ஊனுறக்கம் தேவையில்லை
ஒய்வும் தேவையில்லை
வேறென்ன தான் வேண்டும்
தேவை என்பதே தேவையில்லை
காலம் செய்த பிழையா
கடவுள் செய்த விதியா
காரணமின்றி கத்தும் மனம்
கட்டுக்கடங்கா சினமும்
கணப்பொழுதில்
மாறும் மனமும்
மனித மனதை
காட்சிப்படுத்துமே
விதியென்று விட்டு விட்டு
வாழ்வை வாழ வா
கடந்த காலம் கடந்தே போகட்டும்
இறந்த நாளினை எண்ணியெண்ணி
இருக்கும் நாளினை இறக்க விடாதே
நிகழ்காலம் உனை வாவென அழைக்கிறது
ஆற்றின் போக்கிலாடும் படகாய் அல்ல
எதிர்த்து நீந்தும் மீனாகு
காலங்கள் உருண்டோடும் ஆனால்
காயங்கள் ஆறாது
அதனைக் குத்தி
ரணமாக்கிக் கொண்டே இருந்தால்...
ஆற விடு வடுவாய் இருந்தாலும்
பரவாயில்லை ரத்தக் களறியாய் மாற்றாதே..
இருளடைந்த நெஞ்சத்தில்
ஒளியேற்று
அதிலே நீயும் ஒளிவீசு..
தன்னம்பிக்கை கழுகை
மனதில் கொண்டு
நேர்மறை எண்ணத்தோடு
விண்ணைத் தாண்டி பறந்திடு
Photo by Mahima on Pexels.com
