சித்திரையே வருக வருக
முதன்மை என்ற அகரமே தமிழ்!
முருகன் என்ற வெற்றியே தமிழ்!
முயற்சி என்ற தன்னம்பிக்கையே தமிழ்! முடியும் என்ற நம்பிக்கையை தமிழ்.
உருக்கம் என்ற அன்பே தமிழ்!
உறுதி என்ற வேரே தமிழ்! உயர்வு என்ற கனியே தமிழ்!
உழைப்பு என்ற வேர்வையே தமிழ்.
நல்வினை என்ற தவமே தமிழ்!
நல்லறம் என்ற ஒழுக்கமே தமிழ்!
நன்மை என்ற மேன்மையே தமிழ்!
நட்பு என்ற நட்சத்திரமே தமிழ்.
பரிதி என்ற ஒளியே தமிழ்!
பரிசு என்ற கொடையே தமிழ்!
பரீட்சை என்ற ஆராய்ச்சி தமிழ்!
பண்பு என்ற பரிவே தமிழ்.
அகல் என்ற விளக்கே தமிழ்!
அகக்கண் என்ற ஞானமே தமிழ்!
அடித்தளம் என்ற திடமே தமிழ்!
அடக்கம் என்ற அறிவே தமிழ்.
விழிப்பு என்ற தெளிவை தமிழ்!
விளைவு என்ற முதிர்ச்சியே தமிழ்! விருத்தி என்ற சித்தியே தமிழ்!
தமிழ் புத்தாண்டே வருக வருக.
