நன்றியுடன் வாழ்வது இனிது.ஆல் போல் நிலைத்து அகில் போல் மணம்வீசி வேம்பு போல் வேரூன்றி வாழை போல் பயனுற்று வாழ்வது இனிது.தங்கம் போல் மதிப்புடன் வெள்ளி போல் கருக்காமல் முத்து போல் தூய்மையுடன் வைரம் போல் ஒளிவீசி வாழ்வது இனிது.

Read More

ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும் போது நல்ல குழந்தைகள் தான். எந்த இடத்தில் யாரிடம் குழந்தை பிறக்கிறார்களோ ?அவர்கள் வளர்ப்பை பொறுத்தே! வளர்கிறார்கள். ஒரு சிலரிடம் களிமண்ணைக் கொடுத்து, ஏதாவது செய்யுங்கள் என்றால் அவரவர் எண்ணப்படி ஒருவர் பொம்மை செய்திருப்பார், ஒருவர் விநாயகர் செய்திருப்பார், ஒருவர் கட்டவண்டி செய்திருப்பார், ஒருவர் விளையாட்டு சாமான் செய்திருப்பார் இப்படி அவரவர் எண்ணப்படி அந்த களிமண் உருவம் ஆகி இருக்கும் .அது போல் தான் குழந்தையும் வசதியான வீட்டில் பிறந்த குழந்தை ஆடம்பரமான பொருளை அனுபவித்து வளரும். வசதி இல்லாமல் ஏழ்மையில் பிறந்த குழந்தை அந்த சூழ்நிலைக்கு ஏற்ப வளரும். நடுத்தர வீட்டில் பிறந்த குழந்தை அவர்கள் வளர்க்கும் விதத்தில் வளரும் இதில் ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .ஒரு வீட்டில் அக்குழந்தையின் பெற்றோர் எப்படி இருக்கிறார்களோ!அவர்களைப் பார்த்து வளரும் குழந்தை பெற்றோர்களைப் போன்றே வளர்வார்கள். ஒரு சில குழந்தைகள் மட்டுமே வேறுபட்டு…

Read More

ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் மண்ணுலகில் பிறப்பு எடுக்கின்றது. பறவை தனக்கான ஒரு கூடுகட்டி அதில் முட்டை போட்டு அடைகாக்கிறது. காற்று, மழை, புயல் இவற்றைக் கடந்து பத்திரமாக குஞ்சு வந்தால் தாய்மையில் மகிழ்ச்சி அடைகிறது. அப்பறவை உணவு சேகரித்து குஞ்சுக்கு வாயில் ஊட்டி விட்டு இறகு முளைக்கும் வரை பாதுகாத்து ,பின் தானே உணவு தேட பயிற்சி கொடுக்கிறது .ஒரு பறவையை கவனித்துப் பார்த்தால் தெரியும். சிறு பறவை என்று அற்பமாக கூட நினைப்பவர்கள் உண்டு. அதன் பண்பு தனது ஜோடி பறவையுடனே சுற்றும் கூடுகட்டும், முட்டை போடும், அடைகாக்கும் ,குஞ்சு பொரிக்கும் ,உணவு கொடுத்து வளர்க்கும், பறக்க பயிற்சி கொடுக்கும் ,முழுமை அடையும் வரை அதன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்.பின் விட்டுவிடும் .சிறு பறவை தனது வாழ்நாள் சாதனை அது .செம்மையாக செய்கிறது. காற்று புயலுக்கு முட்டை உடைந்தால், குஞ்சு கீழே விழுந்தால், அதன் பின் அதை சேர்க்காது.…

Read More

சூப்பர் ப்ளூ சந்திரன் இரவில் பூமிக்கு மிக அருகில் தெரிந்தது. இந்த முழுமதி பூர்ண சந்திரன் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் .தமிழகத்தில் மேகமூட்டத்தில் பார்க்க முடியவில்லை. அமெரிக்காவிலுள்ள மினசாவில் வீட்டிற்கு மேல் இருப்பது போன்று பூமிக்குமிக அருகில் நிலவைப் பார்த்த மகிழ்ச்சியுடன் ‘படம் ‘எடுத்து எல்லோரும் பார்த்து, நன்மையும் மன மகிழ்ச்சியும் அடைய பகிரப்பட்டது.

Read More